Home
News

ஒரே ஸ்கிராட்ச் கார்டு.. ரூ.51.51 லட்சம் பரிசு.. பெங்களூரு பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி.. என்னாச்சு?

ஸ்கிராட்ச் கார்டு ஸ்கேம் (Scratch card scam) என்ற பெயரில் புது மோசடி இந்திய மக்களை மிகவும் மோசமாக தாக்கி வருகிறது. இந்த மோசடியில் சிக்கி, பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 18 லட்சம் வரை இழந்திருப்பது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஸ்கிராட்ச் கார்டு (Scratch card) பற்றி தெரியாத மக்களே இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஸ்கிராட்ச் கார்டு பற்றி அறிந்திருக்கிறார்கள். லக்கி ட்ரா (Lucky draw), ஜாக்பாட் (Jackpot) என்ற பெயரில் குழந்தைகளுக்கு சில பொம்மைகளையும், விளையாட்டு பொருளாக பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகளையும் வழங்கும் ஒரு விளையாட்டாக இன்றும் கூட இந்த ஸ்கிராட்ச் கார்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஒரே ஸ்கிராட்ச் கார்டு.. ரூ.51.51 லட்சம் பரிசு.. காத்திருந்த அதிர்ச்சி!

ஸ்கிராட்ச் கார்டு மோசடி (Scratch card scam):

சிறிய கடைகளின் பெரிய அட்டையில் பல பரிசு பொருட்களை தொங்கவிட்டு, அதன் கீழ் சில குறிப்பிட்ட என் அல்லது ஸ்டார்களை அச்சிட்டிருப்பார்கள். 1 ரூபாய்க்கு 1 ஸ்கிராட்ச் கார்டு (scratch card) என்ற விதத்தில் சிறுவர்கள் இந்த ஸ்கிராட்ச் கார்டு அட்டைகளை வாங்கி, ஸ்கிராட்ச் செய்து, அந்த அட்டையில் என்ன அச்சிடப்பட்டுள்ளது என்பதை பார்க்க ஆர்வமாக இருப்பார்கள். லக் (Luck) இருக்கும் பச்சத்தில் சிலர் பரிசுகளை (Prize) பெறுவார்கள்.

இன்னும் சிலர் லக் அடிக்கும் வரை சீட்டுகளை வாங்கி சுரண்டிக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு கார்டாக சுரண்டி பரிசுகளை பெறுவதில் குழந்தைகள் ஆர்வமாக இருப்பார்கள். இதை ஒரு விளையாட்டாக சிறுவர்களிடம் அறிமுகம் செய்திருந்தாலும், பெரியவர்களுக்கும் இந்த ஸ்கிராட்ச் கார்டு மோகம் இன்னும் இருக்கிறதென்று தான் நாம் கூற வேண்டும். காரணம், லாட்டரி சீட்டு, கூகுள் பே ஸ்கிராட்ச் கார்டு ரிவார்ட் (Google Pay Scratch Card Reward) என்று மக்கள் ஸ்கிராட்ச் கார்டுகளை ஆவலுடன் சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கூகுள் பே (Google Pay) நிறுவனம் அதன் பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்தபோது, அதிகமான பயனர்களை பெறுவதற்கு, இந்த ஸ்கிராட்ச் கார்டு யுக்தியை தான் கையாண்டிருந்தது என்பதை இங்கு நினைவுபடுத்துகிறோம். ஸ்கிராட்ச் கார்டு ரிவார்ட் (Scratch card reward) என்ற பெயரில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிவர்தனைக்குக் ஒரு ஸ்கிராட்ச் கார்டு வழங்கப்பட்டது. காகித வடிவில் சுற்றித்திரிந்த ஸ்கிராட்ச் கார்டுக்கு கூகுள் நிறுவனம் டிஜிட்டல் அடையாள வழங்கியது.

ஒரே ஸ்கிராட்ச் கார்டு.. ரூ.51.51 லட்சம் பரிசு.. காத்திருந்த அதிர்ச்சி!

பெங்களூரு பெண்ணிடம் நூதன முறையில் ஆசைகாட்டி ரூ.18 லட்சத்தை திருடிய மோசடிகார்கள்:

இந்த ஸ்கிராட்ச் கார்டு மூலம் பல பயனர்களுக்கு ரூ. 1000 மேல் கூட பண நன்மை கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் ஆசை காட்டி மக்களை தன் வசம் ஈர்த்தது. பல கோடி மக்கள் இதை ட்ரை செய்ய முயன்று, சிலருக்கு அதிகபட்சமாக 10 ரூபாய் வரை கிடைப்பதே அப்பூர்வமாக இருந்தது. பிறகு நாளடைவில் கூகுள் பே, பணமாக வழங்குவதை நிறுத்திவிட்டு சில தயாரிப்பு பொருட்களுக்கு கூப்பன்களை வழங்க துவங்கியது.

இதே யூகித்தியை இப்போது சில ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் (Online shopping sites) பயன்பத்தி வருகிறது. இதை சில மோசடிகாரகள் இப்போது அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் ஆன்லைன் ஷாப்பிங் செய்ததற்கு, அவருக்கு ஒரு ஸ்கிராட்ச் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதில் நேரடியாக அவர் ரூ. 51.51 லட்சம் வென்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த ஸ்கிராட்ச் கார்டு கீழே ஒரு மொபைல் ஏன் குறிப்பிடப்பட்டள்ளது.

பரிசு தொகையை பெற இந்த மொபைல் எண்ணை (Mobile number) அழைக்கவும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணிற்கு அந்த பெண்மணி அழைப்புவிடுத்து பேசியிருக்கிறார். மறுமுனையில் பேசிய மோசடிகாரகள் தங்களுக்கு விழுந்த பரிசு தொகையை பெறுவதற்கு பெங்களூரு அரசின் சட்டப்படி, பரிசு தொகைக்கு 4% சதவீத வரி செலுத்த வேண்டும். அதை நீங்கள் செலுத்தினால் தான் இந்த பெருந்தொகை ரிலீஸ் செய்யப்படும் என்று அவரை நம்பவைத்துள்ளனர்.

அந்த பெண்ணும் இதை நம்பி கட்டணத்தை செலுத்தி இருக்கிறார். இந்த முறையில் அவரிடமிருந்து ரூ. 18 லட்சம் பெறப்பட்டு அவர் இறுதியில் ஏமாற்றப்பட்டிருக்கிறார். இறுதியில் அந்த பெண் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார் என்பதை உணர்ந்து, மோசடிக்காரர்களிடம் கேள்வி கேட்க, மொபைல் எண்ணை ஸ்விட்ச் ஆஃப் (Switch off) செய்துவிட்டு மோசடிக்காரர்கள் எஸ்கேப் (Escape) ஆகிவிட்டனர். இதுபோன்ற மோசடிகளில் மக்கள் சிக்க வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Scratch Card Scam Alert Bengaluru Women Lost Rs 18 Lakh For Getting The Reward Amount Of Rs 51.51 Lakh Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X