Home
News

இந்த 3 Jio பிளான்களும் இருக்கும் நம்பிக்கையில் தான்.. பட்ஜெட் வாசிகள் வண்டி ஓட்டுகிறார்கள்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் பல நகரங்களுக்கு 5ஜி சேவையை வழங்க உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

28 நாட்கள் வேலிடிட்டி

அதாவது ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. மேலும் இந்நிறுவனத்தின் திட்டங்கள் அதிக சலுகைகளை வழங்குகிறது என்றே கூறலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அருமையா ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இப்போது அந்த திட்டங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

குறிப்பாக பட்ஜெட் விலையில் ஒரு நல்ல திட்டத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது. மேலும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்கும் சில ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மைகிடைக்கிறது. மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

  கட்டண உயர்வு

கட்டண உயர்வு

ஒவ்வொரு வருடமும் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கட்டண உயர்வு அறிவித்த பின்பு தான் ஜியோ நிறுவனம் தனது ரீசார்ஜ் கட்டண உயர்வு அறிவிக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜியோ நிறுவனம் விரைவில் கட்டண உயர்வு அறிவிக்கலாம் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

 தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்

தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்

TRAI எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர்கள், வருவாய் குறித்த சில அறிக்கையை வெளியிட்டது. இதில் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட ஜியோ நிறுவனம் அதிகமானவருவாயைப் பெற்றுள்ளது.

வெளியான அறிக்கையின்படி, ஜியோ நிறுவனம் 4279 கோடி வருவாயும், ஏர்டெல் நிறுவனம் 2179 கோடி வருவாயும் பெற்றுள்ளன. குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தை விட இரண்டு மடங்கு அதிக லாபத்தை பெற்றுள்ளது ஜியோ நிறுவனம்.

விரைவில்...

விரைவில்...

இருந்தபோதிலும் ARPU எனப்படும் சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் கிடைக்கும் வருவாயைப் பொறுத்தே இங்கு கட்டண உயர்வு தீர்மானிக்கப்படுகிறது.அந்தவகையில் ஜியோ ARPU 108 ரூபாய் எனவும், ஏர்டெல் ARPU 190 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜியோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் லாபம் அதிகமாக இருக்கிறது என்றாலும் கூட ஒருவாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாகவே உள்ளது. தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் ARPU வருவாய் நல்ல இடத்தில் என்றே கூறலாம்.

ARPU வருவாயை வைத்து தான் ஒவ்வொரு ஆண்டும் கட்டண உயர்வு அறிவிக்கப்படுகிறது. தற்போது ஜியோவின் ARPU வருவாய் குறைவாக இருப்பதால் விரைவில் இந்நிறுவனம் கட்டண உயர்வு கொண்டுவரும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஜியோ 5ஜி சேவை வந்துவிட்டது, ஆனாலும் 4ஜி கட்டணங்களை உயர்த்தினால் அது சரியாக இருக்காது.

Best Mobiles in India

English summary
Searching Best 28 Days Validity Prepaid Plan From Jio Under Rs 300 You have 3 best options: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X