Just In
- 14 hrs ago
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- 16 hrs ago
சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா?
- 17 hrs ago
ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா?
- 19 hrs ago
முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு
Don't Miss
- Movies
இதுக்குத்தானா...? மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை உதறிய கீர்த்தி சுரேஷ்.
- News
கரண்ட் பில் கட்டாததால் காவல் நிலையங்களின் பீஸை பிடுங்கிய மின்சார வாரியம்.. பஞ்சாபில் பரபரப்பு
- Lifestyle
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புத்தாண்டு அதிர வைக்கும் முடிவு-அமெரிக்கா-தென்கொரியா-வடகொரிய உறவு.!
2018ம் ஆண்டு முடிந்து, 2019ம் ஆண்டு துவங்கியதால் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் பல்வேறு கொண்டாட்டங்கள் கலை கட்டியிருக்கலாம்.
ஆனால் தென்கொரியாவுக்கும், வடகொரியாக்காவும், அமெரிக்காவும் இந்த புத்தாண்டு புதிய விடியலையும் அளவில்லா பேரானந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, அங்காளி-பங்காளியாக இருந்த வடகொரியாவும், தென்கொரியாவும் தற்போது உறவில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் தென்கொரியாவும் தூடு விட்டு, அமெரிக்காவும்-வடகொரியாவுக்கும் ஓர் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

வடகொரியா-தென்கொரியா சண்டை:
வடகொரியாவும் தென்கொரியாவும் பல்வேறு முறை சண்டையிட்டு வந்தன. இதை மீறி வடகொரியா பல்வேறு முறை அணு ஆயுத சோதனை நடத்தின. மேலும் தென்கொரியா நாட்டிற்கு மேலும் அணு ஆயுத சோதனையை வடகொரியா நடத்தி வந்தது.
மேலும், ஜப்பான் நாட்டின் அருகே அணு ஆயுத சோதனையை நடத்தியது தென்கொரியா. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து, வடகொரியா மீது பொருளாதார தடையைம் விதித்து வந்தது.

மாறி மாறி கிண்டல்:
இந்நிலையில், டிரம்பைப் பார்த்து வயதான பைத்தியம் என்றார் வடகொரியத் தலைவர் கிம். இதற்குப் பதிலடியாக குட்டி ராக்கெட் மனிதன் என்று அவரை கிண்டல் செய்தார் டிரம்ப். அத்துடன், உலகம் இதுவரை பார்த்திராத வகையில் தீயும் சினமும் கொண்டு வடகொரியாவைத் தாக்குவோம் என்றும் டிரம்ப் கூறினார்.
பலம் பொருந்திய அணு ஆயதங்கள் கொண்ட இரு நாடுகளும் மோதிக் கொள்ளும் நிலை உருவானது.

தென்கொரியா-வடகொரியா உறவு:
இந்நிலையில், உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு வந்த வடகொரியாவுக்கு, தனது பங்காளி நாடான தென்கொரியாவுடன் உறவை சீரமைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ஓரே விளையாட்டு போட்டி:
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க வடகொரியா சம்மதித்தது. மகிழ்ச்சியோடு தென்கொரியாவும் ஒப்புக்கொண்டது. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? இறுதியாக இரு நாடுகளும் அந்தப் போட்டியில் ஒரே கொடியின்கீழ் அணி வகுத்து செல்லும் அளவுக்கும், பனிச்சறுக்கில் ஒரே அணியாக பங்கேற்கும் அளவுக்கும் நெருங்கின.

விதை போட்ட தென்கொரியா:
பங்காளிகளாகப் பிரிந்த நாடுகள், அண்ணன் - தம்பியாகி இணைந்தது, அவர்களின் இரு தரப்பு உறவுகள் மேம்படுவதற்கு மட்டுமல்ல, அமெரிக்கா-வட கொரியா உறவின் பதற்றம் தணியவும் காரணமாக அமைந்தது.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசத் தயாராக இருப்பதை முதலில் டிரம்பிடம் தெரிவித்து அதற்கு இசைவு பெற்றது தென்கொரியாதான். இதனை முதலில் வெளியில் அறிவித்ததும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்தான்.

டிரம்ப்-கிம் சந்திப்பு:
சில ஆரம்பகட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி நடந்தேவிட்டது. வடகொரிய அதிபர் ஒருவரை நேரில் சந்தித்துப் பேசிய முதல் அமெரிக்க அதிபரானார் டிரம்ப்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு ஆயுத ஒழிப்பு செய்ய வட கொரியா கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது. ஆனால், குறிப்பான உறுதி மொழிகள் எதையும் அது வழங்கவில்லை. ஆரம்பத்தில் இந்தப் பேச்சுவார்த்தையின் பலன் குறித்தும், வடகொரியாவின் நோக்கங்கள் குறித்தம் சந்தேகம் ஏற்பட்டது.

அணு ஆயுத சோதனை:
இந்நிலையில், அதிநவீன ஆயுதம் ஒன்றை வடகொரியா சோதனை செய்ததாகவும் அதை அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் மேற்பார்வையிட்டதாகவும் வட கொரிய அரசு ஊடகம் 2018 நவம்பரில் செய்தி வெளியிட்டது.

முதல் அணு ஆயுத சோதனை:
2017 நவம்பரில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஹ்வாசாங்-15 ஏவுகணையை சோதித்த பிறகு வட கொரியா மேற்கொண்டதாக அறிவித்த முதல் ஆயுத சோதனை அது.

உச்சி மாநாடு விருந்து:
இதனிடையே, வடகொரிய அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட 3 உயரதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. புதிய தடைகளும் விதிக்கப்பட்டன. இதனால், வட கொரியா வருத்தப்பட்டதுடன், சிங்கப்பூர் உச்சிமாநாட்டுக்குப் பிறகு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்திருக்கவேண்டும் என்று கருத்துத் தெரிவித்தது.

2வது பேச்சு வார்த்தை:
இந்நிலையில், இரண்டாவது முறை டிரம்பும்-கிம்மும் சந்திக்கப்போவதாக வெளியான முன்மொழிவுகள் என்னவாகும், அணு ஆயுத வல்லமை பொருந்திய இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முயற்சிகள் என்னவாகும் என்பது குறித்த எந்த நிச்சயமுமில்லாமல் 2019-க்குள் உலகம் நுழைகிறது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090