சியோமி, ரெட்மி போன் யூசர்கள் தலையில் இடி.. டிஸ்பிளேவில் இதை செஞ்சிட்டா.. பட்டன், ஸ்பீக்கர், பேட்டரி காலி!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்பிளே தொடர்பான முக்கிய எச்சரிக்கை (Display Warning) ஒன்றை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை வாரண்டி (Warranty) உடன் தொடர்புடையது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன எச்சரிக்கை? டிஸ்பிளேவில் என்ன செய்ய கூடாது? இதோ விவரங்கள்:
ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்களுடன் (Screen Protectors) தொடர்புடைய அபாயங்கள் குறித்து சியோமி நிறுவனம் சில பகீர் தகவல்களை பகிர்ந்துள்ளது. ஷாவ்மீ மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் போனின் டிஸ்பிளேக்களை பாதுகாக்க, லிக்விட் யுவி அடிசிவ் ஸ்க்ரீன் ப்ரொடெக்டர்களை (Liquid UV adhesive screen protectors) பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏனென்றால் பாதுகாப்பு நோக்கத்திற்காக, ஸ்மார்ட்போன் டிஸ்பிளேக்களில் ஒட்டப்படும் லிக்விட் யுவி அடிசிவ் ஸ்க்ரீன் ப்ரொடெக்டர்கள் ஆனது அந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் பாதகமான விளைவுகளை (Potential risks) தான் ஏற்படுத்தும் என்கிற உண்மையை ஷாவ்மீ நிறுவனம் - ஒரு ட்வீட் வெளியாக - வெளிப்படுத்தி உள்ளது.
நவீன ஸ்மார்ட்போன்களில் ஸ்க்ராட்ச்-ரெசிஸ்டென்ட் கிளாஸ் (Scratch-resistant glass) காணப்பட்டாலும் கூட, அவைகள் மணல், சாவிகள் அல்லது நாணயங்கள் போன்ற கடினமான பொருட்களால் சேதமடைய வாய்ப்புள்ளது. இத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து தங்கள் டிஸ்பிளேவை பாதுகாக்க பெரும்பாலான பயனர்கள் கூடுதல் பாதுகாப்பை வழங்க ஸ்க்ரீன் ப்ரொடெக்டர்களை தேர்வு செய்கிறார்கள்.

குறிப்பாக, லிக்விட் யுவி அடிசிவ் ஸ்க்ரீன் ப்ரொடெக்டர்கள் ஆனது ஸ்க்ரீன் மற்றும் கிளாஸ் அடுக்குகிற்கு (Between the screen and glass layer) இடையே உள்ள வலுவான பிணைப்பு திறனை (Strong bonding capabilities) உண்டாக்குவதன் காரணமாக.. இவ்வகை ஸ்க்ரீன் ப்ரொடெக்டர்களை பலரும் விரும்புகின்றனர். ஆனால் ஷாவ்மீ நிறுவனம், இவ்வகை ஸ்க்ரீன் ப்ரொடெக்டர்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை (Warning) விடுத்துள்ளது.
இது குறித்த ட்வீட்டில், லிக்விட் யுவி அடிசிவ் ஸ்க்ரீன் ப்ரொடெக்டர்கள் ஆனது சாத்தியமான குறைபாடுகளை (Potential drawbacks) கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் செயல்பாட்டை சமரசம் (Compromise Device's functionality) செய்து, அந்த ஸ்மார்ட்போனிற்கான வாரண்டியை (Warranty) கெடுக்கிறது. இவ்வகை ப்ரொடெக்டர்களில் பயன்படுத்தப்படும் லிக்விட் பிசினை (Liquid adhesive) கொண்டுள்ளது.

அந்த லிக்விட் பிசின் ஸ்மார்ட்போனில் உள்ள பிஸிக்கல் பட்டன்கள் (physical keys), சார்ஜிங் போர்ட் (charging port), ஸ்பீக்கர் ஹோல்கள் (speaker holes) மற்றும் பேட்டரி கவர் (battery cover) உள்ளிட்ட ஸ்மார்ட்போனின் பல்வேறு கூறுகளுக்குள் ஊடுருவும் தன்மையை (propensity) கொண்டுள்ளது.
லிக்விட் பிசினின் இந்த ஊடுருவல் எதிர்பாராத ரீஸ்டார்ட்கள் ( (Unexpected restarts), பட்டன் செயலிழப்புகள் (Button malfunctions ), ஸ்பீக்கர் தொந்தரவுகள் (speaker disturbances) மற்றும் பேட்டரி கவரின் லெதரை பிரித்தல் (Detachment of the Battery cover's leather) போன்ற எண்ணற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
எனவே, சிறந்த யூசர் எக்ஸ்பீரியன்ஸிற்காக, லிக்விட் யுவி அடிசிவ் ஸ்க்ரீன் ப்ரொடெக்டர்களை தவிர்க்குமாறு ஷாவ்மீ பரிந்துரைத்துள்ளது. அதற்கு பதிலாக டெம்பர்டு கிளாஸ், நான்-டெம்பர்ட் அல்லது எலக்ட்ரோஸ்டேடிக் பிலிம்ஸ் போன்ற பாதுகாப்பான விருப்பங்களை கருத்தில் கொள்ளுமாறும் பயனர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கண்ட விருப்பங்கள் ஆனது லிக்விட் ப்ரொடெக்டர்களை போல் செயல்படாது. இவைகளுக்கு புற ஊதா-அடிப்படையிலான பசை அல்லது பிசின் பயன்பாடு தேவைப்படாது. ஆகையால் டெம்பர்டு கிளாஸ் (tempered glass), நான்-டெம்பர்ட் ( non-tempered) அல்லது எலக்ட்ரோஸ்டேடிக் பிலிம்ஸ் (electrostatic films) போன்றவைகளால் உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறனில் எந்த விதமான சமரசமும், பாதிப்பும் ஏற்படாது.


Click it and Unblock the Notifications