டெலிபோன் ஆர்வமே கூகுளில் பணியாற்ற வைத்தது, சுந்தர் பிச்சை உருக்கம்.!!

By Aruna Saravanan
|

கூகுளின் புதிய சிஇஒ'வாக சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை தேர்வாகி உள்ளார். கூகுளின் அதிக அளவு வாக்கு இவருக்கு அளிக்கப்பட்டது. சென்னையில் துவங்கி கூகுள் வரை சென்றிருக்கும் இவரது வாழ்க்கை பயணத்தில் பலருக்கும் தெரிந்திராத பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றது. இவைகளை விரிவாக ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

இவர் சென்னையை சேர்ந்தவர். ஐஐடி கராக்பூரில் பொறியியல் பட்டம் பெற்றவர். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் மற்றும் வார்டன் பிஸினஸ் பள்ளியில் எம்பிஏ பெற்றவர். இவரது மனைவி அஞ்சலி பிச்சையை இவர் ஐஐட்- கேஜிபி'யில் சந்தித்தார். இரண்டு குழந்தைகளுடன் கலிஃபோர்னியாவில் அல்டாஸ் இல்லத்தில் தற்பொழுது இவர்கள் வசிக்கின்றனர்.

இல்லம்

இல்லம்

சுந்தர் பிச்சை வசிக்கும் வீடானது லாஸ் அல்டாஸில் அமைந்துள்ளது. மொத்தம் 5 படுக்கை அறையை கொண்ட இந்த வீட்டில் டென்னீஸ் கோர்ட் மற்றும் குழந்தைகளுக்கான மினியேச்சர் கால்பந்து மைதானமும் உள்ளது.

முதல் வேலை

முதல் வேலை

இவரது முதல் வேலையிலேயே இவரது கவர்திழுக்கும் தலைமைத்தன்மையை காட்டி உள்ளார். சிறிய வெப் பிரவுஸர் எக்ஸ்டென்ஷனை டெவலப் செய்யும் வேலைதான் முதலில் இவருக்கு அளிக்கப்பட்டது அதாவது googol toolbar. இதை முடித்தபின் இவரது தலைமை அதிகாரியான எரிக் ஸ்மிக்ட்'ஐ வியக்கவைத்து. அதன் பின் க்ரோம் பிரவுஸரின் வளர்ச்சியில் இறங்கினார். இதன் வழியில் இவரது வெற்றி க்ரோம் இயங்குதளத்தில் வந்து நின்றது.

கிரிக்கெட்

கிரிக்கெட்

இவருக்கு கிரிகெட் என்றால் பிரியம். மற்ற இந்தியர்களை போலவே கிரிகெட் வீரராகவே விரும்பினார் இருந்தும் விதி இவரை கணினி மேதையாக்கியது. இந்த குழந்தை பருவ ஆசையின் காரணமாக இவர் இந்தியா வந்த பொழுது சிறுவர்களுடன் கிரிகெட் விளையாடி மகிழ்ந்தார்.

தலைமை

தலைமை

க்ரோமுக்கு பின் ஆண்ட்ராய்டு என கூகுளின் தயாரிப்புகளுக்கு தலைமை இவருக்குதான். கூகுள் கார்ட்போர்ட் விஆர் இவரது மற்றொரு வெற்றியாக அமைந்தது.

ஆண்ட்ராய்டு துறை

ஆண்ட்ராய்டு துறை

முதலில் கூகுளின் ஆண்ட்ராய்டு துறை பல செக்டார்களில் இயங்கி வந்தது. ஆன்டி ரூபினிற்க்கு பின் இவருக்கு இந்த துறை அளிக்கப்பட்டவுடன் இதன் தோற்றத்தை தலைக்கீழாக மாற்றி இதிலும் வெற்றி இவருக்கே. இதை கூகுளின் free flowing ecosystemஆக மாற்றியதும் இவரே.

அறிவியல் மேதாவி

அறிவியல் மேதாவி

இவர் ஒரு உண்மையான அறிவியல் மேதாவி. கடந்த மாதம் இயற்பியல் துறையில் புவி ஈர்ப்பு அலையின் கண்டுபிடிப்பை பற்றிய இவரது பங்கு இதை உண்மையாக்கியது இவர் இதை பற்றி டிவட்டரில் " ஆயிர்கணக்கானவர்கள் இதில் பணி புரிந்துள்ளனர். இது மிகவும் அற்புதம். மனதை வியக்க வைக்கின்றது. ஏனென்றால் இதை பற்றி 100 வருடங்களுக்கு முன்பே ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். இது அவர் மனதில் அப்படியே இருந்துள்ளது. ஒரு மனிதன், தனி ஒருவனாக இதை செய்துள்ளார். இதை புரிந்து கொள்ள நான் பலவகையில் முயற்சி செய்துள்ளேன்" என குறிப்பிட்டிருந்தார்.

CES 2016

CES 2016

CES 2016 விழாவில் இவரது வருகை எந்த சலனமும் அலட்டலும் இல்லாமல் அமைதியாக இருந்தது. இவர் மிக பெரிய பொறுப்பில் இருந்தாலும் இவரை பலர் இன்னும் அறியாமல் உள்ளனர் என்பதே உண்மை.

சென்னை வெள்ளம்

சென்னை வெள்ளம்

சென்னை வெள்ளத்தை பற்றிய பேட்டியில் இவர் குடும்பம் இந்த வெள்ளத்தில் எப்படி பாதிக்க பட்டது என்பது பற்றி கூறியுள்ளார். இவரது பாட்டி தொடர்பு எதுவும் இல்லாமல் 4 நாட்களுக்கு வீட்டுக்குள் அடைப்பட்டு கிடந்துள்ளார். இவரது மாமன்கள் தரைத்தளத்தை விட்டு இரண்டாம் தளத்துக்கு உயிர் காத்து கொள்ள எப்படி சென்றனர் என்பது பற்றி கூறியுள்ளார்.

குழந்தைபருவம்

குழந்தைபருவம்

இவரது குடும்பம் முதலில் டெலிபோன் வாங்கிய போது இவரது ஆர்வம் மேலோங்கியது. அப்பொழுது இவருக்கு 12 வயது. ரோட்டரி இவரது எண்கள் ஆற்றலை ஊக்கப்படுத்தியது. இவர் டையல் செய்யும் எண்களை இவர் நினைவில் வைத்து கொள்ளும் ஆற்றல் இவருக்கு இருந்தது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

கூகுள் ப்ராஜக்ட் அரா : இது எப்படி அண்ணே வேலை செய்யும்.??

புதிய ஆண்ட்ராய்டு போன் செய்ய கூடாதவை.!!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Secret Facts About the life of Google CEO Sundar Pichai Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X