என்னாங்க,ஒரே வாரத்தில் இது 2-வது முறை- பேஸ்புக் மெசஞ்சர்,இன்ஸ்டா மீண்டும் செயலிழப்பு: மன்னிப்பு கேட்ட பேஸ்புக்

|

சில பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர் இரண்டாவது முறையாக சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது. இது பேஸ்புக் இன்க் உறுதிப்படுத்தியிருக்கிறது. சில பயனர்கள் அதன் பயன்பாடுகள் மற்றும் சேவைகளை அணுகவதில் சிக்கல் இருந்தது. சமூக வலைதள நிறுவனம் அதன் தரவு மையங்களில் நெட்வொர்க்கின் வழக்கமான பராமரிப்பின் போது ஏற்பட்ட பிழையால் ஆறு மணிநேர செயலிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் பயன்பாட்டை அணுக முடியவில்லை என தெரிவித்தனர்.

சிக்கலுக்கு வருந்துகிறோம்: பேஸ்புக்

சிக்கலுக்கு வருந்துகிறோம்: பேஸ்புக்

எங்கள் செயலிகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை தாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தாங்கள் பணியாற்றுகிறோம் எனவும் முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தாங்கள் பணியாற்றுகிறோம் எனவும் ஏதேனும் சிரமம் இருந்தால் மன்னிப்பு கோருகிறோம் எனவும் பேஸ்புக் டுவிட்டில் தெரிவித்தது.

2-வது முறையாக இன்ஸ்டா பயன்பாட்டில் சிக்கல்

2-வது முறையாக இன்ஸ்டா பயன்பாட்டில் சிக்கல்

இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்களை நெட்டிசன்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இணைய கண்காணிப்பு குழு டவுன்டெடெக்டர், புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்டாகிராமில் 36000-க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கல்களை சந்தித்தாக அளிக்கப்பட்ட புகார்களை சுட்டிக் காட்டியது. அதேபோல் பேஸ்புக் மெசேஜிங் தளத்தில் 800-க்கும் மேற்பட்ட பிரச்சனைகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பயன்பாட்டில் சிக்கலை எதிர்கொண்ட பயனர்கள்

பயன்பாட்டில் சிக்கலை எதிர்கொண்ட பயனர்கள்

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் பயன்பாடுகளும் இந்த சிக்கலை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. முன்னதாக இதேபோல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இதுபோன்ற சிக்கலை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய பயன்பாடுகள் சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பவை ஆகும். இந்த செயலிகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மூன்று செயலிகளும் அக்டோபர் 4 ஆம் தேதி இரவு 9:30 மணியளவில் இருந்த அடுத்த சில மணி நேரங்களுக்கு உலகம் முழுவதும் செயலிழந்த நிலையில் இருந்தது. இது இதுவரை கண்டிராத மிகப் பெரிய தோல்வி என வலைதள கண்காணிப்பு குழு தெரிவித்தது.

முறையற்ற பேச்சு மற்றும் தவறான தகவல்

முறையற்ற பேச்சு மற்றும் தவறான தகவல்

முறையற்ற பேச்சு மற்றும் தவறான தகவலை கட்டுப்படுத்துவதை விட நிறுவனம் லாப நோக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக விசில்ப்ளோவர் குற்றச்சாட்டு முன்வைத்தது. இதுகுறித்து பேஸ்புக் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷ்ரோபர் டுவிட் செய்தார். இதில் எங்களை நம்பியிருக்கும் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய வணிகம், குடும்பம் மற்றும் தனிநபரும் மன்னிக்குவும் என்றும் 100%-ஐ அடைய சிறிது நேரம் ஆகலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மிகப்பெரிய வீழ்ச்சி

மிகப்பெரிய வீழ்ச்சி

சுமார் 2 பில்லியன் தினசரி பயனர்களை கொண்ட பேஸ்புக்கின் பங்குகள் 4.9% சரிந்தன. நவம்பர் மாதத்துக்கு பிறகு இது மிகப்பெரிய வீழ்ச்சியாக இருக்கிறது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பேஸ்புக் விளிக்கம் அளித்துள்ளது. அதில் இந்த தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என குறிப்பிட்டிருந்தது. சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு இந்த சிக்கல் சரி செய்யப்பட்டது. அக்டோபர் 5 ஆம் தேதி காலை 4 மணி அளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் அடுத்தடுத்து செயல்பாட்டுக்கு வந்தது.

மன்னிப்பு கோருவதாக பேஸ்புக் அறிவிப்பு

மன்னிப்பு கோருவதாக பேஸ்புக் அறிவிப்பு

ஏற்பட்ட இடையூறுக்கு உலகம் முழுவதும் உள்ள பயனர்களிடம் மன்னிப்பு கோருவதாக பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டது. அதேபோல் தேவைகளை முழு அளவில் வழங்க கடுமையாக வேலை செய்து வருவதாகவும், முழு அளவிலான சேவை மீண்டும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தது. இதேபோல் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமும் தங்களது பயனர்களிடம் வருத்தம் தெரிவித்தன.

பேஸ்புக் இந்தியாவின் பொது கொள்கை இயக்குனர்

பேஸ்புக் இந்தியாவின் பொது கொள்கை இயக்குனர்

சமீபத்தில் சமூகவலைதளமான பேஸ்புக் இந்தியாவின் பொது கொள்கை இயக்குனராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் அகர்வால் நியமிக்கப்படுவதாக அறிவித்தது. இதுகுறித்து பேஸ்புக் அறிக்கையில் பயனர் பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை உள்ளிட்ட இந்திய பேஸ்புக்கிற்கான முக்கிய கொள்கை மேம்பாட்டு முயற்சிகளை பொது கொள்கை இயக்குனர் ராஜீவ் அகர்வால் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
second time in a week Facebook Messenger, Instagram went Down: Facebook Apologises

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X