மறைக்கப்பட்ட 'உச்சக்கட்ட' ரகசியங்கள்..!

|

மனித இனமானது, தன் நிலைப்பாட்டிற்க்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதையும் குறி வைக்க தவறியதே இல்லை. அது தன் இனமாக இருந்தாலும் சரி, பிற நாடாக இருந்தாலும் சரி, பிற இன-மத-மொழியாக இருந்தாலும் சரி, குறி வைக்கவும் அழித்து முடிக்கவும் தவறியதே இல்லை.

அழிவு சக்தி என்பது தான் வலிமை, அது தான் வெற்றி, அது தான் தனிப்பட்ட நிலைப்பாட்டை காப்பாற்றிக்கொள்ள உதவும் என்று மனித இனம் நம்ப ஆரம்பித்த அடுத்த நொடியில் இருந்தே உருவாகத் தொடங்கியது தான் - ஆயுதங்கள். பின் ஒரு கட்டத்தில் ஆயுதம் தான் பலம், ஆயுதம் தான் கட்டுப்பாடு சக்தியை தர வல்லது என்று உலகை ஆண்ட சூப்பர் பவர் மனிதர்கள் முடிவு செய்ய ஆரம்பமானது விபரீதங்கள்.

அப்படியான சில விபரீதமான அழிவு சக்தி ஆயுதங்கள் (Secret Weapons) மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டன. அதிலும் சில ஆயுதங்கள் திட்டமிட்டப்படி முடிவு பெறப்படமலேயே மறைக்கப்பட்டு விட்டன. அப்படியாக முடிவு பெறாத, மிகவும் ரகசியமான 6 ஆயுதங்கள் பற்றிய தகவல்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். அவைகளில் 'ப்ராஜெக்ட் ஏ119' மற்றும் 'சோவியத் டூம்ஸ்டே டிவைஸ்' மிகவும் விபரீதமானவைகள் ஆகும்..!

01. ப்ராஜெக்ட் ஏ119 :

01. ப்ராஜெக்ட் ஏ119 :

ப்ராஜெக்ட் ஏ119 (Project A119) - இது 1958-ஆம் ஆண்டு அமெரிக்க விமானப்படையால் மிகவும் ரகசியமாக உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

மனவலிமை :

மனவலிமை :

ப்ராஜெக்ட் ஏ119-ன் திட்டப்படி நிலவில் அணு குண்டு ஒன்று வீசப்பட இருந்தது. இந்த வெடிப்பை பூமியில் இருந்து காணும் அமெரிக்க மக்களுக்கு மனவலிமை ஏற்படும் என்பதற்காகவும், சோவியத் ஒன்றியத்தை வெற்றி கொண்டதாக நிரூபிக்கவே இந்த திட்டம் நடத்தப்பட இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

40 ஆண்டுகள் :

40 ஆண்டுகள் :

ஸ்பூட்நிக் 1 மூலம் விண்வெளி பந்தயத்தில் அமெரிக்காவை சோவியத் ஒன்றியம் வென்று விட, அமெரிக்க மக்கள் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக இந்த திட்டம் நிகழ்த்தப்பட திட்டமிட்டு, நிகழ்த்தப்படாமல் சுமார் 40 ஆண்டுகள் வரை ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது.

02. ப்ராஜெக்ட் ஹபக்குக் :

02. ப்ராஜெக்ட் ஹபக்குக் :

ப்ராஜெக்ட் ஹபக்குக் (Project Habakkuk) ஆனது இரண்டாம் உலக யுத்தத்தின் போது உருவாக்க திட்டமிடப்பட்ட ஒரு போர் விமான தாங்கி கப்பல் ஆகும்.

பனிக்கட்டிகள் மற்றும் மரக்கூழ் :

பனிக்கட்டிகள் மற்றும் மரக்கூழ் :

இது முழுக்க முழுக்க பனிக்கட்டிகள் மற்றும் மரக்கூழ் மூலம் உருவாக்கப்பட திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள் :

வளங்கள் :

இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய அளவிலான வளங்கள் மற்றும் பொருள்கள் வீண் ஆகும் என்பதால் இது கைவிடப்பட்டது.

03. தி ஃப்ளையிங் டோரிட்டோ :

03. தி ஃப்ளையிங் டோரிட்டோ :

அனைத்து வகையான வானிலையிலும் துல்லியமாக இயங்கும் ஒரு போர் உளவு விமானம் (all-weather, carrier-based stealth bomber ) தான் ஃப்ளையிங் டோரிட்டோ (Flying Dorito).

 ஏ-12 அவன்ஜெர் 2 :

ஏ-12 அவன்ஜெர் 2 :

இந்த திட்டத்திற்கு ஏ-12 அவன்ஜெர் 2 (A-12 Avenger II) என்ற இன்னொரு ரகசிய பெயரும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாமதம் தடைகள் :

தாமதம் தடைகள் :

சுமார் 5 பில்லியன் டாலர்கள் செலவு செய்த பின்னர் கால தாமதம் மற்றும் ஏகப்பட்ட தடைகள் வந்ததின் மூலம் இது கைவிடப்பட்டது.

