அம்பலம் : மறைக்கப்பட்ட ஐபோன் அம்சங்கள்.!!

By Meganathan
|

உங்களது ஐபோனில் உங்களுக்கு தெரியாமல் பல அம்சங்கள் மறைக்கப்பட்டுள்ளன. நீங்கள் சென்ற அனைத்து இடங்களையும் பதிவு செய்யும் மேப் இருக்கின்றது. இதே போல் உங்களது ஐபோன் கருவியில் உங்களுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சில அம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்.

ப்ரைட்னஸ்

ப்ரைட்னஸ்

ஐபோனின் ப்ரைட்னஸை குறைக்க ஹோம் பட்டனை மூன்று முறை தொடர்ச்சியாக தட்டினால் போதுமானது.

டெக்ஸ்ட் ஷார்ட்கட்

டெக்ஸ்ட் ஷார்ட்கட்

குறுந்தகவல்களை டைப் செய்யும் போது சில வார்த்தைகளை பதிவு செய்தால் மீண்டும் டைப் செய்யும் போது அந்த வார்த்தையை முழுமையாக டைப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த அம்சத்தினை செயல்படுத்த செட்டிங்ஸ் -- ஜெனரல் -- கீபோர்டு -- டெக்ஸ்ட் ரீப்ளேஸ்மென்ட் ஆப்ஷனில் உங்களது ஷார்ட்கட் வார்த்தைகளை பதிவு செய்து கொள்ள முடியும். இவ்வாறு செய்த பின் நீங்கள் சேமித்த வார்த்தைகளை முழுமையாக டைப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

கீபோர்டு

கீபோர்டு

உங்களது ஐபோன் கருவியில் மொழி மாற்றம் முதல் ஜிஃப் ஃபைல்கள் வரை டைப் செய்ய பல கீபோர்டுகள் வழங்கப்பட்டுள்ளன, இவைகளை செயல்படுத்த ஐபோனின் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- கீபோர்டு -- கீபோர்டுஸ் ஆப்ஷன் செல்ல வேண்டும். இங்கு உங்களுக்கு பிடித்த கீபோர்டினை செட் செய்து கொள்ளலாம்.

டூ நாட் டிஸ்டர்ப்

டூ நாட் டிஸ்டர்ப்

இரவு நேரங்களில் ஐபோன் உங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க கருவியில் இருக்கும் டூ நாட் டிஸ்டர்ப் ( do not disturb ) ஆப்ஷனை செயல்படுத்தலாம். மேலும் நீங்கள் உறங்கும் குறிப்பிட்ட கால அளவினை மட்டும் செட் செய்யும் வசதியும் உங்களது ஐபோனில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்ட்ரோல்

கண்ட்ரோல்

உங்களது தலையை கொண்டு ஐபோனினை இயக்க முடியும். இதை செயல்படுத்த செட்டிங்ஸ் -- ஜெனரல் -- அக்செஸ்சபிலிட்டி -- ஸ்விட்ச் கண்ட்ரோல் ஆப்ஷனை எனேபிள் செய்ய வேண்டும்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

ஆப்பிள் உங்களது ஐபோனில் அழிக்க முடியாத 30 செயலிகளை இன்ஸாடல் செய்திருக்கும். இதில் பெரும்பாலான செயலிகளை யாரும் பயன்படுத்துவதில்லை. இவைகளை அழிக்க முடியாது என்றாலும் இவைகளை மறைத்து வைக்க முடியும், இதை செய்ய செட்டிங்ஸ் -- ஜெனரல் -- ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் சென்று கருவியின் பாஸ்கோடினை என்டர் செய்து உங்களுக்கு தேவையில்லாத செயலிகளை மறைத்து வைக்க முடியும்.

கஸ்டம் வைப்ரேஷன்

கஸ்டம் வைப்ரேஷன்

ஐபோன் கருவியில் தனிப்பட்ட காண்டாக்ட்களுக்கு பிரத்யேக வைப்ரேஷன் செட் செய்ய செட்டிங்ஸ் பகுதியின் சவுண்டுஸ் -- ரிங்டோன் -- வைப்ரேஷன் -- க்ரியேட் நியூ வைப்ரேஷன் ஆப்ஷனை க்ளிக் செய்து நீங்களே ஒரு வைப்ரேஷனை உருவாக்கி அதனினை பதிவு செய்து குறிப்பிட்ட காண்டாக்டிற்கு செட் செய்ய முடியும்.

லாக் ஸ்கிரீன்

லாக் ஸ்கிரீன்

ஐபோனின் லாக் எடுக்காமல் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க குறுந்தகவலின் இடது புறமாக ஸ்வைப் செய்து ரிப்ளை ஆப்ஷனை க்ளிக் செய்து பதில் அளிக்கலாம்.

மேப்

மேப்

நீங்கள் எங்கெல்லாம் செல்கின்றீர்களோ அத்தனை இடங்களையும் உங்களது ஐபோன் பதிவு செய்திருக்கும். அவைகளை கண்டறிய செட்டிங்ஸ் ஆப்ஷனில் ப்ரைவஸி -- லொகேஷன் சர்வீசஸ் -- சிஸ்டம் சர்வீசஸ் -- ஃப்ரீக்வன்ட் லொகேஷன்ஸ் பகுதியில் நீங்கள் சமீபத்தில் சென்ற இடம் சார்ந்த தகவல்களை பார்க்க முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read here in Tamil Secret hidden features in your iPhone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X