யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

By Keerthi
|

நாம் யாரும் வேற்று கிரக வாசிகளை பார்த்தது கூட இல்லை.

ஆனால், பன்னெடும்காலமாகவே 'வேற்றுக்கிரக வாசிகள் பறக்கும் தட்டில் வந்தார்கள், போனார்கள்' என்று கதை விட்டுக் கொண்டு கற்பனையாய் பேசுவது வாடிக்கைதான்.

இந்நிலையில்," வாருங்கள்.. எல்லாருமாக சேர்ந்து ‘நாங்க பூமியில இருக்கோம்' என்று தொடர்ந்து மெசேஜ் அனுப்புவோம்' என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

நமது குழந்தைப் பருவத்திலிருந்தே ஆங்காங்கே பறக்கும் தட்டுகள் பறப்பதாகவும் வேற்றுக்கிரகவாசிகள் எட்டிப் பார்த்ததாகவும் உலகம் முழுவதும் கதைகள் உலா வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அது மட்டுமின்றி மேலே இருந்து விழுந்து எரிந்த பறக்கும் தட்டில் இருந்து விழுந்து எரிந்து கருகிப்போன வேற்றுக்கிரக வாசியின் அழுகிய உடலை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்று தகவல் கசியவிட்ட சீன ஆசாமி சமீபத்தில் கைது செய்யப்பட்டது தனிக்கதை.

இதற்கிடையில், அமெரிக்காவில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் உள்பட பல தரப்பினர் சேர்ந்து ‘தி லோன் சிக்னல்' என்ற புராஜக்ட் ஆரம்பித்திருக்கிறார்கள்.

Click Here For New Concept Smartphones Gallery

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

அதன் மூலம் பூமியில் இருந்து சுமார் 17.6 ஒளி ஆண்டுகள் தொலைவில் (166 லட்சம் கோடி கி.மீ.) உள்ள நட்சத்திர குடும்பம் ‘கிளயீஸ் 526'. இதன் கோள்களில் நம்மைப் போல உயிரினங்கள் வசிப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம் இருப்பதாக தெரிகிறது.

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

அந்த ஏரியாவை குறி வைத்து சக்தி வாய்ந்த சிக்னல்களை அனுப்ப இந்த குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

இது குறித்து டீமின் தலைமை அதிகாரி ஜேக்கப் ஹக் மிஸ்ரா,"வேற்றுக்கிரக வாசிகளுக்கு மெசேஜ் அனுப்புவது என்பது ஆரம்பத்தில் காமெடி போல தெரியும்.

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

ஆனால், இப்போது இல்லா விட்டாலும் எப்போதாவது, வேற்றுக்கிரக வாசிகளை தொடர்பு கொண்டு விட வேண்டும் என்பது நம் இலக்கு. கலிபோர்னியாவில் 1968ம் ஆண்டு நிறுவப்பட்ட ஜேம்ஸ்பர்க் எர்த் ஸ்டேஷன் மூலம் இந்த சிக்னல்கள் அனுப்பப்படும்.

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

அதிக திறன் வாய்ந்த ஆன்டெனாவை 30 ஆண்டு குத்தகைக்கு எடுத்து இந்த புராஜக்டில் ஈடுபட உள்ளோம். டிவி சிக்னல், ரேடியோ சிக்னல், மின்காந்த கதிர்கள் ஏராளமாக பூமியை சுற்றி வலம் வருகின்றன.

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

ஆனால், அவை வீக்கானவை. அவற்றைவிட சக்தி வாய்ந்த, தொலைதூரம் பயணம் செய்தாலும் வலுவாக இருக்கக் கூடிய சிக்னல்கள் இங்கிருந்து அனுப்பப்படும்.

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

‘நாங்கள் பூமியில் இருக்கிறோம். நீங்கள் யாராவது அங்கு இருக்கிறீர்களா' என்ற தகவல் இதன்மூலம் பரப்பப்படும்.

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

பூமியின் இருப்பிடத்தை காட்டக்கூடிய சிக்னலும் அனுப்பப்படும்.இதேபோன்ற ஆன்டெனாக்கள், வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்தால் நம் இருப்பிடத்தை கட்டாயம் தெரிந்துகொள்வார்கள்.

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

வேற்றுக்கிரக வாசிகளுக்கு நீங்கள் எதுவும் சொல்ல வேண்டியிருக்கிறதா? எல்லோரும் ஒன்றுசேர்ந்து மெசேஜ் அனுப்புவோம்." என்கிறார்.

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

யாராது இருக்கீங்களா? வேற்று கிரகத்துக்கு மெசேஜ்

இதுகுறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X