உலகின் இரண்டாவது பணக்காரரிடம் ஒரு ஸ்மார்டபோன் கூட இல்லை.! ஏன்?
உலகின் இரண்டாவது பணக்காரரான வாரன் பபெட் இடம் ஒரு ஸ்மார்டபோன் கூட இல்லை.! ஏன்?
தற்போது உலகம் முழுவதும் அதிகப்படியான மக்கள் ஸ்மார்ட்போன்களை அதிகம் உபயோகம் செய்கின்றனர். மேலும். அவற்றைக் கொண்டே பல தொழில்களும் செய்கின்றனர். இவற்றால் பல நன்மைகள் உள்ளன.
உலகின் இரண்டாவது பணக்காரரான வாரன் பபெட் பபெட் 1951-54 வரை ஒமாகாவில் உள்ள பபெட்-ஃபால்க் ரூ நிறுவனத்தில் முதலீட்டு விற்பனையாளராகவும் 1954-56 வரை நியூயார்க்கில் உள்ள 'கிரகாம்-நியூமேன் கார்ப்' நிறுவனத்தில் பங்கு முதலீட்டு ஆய்வாளராகவும், 1956-1969 வரை ஒமாகாவில் உள்ள பபெட் பார்ட்னர்ஷிப் லிமிடெட் நிறுவனத்தில் பொதுப் பங்குதாரராகவும் இருந்தார். 1970 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒமாகாவில் உள்ள பெர்க்சயர் ஹாதவே நிறுவனத் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகவும் உள்ளார். இவர் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது இல்லை மேலும் அவர் ஏன் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது இல்லை எனப் பார்ப்போம்.

வாரன் பபெட் :
உலகின் மிக வெற்றிகரமான பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான அமெரிக்க தொழில்துறை தொழிலாளி, உலகின் இரண்டாவது பணக்கார மனிதர் வாரன் பபெட் ஆவார். இவர் ஒரு சிறந்த மனிதர் மற்றும் சிறந்த ஆளுமை பெற்றவராக உள்ளார்.

ஸ்மார்ட்போன்:
தற்போது சாதாரணமக்கள் கூட ஸ்மார்ட்போன்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். மனிதர்கள் தினசரி வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்களிகன் பங்கு மிகப்பெரியது. இதன் மூலம் வருமாணங்கள் கூட பெறமுடியும். வங்கி மற்றும் பல ஆன்லைன் சேவைகளை ஸ்மார்ட்போன்கள் மூலம் பயன்படுத்தலாம்

சிஎன்என் நேர்காணல்:
வாரன் பபெட் சிஎன்என் நேர்காணலில் பெருமையுடன் மேற்கூறிய உண்மை என்னவென்றால் நான் ஐபோன் மற்றும் ஸ்மாரட்போன்களை பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்தார். மேலும் ஒரு பழைய ஃபிளிப் போன் ஒன்றைப் பயன்படுத்துகிறார் வாரன் பபெட் .

வாரன் பபெட் இல்லம்:
இவர் 1958 ஆம் ஆண்டில் 31,500 டாலர்களுக்கு ஒமாகாவில் ஒரு இல்லம் வாங்கினார். அவை மூன்று படுக்கையறை கொண்ட இல்லம். மேலும் மிக எளிமையான மனிதர் வாரன் பபெட்.

புதிய கார்:
தொழிலதிபர் வாரன் பபெட் 3,500 மைல்களுக்கு விமானத்தை இயக்கியுள்ளார். மேலும் கடந்த ஒரு வருடம் விமானத்தில் அதிகபயனம் இருந்தது. ஆனால் கூடிய விரைவில் ஒரு புதிய காரை எப்போதாவது வாங்குவேன், என்று சிஎன்என் பேட்டியில் கூறினார்.

தனியார் ஜெட் ;
வாரன் பபெட் தனியார் ஜெட் ஒன்றை சொந்தமாக வைத்திருந்தாலும், வியாபாரக் கூட்டங்களுக்கு செல்லும்போது மட்டுமெ பயனிப்பார். மேலும் அவருக்கு கார் பயனம்தான் மிகவும் பிடிக்கும் என அறிவித்திருந்தார்.

வாரன் வாழ்க்கைமுறை:
வாரன் பபெட்டின் வாழ்க்கைமுறை, அசாதாரணமானதாக உள்ளது. அவருடைய ஆலோசனையை நீங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும், என பல தொழில் அதிபர்களை அவரைப்பற்றி உயர்வாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications