ஐபோனின் பின்புறத்தில் சிறிய ஓட்டை, இது எதற்கு.??

By Meganathan
|

பன்மடங்கு லாபத்திற்கு விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது எனத் தெரிந்தும் அனைவரும் வாங்க விரும்பும் ஸ்மார்ட்போன் கருவியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கருவிகள் இருக்கின்றன. விலை அதிகம் என்றாலும் தலைசிறந்த பாதுகாப்பு மற்றும் கருவியின் பிரான்டு மதிப்பு என இரண்டு காரணங்களுக்காக உலகளவில் அமோக விற்பனையை ஐபோன்கள் சந்தித்து வருகின்றது.

இதையும் பாருங்கள் : அப்போ போட்டோ இப்போ வீடியோ, ரகசியமாய் கசிந்த ஐபோன் 7 வீடியோ.!?

நல்ல கேமரா, அதிநவீன சக்தி வாய்ந்த அம்சங்கள் என ஐபோன் வாங்கினால் பல மாதங்களுக்கு எவ்வித தொல்லையும் வராது என்பது அனைவரும் அறிந்ததே. உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் ஐபோன் கருவிகளில் இந்தச் சிறிய விடயத்தை யாரும் பார்த்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு தான் எனலாம்.

அம்சம்

அம்சம்

ஐபோன் கருவியினை வாங்கியதில் இருந்து சரளமாக பயன்படுத்தி இன்று அந்தக் கருவி குறித்து எதையும் செய்ய தெரிந்திருந்தாலும் அந்தக் கருவியில் இருக்கும் சில விடயங்கள் எல்லோருக்கும் தெரிந்திருப்பதில்லை.

ஓட்டை

ஓட்டை

அந்த வகையில் ஐபோன் கருவியின் கேமரா மற்றும் பிளாஷ் நடுவே வழங்கப்பட்டிருக்கும் சிறிய ஓட்டையை இதற்கு முன் நீங்கள் கவனித்ததுண்டா.?

ஐபோன்

ஐபோன்

ஐபோன் 5 மாடலில் துவங்கி ஒவ்வொரு ஐபோன் கருவியிலும் கேமரா லென்ஸ் மற்றும் பிளாஷ் நடுவே சிறிய ஓட்டை வழங்கப்படுகின்றது. ஆனால் அந்த இடத்தில் அத்தகைய சிறிய ஓட்டை எதற்கு.?

மைக்ரோபோன்

மைக்ரோபோன்

இந்தச் சிறிய ஓட்டை உண்மையில் ஒரு மைக்ரோபோன் ஆகும். இந்த மைக்ரோபோன் உங்களது குரலை கவனிக்காமல் நாய்ஸ் கேன்சலேஷன் எனப்படும் சத்தத்தை கட்டுப்படுத்தும் பணியினை மேற்கொள்ளும்.

சத்தம்

சத்தம்

அதாவது நீங்கள் இருக்கும் இடத்தில் ஏற்படும் வெளிப்புற சத்தத்தினை தடுத்து அழைப்புகளின் போது மறுபக்கம் பேசுவோரின் குரலை கச்சிதமாகக் கேட்க வழி செய்யும்.

பதிவு

பதிவு

மேலும் இந்த மைக்ரோபோன் உங்களது குரலினை துல்லியமாகப் பதிவு செய்து சிரி பயன்படுத்தும் போது உதவியாக இருக்கச் செய்யும்.

மூன்று

மூன்று

ஐபோன் கருவியில் மொத்தம் மூன்று மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை கருவியின் அடியில் ஒன்றும், முன் மற்றும் பின் புறங்களில் ஒவ்வொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு

பதிவு

வீடியோக்களை பதிவு செய்யும் போது துல்லியமான ஸ்டீரியோ ஆடியோக்களை பதிவு செய்ய ஏதுவாக இரண்டு மைக்ரோபோன் வழங்கப்படுகின்றது.

இதையும் பாருங்கள்

இதையும் பாருங்கள்

ஐபோன் 7 வெளியீடு தேதி மற்றும் அதன் புகைப்படங்கள்

ஐபோன் 7 டூயல் கேமரா கொண்டிருக்கும்.!!

Best Mobiles in India

English summary
Secret Behind tiny Black Hole Between iPhone's Camera and Flash? Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X