Home
News

படுக்கையறையில் மின்னிய கேமரா! பதறி போன காதல் ஜோடி.. மிரட்டிய ஹோட்டல் உரிமையாளர்!

புதுச்சேரியில் ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த காதல் ஜோடியின் படுக்கையறையில் மறைத்துவைக்கப்பட்ட சீக்ரெட் ஹிடன் கேமரா (Secret hidden camera) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி என்பது மிகவும் புகழ்பெற்ற ஒரு யூனியன் பிரதேச சுற்றுலா பகுதி இடமாகும். பொதுவாகவே, வார இறுதியில் மக்கள் இங்கு படையெடுப்பது வழக்கம். வார இறுதிகளில் குடும்பம், நம்பர் பட்டாளம், காதல் ஜோடிகளின் வருகை என்று புதுச்சேரி முழு நேரமும் பிசியாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஹாட் ஸ்பாட் சுற்றுலா தளமாக திகழ்கிறது.

படுக்கையறையில் மின்னிய கேமரா! பதறி போன காதல் ஜோடி.. மிரட்டிய ஓனர்!

இதனால், புதுச்சேரியில் 1000 திற்கும் அதிகமான சிறிய மற்றும் ஹோட்டல் அறைகள் வாடகைக்கு பயன்படுத்த கிடைக்கிறது. இங்கு பெருமளவில் காதல் ஜோடிகள் குவிவது வழக்கமான ஒன்றே. ஆனால், கடந்த 8 ஆம் தேதி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரும், அவருடைய காதலியும் பேருந்து நிலைம் அருகிலுள்ள ஜே.ஜே ரெசிடென்சி (JJ Residency) என்ற ஹோட்டலில் ஒரு அறை எடுத்துள்ளனர்.

இரண்டு நாட்கள் அந்த அறையில் தங்கியிருந்த காதல் ஜோடிகள், இறுதி நாளின் போது நள்ளிரவில் படுக்கைக்கு வந்த பின்பு, படுக்கைக்கு நேர் எதிராக இருக்கும் பிளக் பாயிண்ட் (plug point) ஓட்டைக்குள் எதோ ஒன்று மின்னுவதை கண்டிருக்கின்றனர். சந்தேகமடைந்த அந்த இளைஞர், பிளக் பாயிண்ட் அருகில் சென்று பார்த்திருக்கிறார்.

டிவி செட்-டாப்-பாக்ஸ் சொருகப்பட்டிருக்கும் பிளக் பாயிண்டிற்கு பின்னால், அந்த சிறிய துளையில் ஒரு கேமரா (hidden camera) அறைக்குள் நடக்கும் அணைத்து விஷயங்களையும் ரெக்கார்ட் செய்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துபோனார். உடனே, அவர் அந்த பிளக் பாயிண்டை உடைத்து, அதற்கு பின்னால் சில வயர்கள் மூலம் இணைக்கப்பட்டிருந்த கேமராவை கண்டிருக்கிறார்.

படுக்கையறையில் மின்னிய கேமரா! பதறி போன காதல் ஜோடி.. மிரட்டிய ஓனர்!

கேமராவுடன் இயங்கும் LED விளக்குகள் தான் அறையின் இருளில் மினுமினுத்துள்ளது. பிளக் பாயிண்ட் பாக்ஸ் பின்னால் மறைக்கப்பட்டிருந்த கேமராவை (secret camera) அந்த இளைஞர், கைப்பற்றிய உடன் நேராக ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளரை அணுகி, இது எப்படி அறைக்குள் வந்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஆனால், ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் இருவரும், இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அசால்ட்டாக கூறியதாக கூறப்படுகிறது. இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அந்த இளைஞரிடம் சமரசமாக முடித்துக்கொள்ளலாம் என்றும் கூறியதாக கூறப்படுகிறது. இதை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாதென்று கூறிய இளைஞரை, அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஹோட்டல் ஊழியர்களின் மிரட்டலை கேட்ட இளைஞர், உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றிருக்கிறார். ஆனால், அங்கும் அவருடைய புகாரை காவல்துறையினர் உடனே ஏற்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த காதல் ஜோடி விவகாரத்தை சமூக வலைதள பக்கத்திற்கு எடுத்துச்சென்றனர்.

பல விமர்சனங்களுக்கு பிறகு, போலீசாரின் விசாரணை துவங்கியுள்ளது. அந்த இளைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹோட்டல் ஊழியர்களான தேங்காய்த்திட்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்து, அரியாங்குப்பம் ஓடைவெளிப் பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

போலீசாரின் விசாரணையில், ஹோட்டல் அறையில் கேமரா இருந்தது உறுதியாகியுள்ளது. போலீசாரின் தகவல் படி, அந்த இளைஞர் கேமராவை எடுத்துக்கொண்டு நேராக வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பிறகு தாமதமாக தான் காவல் நிலையத்திற்கு வந்து புகாரளித்ததாக கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், ஹோட்டல் அறையில் கேமரா இருந்த விவகாரம் சுற்றுலா பயணிகளை கவலையடைய செய்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Secret hidden camera found in Pondicherry hotel by lover couples went viral on internet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X