Home
News

சாட்ஜிபிடி கொடுத்த வொர்க்-அவுட் பிளான்.. 11 கிலோ எடையை குறைத்த நபர்.. வியந்துபோன பிட்னஸ் கோச்!

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி (ChatGPT) வழங்கிய வொர்க்-அவுட் பிளானால், ஒருவர் 11 கிலோ எடையை குறைத்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும் அந்த பிளானை கண்டு உடற்பயிற்சியாளரே வியந்திருக்கிறார் என்றால் எப்படி இருக்கும்? இதுகுறித்த விவரம் இதோ.

21ஆம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சி எதிர்காலத்தில் மிகப்பெரும் மாற்றத்துக்கு தொடக்கமாக அமைப்போகிறது. இந்த செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடியானது, எப்படி மனித வேலைகள் மீது அசைக்க முடியாத ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது என்பதே அதற்கு சான்றாகும்.

சாட்ஜிபிடி கொடுத்த வொர்க்-அவுட் டிப்ஸ்.. 11 கிலோ எடையை குறைத்த நபர்!

தொழில்நுட்பத்துறையை கடந்து மற்ற எல்லாத் துறைகளிலும் சாட்ஜிபிடியின் தலையீடு இருக்கிறது. இந்த சாட்ஜிபிடியின் சாட்பாடில் கலை, கணிதம், மருத்துவம் மட்டுமல்லாமல், அறிவியல் சார்ந்த கேள்விகளை கேட்டாலும், மிகவும் புகழ்வாய்ந்த எழுத்தாளர் போலவும், விஞ்ஞானி போலவும் பதிலளிக்கிறது. இந்த பதில்கள் பெரும்பாலும் உண்மைத்தன்மை வாய்ந்ததாக இருப்பதே சாட்ஜிபிடியின் ஆதிக்கத்துக்கு காரணமாக இருக்கிறது.

இப்படி, உடல் எடைக் குறைப்பில், சாட்ஜிபிடி வழங்கிய வொர்க்-அவுட் பிளானை பின்பற்றிய கிரெக் முசென் என்பவர் 3 மாதங்களில் 11 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார். இந்த பிளானில் ஒரு ஹெவி வொர்க்-அவுட் கூட கிடையாது என்பதே ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பு மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதனால், தினுசு தினுசாக ஹெல்த் மற்றும் வொர்க்-அவுட் பிளான்களை பலர் பின்பற்றி வருகின்றனர்.

இன்னும் சிலர், பல ஆயிரங்களை செலவு செய்து உடற்பயிற்சியாளர்களின் மேற்பார்வையில் உடல் எடைக்குறைப்பில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், அமெரிக்காவில் சியாட்டலில் வசித்து வரும் கிரெக் முசென் என்பவர், பைசா செலவில்லாமல் சாட்ஜிபிடியை பயன்படுத்தி 3 மாதங்களில் 11 கிலோ எடையை குறைத்து அனைவரையும் ஆர்ச்சயப்பட வைத்திருக்கிறார்.

இதுகுறித்து கிரெக் கூறுகையில், சாட்ஜிபிடியில் உடல் எடையை குறைக்க டிப்ஸ் கேட்டேன். அதற்கு சாட்ஜிபிடி பல்வேறு ஆலோசனைகளையும் டிப்ஸ்களையும் வழங்கியது. அதில், எனக்கு பிடித்தது, எனது காலணிகளை காதவுக்கு முன்னால் வைக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், உடல் எடைக்குறைப்பில் முக்கியமான, ஜாக்கிங்கை காலையில் எழுந்த உடனேயே அது எனக்கு நினைவுப்படுத்தியது.

அதேபோல, உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் ஹெவி வொர்க் அவுட் செய்தால் அதிக பசி எடுக்கும். இதனால், தன்னை அறியாமலேயே கூடுதலாக உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். இதனால், ரிசல்ட் கிடைக்காது. அதேபோல பாதியில் நிறுத்தவிடவும் தோன்றும். இதை தவிர்த்து சுலபமான வொர்க்-அவுட் செய்தால் எந்தவித சிக்கலும் இல்லாமல், மெதுவாக உங்களுக்கு தெரியமாலேயே உடல் எடை குறையும், ஆரோக்கியமும் பெருகும் என்று டிப்ஸ் கொடுத்தது.

இப்படி மிகவும் சுலபமான ஆலோசனைகளை மட்டுமே சாட்ஜிபிடி கொடுத்தது. ஆனால், அது மிகப்பெரும் மாற்றத்தை எனக்கு கொடுத்துள்ளது. இப்போது, நான் 11 கிலோ எடையை குறைத்துள்ளேன். இதுகுறித்து உடற்பயிற்சியாளர்களிடம் தெரியப்படுத்தினேன். அவர்களும் அவை பலன் தரக்கூடிய டிப்ஸ் என்றே சொன்னார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Seattle Based Man By Following ChatGPT Created Diet And Workout Plan Then Loses 11 kgs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X