எனது வெற்றி அதிர்ஷ்டமில்ல., என் முதல் விமானப் பயணம் இப்படிதான்: சுந்தர்பிச்சை பகிர்ந்த நினைவுகள்!

|

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது முதல் விமான பயணம் குறித்தும் தான் தற்போது இருக்கும் நிலைக்கான காரணம் குறித்தும் விவரித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டின் அன்புள்ள வகுப்பு

2020 ஆம் ஆண்டின் அன்புள்ள வகுப்பு

2020 ஆம் ஆண்டின் அன்புள்ள வகுப்பு (Dear class of 2020) என்ற நிகழ்ச்சியை யூடியூப் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியானது உலகின் சாதனையாளர்கள் தங்களின் வெற்றிக்கதைகளை அவர்கள் மூலமாகவே கூறவைக்கும் நிகழ்ச்சியாகும். யூடியூப் இந்த முயற்சியின் மூலம் உலக சாதனையாளர்கள் வெற்றிக் கதையை அவர்கள் மூலமாகவே பேச வைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பேசினார்.

சிஇஓ என்ற பதவி

சிஇஓ என்ற பதவி

தமிழகத்தை சேர்ந்த சுந்தர்பிச்சை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தனது பொறியியல் படிப்பை படித்து ஸ்டான்போரர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து, கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார். படிபடியாக முன்னேறி 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ என்ற பதவியை பெற்றார்.

ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்!ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்!

விழாவில் பேசிய சுந்தர்பிச்சை

விழாவில் பேசிய சுந்தர்பிச்சை

கொரோனா தொற்றுக்கு மத்தியில் மெய்நிகர் பட்டமளிப்பு விழாவில் சுந்தர்பிச்சை பேசிய போது மாணவர்களுக்கு நம்பிக்கையையும் அவர்களின் பொறுமையை இழக்க கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கும்

தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கும்

யூடியூப் 2020 ஆம் ஆண்டின் அன்புள்ள வகுப்பு என்ற நிகழ்ச்சியை ஒளிப்பரப்பியது. அதில் சுந்தர்பிச்சை தொழில்நுட்பத்தை பற்றிய விஷயங்கள் உங்களை விரக்தியடைச் செய்து பொறுமையை இழக்கச் செய்யும் விஷயங்களாக இருக்கலாம். ஆனால் பொறுமையை இழக்காமல் செயல்படுங்கள். உங்களின் அத்தகைய முயற்சி அடுத்த தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கும், அந்த செயல் எனது தலைமுறை கனவு காண முடியாத விஷயங்களை உருவாக்க வழிவகுக்கும் என கூறினார்.

அமெரிக்காவிற்கு விமான பயணம்

அமெரிக்காவிற்கு விமான பயணம்

சுந்தர் பிச்சை தனது உரையில், 27 ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்து விமானத்தில் பயணிக்க நேர்ந்தபோது அவர் சந்தித்த சவால்களை விவரித்து கூறினார்.

தந்தையின் ஒரு வருட சம்பளம்

தந்தையின் ஒரு வருட சம்பளம்

தான் அமெரிக்கா வருவதற்கான விமான டிக்கெட் எனது தந்தையின் ஒரு வருட சம்பளத்திற்கு சமமான தொகையாக இருந்தது. அதை செலவிட்டு பயணித்தேன். இதுவே நான் விமானத்தில் சென்ற முதல்முறை என சுந்தர்பிச்சை கூறினார்.

ஒரு நிமிடத்திற்கு 2 டாலர்

ஒரு நிமிடத்திற்கு 2 டாலர்

பயணம் செய்து கலிபோர்னியாவில் தரையிறங்கியபோது, அங்கிருந்த விஷயங்கள் நான் நினைத்தபடியே இல்லை. அமெரிக்கா மிகுந்த செலவு நிறைந்த நாடு. அங்கிருந்து வீட்டிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொள்ள ஒரு நிமிடத்திற்கு 2 டாலர் அதிகமாக செலவிட நேரந்தது.

ஆழ்ந்த ஆர்வம் தீறா ஆசை

ஆழ்ந்த ஆர்வம் தீறா ஆசை

அதுபோன்ற சூழ்நிலைய கடந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அது அதிர்ஷ்டம் என்பதையும் கடந்து தொழில்நுட்பத்தில் எனக்கு இருந்த ஆழ்ந்த ஆர்வம் தீறா ஆசை என கூறினார்.

ஹெட்போனில் பாட்டு கேட்டக் கொண்டிருந்த சிறுமி., பின்னால் பதுங்கி வந்த சிறுத்தை: அதிர்ச்சி சம்பவம்!ஹெட்போனில் பாட்டு கேட்டக் கொண்டிருந்த சிறுமி., பின்னால் பதுங்கி வந்த சிறுத்தை: அதிர்ச்சி சம்பவம்!

 கூகுள் தாய் நிறுவனமாக ஆல்பபெட்டின் சிஇஓ

கூகுள் தாய் நிறுவனமாக ஆல்பபெட்டின் சிஇஓ

2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு கூகுள் தாய் நிறுவனமாக ஆல்பபெட்டின் இயக்குநர் குழு உறுப்பினராக சேர்ந்து தற்போது அதற்கு சிஇஓ-வாக பொறுப்பேற்றுள்ளார்.

Best Mobiles in India

English summary
secret of success., its my first flight travel: Google Ceo sundarpichai

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X