OnePlus போன் ஒன்றை சொந்தமாக்க இதைவிட ஒரு நல்ல சான்ஸ் கிடைக்காது! நம்பமுடியாத விலைகுறைப்பு.!
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பிரபலமான ஸ்மார்ட்போன் ஒன்றுக்கு விலையை குறைத்துள்ளது. அதாவது ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தான் தற்போது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனுக்கு ஏற்கனவே ஒருமுறை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இரண்டாவது முறை ஒன்பிளஸ் 10 ப்ரோ போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.66,999-விலையிலும், இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.71,999-விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் இந்த போனின் முதல் விலை குறைப்பில், 8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடல் ஆனது ரூ.61,999-விலையில் கிடைத்தது. பின்பு இதன் 12ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ.66,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது விலை குறைப்பின் மூலம் 8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலை ரூ.56,999-விலையிலும், இதன் 12ஜிபி ரேம் கொண்ட மாலை ரூ.61,999-விலையிலும் கிடைக்கிறது.
அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் வோல்கானிக் பிளாக் மற்றும் எமரால்டு ஃபாரஸ்ட் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.
6.7 இன்ச் Quad HD+ Fluid AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும்.
ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 48எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ராசஸர் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் போன். இதுதவிர பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.


Click it and Unblock the Notifications








