Google Search-ல் குறுக்கு வழி.. இனிமேல் "இதை" செஞ்சா மட்டும் போதும்!

|

வெளிப்படையாக ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்றால்... கூகுளின் (Google) சேவைகள் இல்லாமல் நம்மால் ஒவ்வொரு நாளையும், அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது!

குறிப்பாக கூகுள் சேர்ச் (Google Search) இல்லையென்றால்.. நம்மில் பலரும் அப்படியே ஸ்தம்பித்து விடுவோம்.

அந்த பட்டியலில் நீங்களும் ஒருவர் என்றால்.. கூகுளின் ஒரு சமீபத்திய அறிவிப்பு.. முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!

அதென்ன அறிவிப்பு!

அதென்ன அறிவிப்பு!

உலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுள், அதன் சேர்ச் ஆன் 22 (Search on 22) என்கிற நிகழ்வின் வழியாக கூகுள் மேப்ஸ் (Maps) மற்றும் நிறுவனத்தின் மற்ற சேவைகளுக்கான அப்டேட்களுடன் சேர்த்து, கூகுள் சேர்ச் (Search) தொடர்பான பல புதிய அம்சங்களையும் அறிவித்துள்ளது!

அதில் சில அம்சங்கள், கூகுள் சேர்ச் யூசர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி உள்ளது என்றே கூறலாம்! அதென்ன அம்சங்கள்? அதனால் என்ன பயன்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

இனிமேல் குறுக்கு வழி தான்!

இனிமேல் குறுக்கு வழி தான்!

கடந்த பல ஆண்டுகளாகவே, கூகுள் நிறுவனம் அதன் Search-ஐ சிறப்பாகவும், வேகமாகவும் மாற்ற பெரிய அளவில் பணியாற்றி வருகிறது.

அதனொரு பகுதியாக, Google App-இல் உள்ள Search Bar-க்கு கீழே, பயனர்களுக்குத் தேவைப்படும் பல்வேறு சேர்ச் டூல்களுக்கான (Search tools) புதிய ஷார்ட்கட்கள் (Shortcuts) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

என்னென்ன ஷார்ட்கட்கள்?

என்னென்ன ஷார்ட்கட்கள்?

சேர்ச் பாரில் டைப் செய்ய வேண்டிய வேலை இல்லாமலேயே.. சில தேடல் முடிவுகளை பெற உதவும், சில முக்கியமான குறுக்கு வழிகள், கூகுள் சேர்ச்சில் சேர்ந்துள்ளன!

அதாவது ஷாப்பிங் (Shopping), மொழிபெயர்த்தல் (Translating), இசையை அடையாளம் காண்பது (Identifying music) அல்லது கேமரா ரோலில் இமேஜ் சேர்ச் (Image search in the camera roll) போன்ற 'ஷார்ட்கட்' விருப்பங்களை நீங்கள் பெறுவீர்கள்.

TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!

உடனே Google App-ஐ திறந்து விடாதீர்கள்!

உடனே Google App-ஐ திறந்து விடாதீர்கள்!

ஏனென்றால், கூகுள் சேர்ச்சிற்கு வந்துள்ள இந்த புதிய ஷார்ட்கட்கள் ஆனது, தற்போது வரையலாக iOS க்கான கூகுள் ஆப்பில் மட்டுமே அணுக கிடைக்கிறது.

கூடிய விரைவில் இது அனைத்து வகையான ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்கும் வந்து சேரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஷார்ட்கட்ஸ் மட்டும் அல்ல.. இன்னும் இருக்கு!

ஷார்ட்கட்ஸ் மட்டும் அல்ல.. இன்னும் இருக்கு!

நீங்கள் என்ன தேட விரும்புகிறீர்கள் என்பதை முன்கூட்டியே கணித்து, சில பரிந்துரைகளையும் (Suggestions) மற்றும் அது தொடர்பான பல கேள்விகளையும் (Queries) வழங்குவதில் கூகுள் சேர்ச் ஏற்கனவே சிறப்பாக செயல்படுகிறது.

அதை இன்னும் மேம்படுத்தும் நோக்கத்தின் கீழ், வரும் மாதங்களில், நீங்கள் டைப் செய்யும் போதே அது தொடர்பான கன்டென்ட்-ஐயும் நீங்கள் பார்க்க தொடங்குவீர்கள். இதன் மூலம் உங்களால் முன்னெப்போதை விடவும் வேகமான முடிவுகளை பெற முடியும்.

இனி.. முழு கேள்வியையும் டைப் செய்ய வேண்டாம்!

இனி.. முழு கேள்வியையும் டைப் செய்ய வேண்டாம்!

புதிய ஷார்ட்கட்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட சஜ்ஜஷன்ஸ் உடன் சேர்த்து, நீங்கள் ஒரு முழு கேள்வியையும் டைப் செய்யும் நேரத்தையும், உங்கள் முயற்சியையும் குறைக்கும் நோக்கத்தின் கீழ் கூகுள் சேர்ச்சில், இன்னும் திறமையான Search Query Formation Option ஒன்றும் இணைய உள்ளது.

Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!

விஷுவல் மேம்பாடுகளும் இருக்கும்!

விஷுவல் மேம்பாடுகளும் இருக்கும்!

பயனர்கள், தங்களுக்கான தேடல் முடிவுகளை விரைவாக கண்டறிய உதவும் நோக்கத்தின் கீழ், கூகுள்
நிறுவனம் அதன் சேர்ச் ரிசல்ட்கள் ஆனது எவ்வாறு காட்டப்பட வேண்டும் என்பதையும் சீரமைத்துள்ளது.

அதாவது, இனிமேல் உங்களின் கூகுள் சேர்ச் ஆனது டெக்ஸ்ட்களுக்கு மட்டுப்படுத்தப்படாது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், இனிமேல் உங்களுக்கான தேடல் முடிவுகளில் தொடர்புடைய சோர்ஸ்களிடம் இருந்து கிடைக்கும் கன்டென்ட் மட்டுமின்றி, படங்கள் மற்றும் வீடியோக்களும் காண்பிக்கப்படும்!

Best Mobiles in India

English summary
Search On 22 Event Google Search Get New Shortcuts Improved Suggestions And More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X