ரூ.4000 விலை குறைப்பு.. ரூ.10000 பட்ஜெட்க்கு இறங்கிய 7GB ரேம், 5000mAh பேட்டரி, 50MP கேமரா போன்.. என்ன மாடல்?
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய இரண்டு டெலிகாம் நிறுவனங்களுமே இந்தியா முழுவதுமுள்ள அதன் 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் தத்தம் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட்டதாக அறிவித்துள்ளன.
இன்னமும் நீங்கள் ஒரு 4ஜி பயனராக இருகிறீர்களா? உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இல்லாத காரணத்தால் நீங்கள் தொடர்ந்து 4ஜி சேவைகளையே பயன்படுத்தி வருகிறீர்களா? 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தின் கீழ், பட்ஜெட் விலையில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை தேடிக்கொண்டு இருக்கீறீர்களா? ஆமென்றால் நீங்கள் செல்ல வேண்டியது அமேசான் இந்தியா வலைத்தளத்திற்கு!

ஏனென்றால், உள்நட்டு நிறுவனமான லாவவின் மிகவும் பிரபலமான பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது 27% நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது; அதாவது குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் மீது முழுதாக ரூ.4000 என்கிற விலை குறைப்பு கிடைக்கிறது. அதென்ன மாடல்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதை நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக ரூ.10,999 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம், இதன் அசல் விலை ரூ.14,999 ஆகும்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வைட்வைன் எல்1 DRM ப்ரொடெக்ஷன் உடனான 6.5-இன்ச் எச்டி பிளஸ் 90ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் 2.2GHz மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
7ஜிபி வரை ரேம்-ஐ விரிவாக்கம் செய்யக்கூடிய அம்சத்துடன் வரும் லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 50எம்பி மெயின் கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இதன் கேமரா அமைப்பில் 2கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவும் உள்ளது. முன்பக்கத்தில் 8ம்பி செல்பீ கேமரா உள்ளது.
நேரடி தள்ளுபடி மட்டுமல்ல லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் மீது எக்ஸ்சேஞ்ச் மற்றும் பேங்க் ஆஃபர்களும் அணுக கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.11,200 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். இதற்காக நீங்கள் உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்ய வேண்டி இருக்கும். அதன் மாடல் மற்றும் நிலையை பொறுத்தே உங்களுக்கான எக்ஸ்சேஞ்ச் வேல்யூ நிர்ணயம் செய்யப்படும்
வங்கி சலுகைகளை பொறுத்தவரை, எச்டிஎச்பி பேங்க் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனையின் கீழ் ரூ..500 உடனடி தள்ளுபடி கிடைக்கும். கோடக் வங்கி டெபிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனையின் கீழ் ரூ.750 தள்ளுபடி கிடைக்கும். ஒருவேளை நீங்கள் எச்டிஎச்பி வங்கி டெபிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனையின் கீழ் லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.500 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
ஆஃபர் விலையில் கிடைக்கும் லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா என்கிற கேள்விக்கான விடை, இந்த ஸ்மார்ட்போனின் நிறைகள் மற்றும் குறைகளில் தான் உள்ளது. நிறைகளை பொறுத்தவரை, இது ப்ளொட்வேர் இல்லாத மென்பொருள் அனுபவத்தை வழங்குகிறது; கூடவே இது விலையை மீறிய நல்ல திடமான வடிவமைப்பையும் பெற்றுள்ளது; கடைசியாக இது நல்ல பேட்டரி லைஃப்பையும் வழங்குகிறது.
லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் குறைகளை பற்றி பேசும் போது, இதே சற்றே "பருமனான" ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இதன் கேமரா செட்டப்பில் உள்ள மேக்ரோ & விஜிஏ சென்சார் சுமாரான அவுட்புட்டையே வழங்குகின்றன; கடைசியாக இதன் சார்ஜிங் ஸ்பீட் ஆனது மெதுவானதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