04. சோவியத் டூம்ஸ்டே டிவைஸ் :

04. சோவியத் டூம்ஸ்டே டிவைஸ் :

1990-களில் நடந்த இந்த 'மிக' ரகசியமான திட்டத்தை இன்றும் சிலர் ஒரு பொய்-புரளி என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

நிதர்சனம் :

நிதர்சனம் :

ஆனால் இந்த திட்டம் உண்மையானது தான் என்று சோவியத் உயர்மட்ட ராணுவ தளபதிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு நபர்கள் பலரும் ஒற்றுக்கொள்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

ஒன்று கூட்டல் :

ஒன்று கூட்டல் :

அதாவது இந்த டூம்ஸ் டிவைஸ் (Doomsday Device) திட்டம் என்பது ஒரு அணு ஆயுதம் அல்லது பல அணு ஆயுதங்களின் ஒன்று கூட்டல் என்று நம்பப்படுகிறது.

பேரழிவு :

பேரழிவு :

இந்த ஆயுதத்தை / ஆயுதங்களை கொண்டு ஒட்டுமொத்த உயிர் இனத்தையும் அழிக்க, அதாவது பூமியை அழிக்க திட்டமிடப் பட்டிருந்தது.

தானியங்கி ஏவுகணைகள் :

தானியங்கி ஏவுகணைகள் :

இந்த நுக்லியர் கன்ட்ரோல் சிஸ்டம் ஆனதில், தானியங்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Russian Intercontinental ballistic missiles) பயன்படுத்தபட

இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

05. தி அன்லேண்டபில் ப்ளேன் :

05. தி அன்லேண்டபில் ப்ளேன் :

விமானம் தாங்கி போர் கப்பல்களில் மட்டுமின்றி தங்களின் அனைத்து வகையான கப்பல்களிலும் போர் விமானங்கள் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் விரும்பியது.

வால் பகுதி :

வால் பகுதி :

அதன் விளைவாக உருவானதே இந்த அன்லேண்டபில் ப்ளேன் (Un-landable Plane) அதாவது தரை இறக்கம்தனில் விமானத்தின் வால் பகுதி மட்டுமே தேவைப்படும், ஓடுதளம் தேவைப்படாதபடி வடிவமைக்கப்படும் ப்ளேன்கள்.

கடினத்தன்மை :

கடினத்தன்மை :

இந்த வடிவமைப்பில் இருந்த கடினத்தன்மை காரணமாகவும், பைலட்களால் பின் பக்கமாக விமானத்தை நிலையாக நிறுத்த ஏற்பட்ட சிரமத்தாலும் இது கைவிடப்பட்டது.

06. இன்ட்ரூடர் :

06. இன்ட்ரூடர் :

ஒளியை விட 3 மடங்கு அதிக வேகத்தில், 15 மைல் உயரத்தில் அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு ஒரு போர் விமானம் பறக்க முடியும் என்றால் அது இன்ட்ரூடர் (Intruder) ஆகத்தான் இருக்க முடியும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :

இந்த கனவு திட்டத்தில் இருக்கும் ஏகப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் இந்த திட்டம் 1961-ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.

வெடித்து சிதறியது :

வெடித்து சிதறியது :

பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட இரண்டில் ஒரு முன் மாதிரி இன்ட்ரூடர் விமானம் நடுவானில் வெடித்து சிதறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

07. தி தண்டர்ஸ்கிரீச் :

07. தி தண்டர்ஸ்கிரீச் :

வழக்கமாக அதிக அளவிலான சத்தம் எழுப்பாத வகையில் தான் விமானங்கள் உருவாக்கப்படும் ஆனால் இது அதற்கு மிகவும் நேர் மாறானது.

காற்றியக்கவியல் :

காற்றியக்கவியல் :

தண்டர்ஸ்கிரீச் டார்போ என்ஜீன்கள் மற்றும் இதன் காற்றியக்கவியல் நாகரிகம் ஆனது சுமார் 25 மைல்களுக்கு அப்பால் இருப்பவர்களின் காதை கிழிக்கும் அளவு சத்தம் எழுப்பும்.

இரைச்சலான விமானம் :

இரைச்சலான விமானம் :

சொல்லப்போனால் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் இரைச்சலான விமானம் இது தான்.

பாதிப்பு :

பாதிப்பு :

தண்டர்ஸ்கிரீச் சத்தமானது செவிப்பறைகளை பாதித்து, தரையில் இருக்கும் குழுக்களின் மத்தியில் குமட்டுதலை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

விண்ணில் தெரிந்த 'கடவுளின் கை', புகைப்படம் எடுத்த நாசா..!

அம்பலம் : 45 வருடங்களுக்கு முன்பு ரஷ்யா செய்த 'சதி'..!

வரலாற்று துரோகம் : இதைவிட பெரிய அசிங்கம் வேற இல்ல..!

மனித இனம் அழியும் - ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கம்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Secret Hi-tech Weapons That Were Never Completed. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more