தனிப்பட்ட புகைப்படங்களை மறைத்து வைக்க இந்த செயளிகள் போதுமா

By Meganathan
|

இன்றைய செல்பீ காலத்தில் எங்கு சென்றாலும் புகைப்படம் எடுக்கும் பழக்கத்தை அனைவரும் பின்பற்றி வருகின்றனர் எனலாம். புகைப்படம் எடுப்பவர்களில் குறிப்பாக காதலர்கள் தாங்கள் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க நினைத்து சில சமயங்களில் அவற்றை தொலைத்து விடுகின்றனர் அல்லது அதை யாராவது பார்த்து பிரச்சனையில் மாட்டி கொள்கின்றனர்.

கூகுள் மூலம் இதை எல்லாம் செய்ய முடியும் என்று உங்களுக்கு தெரியுமா

இதற்கான தீர்வை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். உங்களுக்கு நெருக்கமான அல்லது தனிப்பட்ட புகைப்படங்களை மறைத்து வைக்க சிறந்த செயளிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

Private Photo Vault

Private Photo Vault

இந்த செயளியில் மறைக்க வேண்டிய புகைப்படங்களை பின் லாக் PIN lock செய்து வைத்து கொள்ளலாம்.
இலவசமாக கிடைக்கும் இந்த செயளி ஐஓஎஸ்களில் கிடைக்கின்றது

Gallery Lock Lite

Gallery Lock Lite

மற்ற செயளிகளை போன்று இல்லாமல் இது வித்தியாசமாக செயல்படுகின்றது, இந்த செயளி போனில் இருப்பதை யாராலும் பார்க்க முடியாது, இதை திறக்க நட்சத்திரக் குறியிடு மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை கொடுத்து கால் பட்டனை அழுத்த வேண்டும். மேலும் தவறான பாஸ்வேர்டை மூன்று முறைக்கு மேல் டைப் செய்தால் டைப் செய்தவரின் புகைப்படத்தை முன்பக்க கேமரா மூலம் பதிவு செய்து கொள்ளும்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயளி இலவசமாக கிடைக்கின்றது என்றாலும் ப்ரோ வெர்ஷனிற்கு அப்கிரேடு செய்ய சுமார் 4.25 டாலர்கள் வரை செலவாகும்.

Best Secret Folder

Best Secret Folder

இந்த செயளி உங்களது போனில் "My Utilities" என்ற பெயரில் இருக்கும், அதனால் இதை யாரும் திறக்க மாட்டார்கள் அப்படி திறக்க முயன்றாலும் இதில் பாஸ்வேர்டு வைத்து கொள்ளலாம், தவறான பாஸ்வேர்டை டைப் செய்தால் அவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டு விடும். இந்த செயளி ஐஓஎஸ் கருவிகளுக்கு இலவசமாக கிடைக்கின்றது.
இந்த செயளியில் முக்கியமான விஷயம் இதன் பாஸ்வேர்டை மறந்து விட்டால் அதை மீண்டும் மீட்கவே முடியாது என்பது தான்.

KeepSafe

KeepSafe

மிகவும் எளிமையான இந்த செயளி பின் நம்பரை என்டர் செய்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை மறைத்து வைத்து கொள்ளலாம். இந்த செயளி ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் கருவிகளுக்கு இலவசமாக கிடைக்கின்றது.

KYMS

KYMS

இந்த செயளியை இன்ஸ்டால் செய்தவுடன் போனில் கால்குலேட்டர் ஒன்று திறக்கும் அதில் பாஸ்வேர்டை டைப் செய்ய வேண்டும், அதன் பின் உங்களுக்கு மறைக்க வேண்டியவற்றை தேர்வு செய்ய வேண்டும். இந்த செயளி ஐஓஎஸ் கருவிகிளில் இலவசமாக கிடைக்கின்றது.

Vaulty

Vaulty

இந்த செயளியில் புகைப்படம், வீடியோ ஆகியவற்றை மறைத்து வைத்து கொள்ளலாம். இந்த செயளி ஆன்டிராய்டு இயங்கு தளத்தில் இலவசமாக கிடைக்கின்றது.

PhotoVault

PhotoVault

புகைப்படங்களை மறைத்து வைக்க வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த செயளி கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு 1.50 டாலர்களுக்கு கிடைக்கின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Secret Apps to Hide Your personal Photos. Here you will find some interesting Secret Apps to Hide Your personal Photos.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X