Home
News

கூகுளில் 'தானோஸ்' டைப் பண்ணி இன்பைனிடி கவுன்ட்லெட்-ஐ கிளிக் பண்ணுங்க! மேஜிக் பாருங்க...

இது சூப்பர் ஹீரோ திரைப்பட உரிமத்தை புதுப்பிப்பதற்காக மார்வெல்-ன் 11 வருடகால பிரச்சாரத்தின் உச்சநிலை ஆகும்.

அவென்சர்ஸ் : இன்பைனிடி வார் திரைப்படத்தில் தானோஸ் தனது விரலை சொடுக்கி பிரபஞ்சத்தின் பாதியை முற்றிலும் அழித்தபோது, பெரும்பாலானோர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்திருக்கும். இருப்பினும் மற்றவர்கள் தங்களுக்கு இந்த சக்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்திருப்பர். " கேளுங்கள், நீங்கள் பெறுவீர்கள் " என்கிறது கூகுள். எப்படியென்று குழப்பமா? இதோ.

கூகுளில் 'தானோஸ்' டைப் பண்ணி இன்பைனிடி கவுன்ட்லெட்-ஐ கிளிக் பண்ணுங்க!

அவென்ஜர்ஸ் : எண்ட்கேம் திரைப்படம் வெளியானதை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் தனது தேடுபொறியில் புதிய அம்சத்தை சேர்த்துள்ளது.கூகுள் தேடுபொறியில் தானோஸ் என்ற பெயரை தேடும்போது, மேட் டைட்டனை பற்றிய வழக்கமான செய்திகள் மற்றும் விவரங்களை காட்டும் அதேசமயம் மேல் வலதுபுறம் இன்பைனிடி கவுன்ட்லெட்-ன் (இரத்தினம் பதிக்கப்பட்ட கையுறை) புதிய ஐகானும் உள்ளது. அதை கிளிக் செய்வதன் மூலம் தானோஸ் கையுறை ஒரு சொடுக்கு போட்டு, உங்கள் தேடல் முடிவுகளில் பாதியை அழித்து காணாமல் போக செய்துவிடும்.
கூகுளில் 'தானோஸ்' டைப் பண்ணி இன்பைனிடி கவுன்ட்லெட்-ஐ கிளிக் பண்ணுங்க!

அவ்வாறு நடக்கும் அதிசயத்தை ஒரு முறை பார்த்தால் போதாது. மீண்டும் மீண்டும் சொடுக்கு போட வைக்கும்!.

கூகிள் இவ்வாறு செய்வதை பார்ப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. அந்நிறுவனம் கடந்த காலத்தில் தனது தேடுபொறியில் இதுபோன்ற புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளனர் மற்றும் இந்த புதிய அவென்ஜர்ஸ் திரைப்படம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு ஆகும்.

கூகுளில் 'தானோஸ்' டைப் பண்ணி இன்பைனிடி கவுன்ட்லெட்-ஐ கிளிக் பண்ணுங்க!

இது சூப்பர் ஹீரோ திரைப்பட உரிமத்தை புதுப்பிப்பதற்காக மார்வெல்-ன் 11 வருடகால பிரச்சாரத்தின் உச்சநிலை ஆகும். 2008 ஆம் ஆண்டில் அயர்ன் மேன் வெளியீட்டின் மூலம், இந்நிறுவனம் ஜோயல் ஷூமேக்கரின் 'பேட்மேன் ஃபார்எவர்' மற்றும் ஹாலே பெர்ரி-ன் 'கேட்வுமன்' என்ற விரும்பத்தகாத நாட்களில் இருந்து நம்மை வெகுதூரம் அழைத்துச் செல்வதற்கான நீண்டபயணத்தை தொடங்கியது.

உங்கள் இதயத்தை கல்லாக்கி கொண்டு உங்கள் தேடல் முடிவுகளை நீங்கள் அழித்தாலும் கூட, அந்த ஐகானை மீண்டும் ஒருமுறை கிளிக் செய்வதன் மூலம் அழிந்துபோன தேடல் முடிவுகளை மீண்டும் தோன்ற வைக்கலாம். பாதியாக இருந்த தேடல் முடிவுகளை முழுமையான எண்ணிக்கைக்கு திரும்பசெய்யலாம்.

கூகுளில் 'தானோஸ்' டைப் பண்ணி இன்பைனிடி கவுன்ட்லெட்-ஐ கிளிக் பண்ணுங்க!

அதாவது இதுபோல அவென்சர்ஸ் எல்லோரையும் மீண்டும் திரும்பி வர வைக்க ஒரு வழி கண்டுபிடிப்பார்களா? அல்லது இன்னும் அதையும்தாண்டி மிகப்பெரிய தாக்கத்திற்கு ஆளாகிறதா?

Best Mobiles in India

English summary
Search For Thanos On Google Click On Infinity Gauntlet Twice To See Major Endgame Spoiler: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X