Home
News

வந்தது புதிய @valid UPI ஐடி.. பேங்க் அக்கவுண்ட் நம்பர் மற்றும் IFSC கோட் ரெடியா வச்சுக்கோங்க!

செபி (SEBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India) ஆனது இரண்டு செயல்முறைகளை அமல்படுத்தியுள்ளது. கட்டண பாதுகாப்பை வலுப்படுத்தவும், மோசடி நிறுவனங்களிலிருந்து முதலீட்டாளர்களை பாதுகாக்கவும் - வேலிட் யுபிஐ ஐடிகள் (Valid UPI IDs) மற்றும் செபி செக் (SEBI Check) என்கிற 2 புதிய முயற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செபி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய அமைப்பின் கீழ், 2025 அக்டோபர் 1 ஆம் தேதி முதல், செபியில் பதிவு செய்யப்பட்ட தரகர்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் பிற முதலீட்டாளர் எதிர்கொள்ளும் இடைத்தரகர்களின் யுபிஐ ஐடிகள் (UPI IDs of SEBI-registered brokers) ஆனது இப்போது பிரத்யேக "@valid" ஹேண்டில்களை கொண்டிருக்கும்.

SEBI: வந்தது புதிய @valid UPI ஐடி!

இந்த பிரத்யேக யுபிஐ ஹேண்டில்கள் ஆனது என்பிசிஐ (NPCI) என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (National Payments Corporation of India) வழங்கப்பட்டவைகள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன்கீழ் ஒவ்வொரு யுபிஐ ஐடியும் தரகர்களுக்கு ".brk" மற்றும் பரஸ்பர நிதிகளுக்கு ".mf" போன்ற வகை-குறிப்பிட்ட பின்னொட்டுகளை (Category-specific suffixes) உள்ளடக்கியிருக்கும்.

இதன் மூலம் முதலீட்டாளர்கள் சட்டப்பூர்வ நிறுவனங்களை (Legitimate entities) மிகவும் எளிமையான முறையில் அடையாளம் காண முடியும். உதாரணமாக, ஒரு தரகரின் ஐடி abc.brk@validhdfc ஆக தோன்றலாம், அதே நேரத்தில் ஒரு மியூச்சுவல் ஃபண்டின் யுபிஐ ஐடி ஆனது xyz.mf@validicici ஆக இருக்கலாம்.

பெரும்பாலான முதலீட்டாளர்களையும், அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளையும் உள்ளடக்கிய 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட தரகர்கள் ஏற்கனவே இந்த புதிய ஹேண்டில்-ஐ ஏற்றுக்கொண்டுள்ளதாக செபி உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஐடிகள் மூலம் செய்யப்படும் பணம் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த - பச்சை நிற முக்கோணத்திற்குள் தம்ப்ஸ்-அப் (Thumbs-up inside a green triangle) என்கிற தனித்துவமான ஐகான் காண்பிக்கப்படும்

அதே நேரத்தில் குறிப்பிட்ட ஐகான்-ஐ உங்களால் காண முடியவில்லை எந்றறாள் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் சாத்தியக்கூறு குறித்து முதலீட்டாளர்களை எச்சரிக்கை விடுக்கப்படும். இடைத்தரகர்கள் பக்கத்தில் இருந்து அதே தம்ப்ஸ்-அப் அடையாளத்தை கொண்ட சிறப்பாக வடிவமைக்கப்பட்ட க்யூஆர் கோட்களையும் வெளியிடுவார்கள், இது வசதியான மற்றும் சரிபார்க்கப்பட்ட கட்டணங்களை செயல்படுத்தும்.

வேலிட் யுபிஐ ஐடிகளுடன் சேர்த்து செபி ஆனது செபி செக் (SEBI Check) என்கிற டிஜிட்டல் சரிபார்ப்பு கருவியையும் (Digital verification tool) அறிமுகப்படுத்தியுள்ளது. இது முதலீட்டாளர்கள் பதிவுசெய்யப்பட்ட இடைத்தரகர்களின் வங்கிக்கணக்கு விவரங்கள் மற்றும் யுபிஐ ஐடிகளை சுயாதீனமாக உறுதிப்படுத்த அனுமதிக்கிறது.

அக்கவுண்ட் நம்பர் மற்றும் ஐஎப்எஸ்சி குறியீடு (IFSC Code) அல்லது @வேலிட் யுபிஐ ஐடி (@valid UPI ID) ஆகியவற்றை உள்ளிடுவதன் மூலம், முதலீட்டாளர்கள் செபி செக் தளம் (SEBI Check Platform) அல்லது சார்த்தி மொபைல் ஆப் (Saarthi mobile app) மூலம் நம்பகத்தன்மையை சரிபார்க்கலாம்.

செபியின் கூற்றுப்படி, இந்த முயற்சிகள் முதலீட்டாளர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும், மோசடி அபாயத்தை குறைக்கும் மற்றும் பத்திர சந்தையின் டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டமைப்பில் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்களை பாதுகாப்பதற்கும், சந்தை ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும், இந்தியாவின் நிதிச் சுற்றுச்சூழல் அமைப்பில் டிஜிட்டல் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் அதன் உறுதிப்பாட்டை இந்த வெளியீடுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

யுபிஐ தொடர்பான மற்ற சமீபத்திய முக்கிய அப்டேட்களை பொறுத்தவரை, யுபிஐ சேவையில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்தன. யுபிஐ சேவையில் பொதுவாக பயன்படுத்தப்படும் அம்சங்களில் ஒன்றான பியர்-டு-பியர் (பி2பி) பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டன. இந்த நடவடிக்கை பயனர் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், நிதி மோசடியைத் தடுப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
SEBI Launched New Valid UPI ID Issued by NPCI SEBI Check Digital verification For Secure Payments
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X