தள்ளாட்ட நடனமாடும் இரு இறந்த நட்சத்திரங்கள்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..
இரண்டு இறந்த நட்சத்திரங்கள் ஒன்றையொன்று சுற்றி வருவதும், ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒன்று மற்றொன்றை மறைப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-ல் உள்ள தி ஜிவிக்கி டிரான்ஸியன்ட் ஃபெசிலிடி அமைப்பு(Zwicky Transient Facility- ZTF) வானில் தோன்றி மறையும் பிரகாசமானவற்றிற்காக தனது இரவுகளை செலவளித்துவருகிறது. அக்கல்லூரியின் பட்டதாரி மாணவரான கெவின் பர்கெட் கடந்த மாதங்களின் ZTF தரவுகளை ஒன்றிணைத்து பார்க்கும்போது விசித்திரமான ஒளிரும் முறைமையை கவனித்தார். இந்த கண்டுபிடிப்பு தொடர்பான புதிய ஆய்வினைப் அதன் முன்னணி எழுத்தாளர் கெவின் விளக்கமளிக்கையில், அந்த பிரகாசமான முறைமையானது ஒரு ஜோடி வெள்ளை குள்ள நட்சத்திரங்களால் உருவாக்கப்பட்டது எனவும், அவை இறந்த அல்லது எரிபொருள் தீர்ந்த சூரியன் போன்ற நட்சத்திரங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மற்றொன்றை விட பிரகாசமானதாவும் உள்ளது
ZTF J1539 + 5027 என அறியப்படும் இந்த இரு வெள்ளை குள்ள நட்சத்திரங்கள், ஒன்றையொன்று சுற்றிவரும் நிலையில், இரண்டும் பூமியின் அளவே இருந்தாலும் ஒன்று மட்டும் சற்று சிறியதாகவும், மற்றொன்றை விட பிரகாசமானதாவும் உள்ளது. பிரகாசம் குறைவான ஒன்று பிரகாசமானதை கடந்து செல்லும்போது மறைப்பதால் இந்த ஜோடி மின்னுவது போல தோற்றமளிக்கிறது.

5.4 நிமிடங்களில் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன
இதுவரை பார்த்ததிலேயே இரண்டாவது மிக வேகமான வெள்ளை குள்ள நட்சத்திர ஜோடிகளான இது( முதலாவது வேகமான ஜோடி 5.4 நிமிடங்களில் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன), ஒன்று மற்றொன்றை முழுவதுமாக மறைப்பதில் வேகமான பைனரி அமைப்பு ஆகும்.

2,00,000 ஆண்டுகளில் இணையலாம்
இதுபோன்ற பைனரி அமைப்புகள் காலப்போக்கில் இணைந்து விடுமா அல்லது இரண்டும் தனித்தனியாகவே இருந்து ஒன்றையொன்று சுற்றிவருமா என்ற விவாதங்கள் தொடர்ந்து
விஞ்ஞானிகள் மத்தியில் நடைபெற்றுவருகின்றன. அவை வெளியிட்டு வரும் ஈர்ப்புவிசை அலைகளால் இன்னும் சுமார் 2,00,000 ஆண்டுகளில் இணையலாம் என கெவின் தெரிவித்துள்ளார்.

மற்றொன்றை விழுங்கிவிடுவதையே பார்த்துள்ளனர்
ஆனால், சுமார் 100,000 ஆண்டுகளில் சிறிய நட்சத்திரமானது தனது பொருட்களை பெரிய நட்சத்திரத்தில் இணைக்க துவங்கும். இது அதன் சுற்றுப்பாதையை உறுதிப்படுத்துவதன் மூலம் மேலும் சுருங்குவதை தடுக்க முடியும்.
இதுபோன்ற அமைப்புகளை கண்டறிவது மிகவும் அரிதான ஒன்று என கூறும் கெவின், பெரும்பாலும் விஞ்ஞானிகள் அடிக்கடி பைனரி அமைப்பில் உள்ள ஒரு நட்சத்திரம் மற்றொன்றை விழுங்கிவிடுவதையே பார்த்துள்ளனர் என்கிறார்.

இது விசித்திரமான பைனரியாக இருக்கும்
ஆனால் இந்த பைனரி அமைப்பானது பல்வேறு வழிகளில் தனித்துவமானதாக உள்ளது. "இது விசித்திரமான பைனரியாக இருக்கும் காரணத்தால் தான் நாம் கண்டறிந்துள்ளோம்." என்கிறார். இந்த அமைப்பில் உள்ள சிறிய பிரகாசமான நடசத்திரமானது அசாதாரணமாக சுமார் 50,000 கெல்வின் (சுமார் 90,000 டிகிரி பாரன்ஹீட், அல்லது 49,982 டிகிரி செல்சியஸ்) அளவிற்கு சூடாக இருக்கிறது. இது சூரியனை விட 10 மடங்கு அதிகம்.
இந்த தீவிர வெப்பநிலையானது இந்த நட்சத்திரத்தை பிரகாசமானதாகவும் அதன் சுற்றுப்பாதை ஆழமானதாகவும் மாற்றுவதால், ZTF தரவுகளில் கண்டுபிடிக்க எளிதாக இருந்தது. இதேபோன்ற பல்வேறு அமைப்புகள் குளிர்ந்ததாக இருப்பதால், கண்டுபிடிக்க மிகவும் கடினமானதாகிறது.


Click it and Unblock the Notifications