Home
News

நிலவில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர்! மனிதர்களின் எதிர்கால தேவைக்கு தயார்...

ஒரு சமீபத்திய ஆய்வின்படி, நிலவில் நாம் முன்னர் சந்தேகிக்கப்பட்டதை விட ஏராளமான நீர் மற்றும் பனியைக் கொண்டிருக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.

 புவிஅறிவியல் துறை

புவிஅறிவியல் துறை

சமீபத்தில் இயற்கையின் புவிஅறிவியல் துறையில் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்ட UCLA-ன் ஆராய்ச்சியாளர்கள், நிலவின் மேற்பரப்பில் மிக ஆழத்தில் பனிக்கட்டி வடிவிலான நீர் இருப்பதாகவும், அது எதிர்கால மனித குடியேற்றங்களுக்கு போதுமானதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

பனிக்கட்டிகளை ஏராளமாக கொண்டிருக்கும்

பனிக்கட்டிகளை ஏராளமாக கொண்டிருக்கும்

சந்திரன் மற்றும் புதன் போன்ற ஒரே மாதிரியான சூழ்நிலையை கொண்ட கிரகங்களுக்கிடையே நீண்ட காலமாக உள்ள முரண்பாட்டை இந்த கோட்பாடு கணக்கில் கொள்ளலாம்.


புதன் கிரகம் அதன் துருவ பகுதியில் பனிப்பாறைகள் போன்ற பனிக்கட்டிகளை ஏராளமாக கொண்டிருக்கும் போது, சந்திரன் அதேபோன்ற ஒத்த மேற்பரப்பு நிலைமைகள் கொண்டிருப்பதால், சந்தேகத்திற்கு இடமின்றி அங்கு போதுமானதாக எதுவும் இல்லை என கூற முடியாது அல்லது குறைந்தபட்சம் மேலோட்டமான எதுவும் கவனிக்க போதுமானது இல்லை.

மேற்பரப்புக்கு கீழே

மேற்பரப்புக்கு கீழே

"இதற்கு எளிமையான பதில், நிலவில் ஏராளமான பனி உள்ளது.அது மேற்பரப்புக்கு கீழே புதைக்கப்பட்டுள்ளது'' என்கிறார் கிரக அறிவியல் UCLA பேராசிரியரும், இந்த ஆய்வின் இணை ஆசிரியருமான டேவிட் பைகீ .


நிலவு மற்றும் புதன் கிரகங்களும் பூமியைப் போன்றே ஒத்த அச்சில் சுழன்று வருவதால், அவை இரண்டிலும் சூரியனைப் பார்க்காத பகுதிகளிலும் உள்ளன. இதன் விளைவாக அந்த பரப்புகள் நம் சூரிய மண்டலத்திலேயே மிக குளிர்ச்சியானவை ஆகும்.

தடிமனான பனிப்படலங்கள்

தடிமனான பனிப்படலங்கள்

இந்த காரணத்திற்காக தான் விஞ்ஞானிகள் பில்லியன்கணக்கான ஆண்டுகளாக அந்த கிரகத்தில் பனிக்கட்டிகள் இருக்கும் என்கின்றனர். எனினும் மற்றொரு ஆராய்ச்சி வேறு தெளிவான முரண்பாட்டை விளக்குகிறது.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் புதனில் நடத்திய ரேடார் ஆய்வுகளின் போது, அந்த கிரகத்தில் 50 மீட்டர் அகலமுள்ள தடிமனான பனிப்படலங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரம் இதே ஆய்வுகள் சந்திரனின் மேற்பரப்பில் மேலோட்டமான நீர்த்தேக்கங்களையே காண்பிக்கிறது.

 10 சதவிகிதம் அதிகமாக ஆழமில்லாமல் உள்ளன

10 சதவிகிதம் அதிகமாக ஆழமில்லாமல் உள்ளன

நிலவின் பள்ளத்தாக்குகளின் ஆழத்தை ஆராய்வதன் மூலம் இந்த முரண்பாடுகளை களையலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


முன்னர் பனிக்கட்டிகள் கண்டறியப்பட்ட நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகள், மற்ற இடங்களில் இருப்பதை விட 10 சதவிகிதம் அதிகமாக ஆழமில்லாமல் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 வலுவான பாறை மற்றும் மற்ற பொருட்களால் உருவான நிலவு மண்

வலுவான பாறை மற்றும் மற்ற பொருட்களால் உருவான நிலவு மண்

பள்ளத்தாக்குகளின் ஆழத்தில் உள்ள வேறுபாடு தற்செயல் நிகழ்வு அல்ல, அவை அது மேற்பரப்புக்கு கீழே இருக்கும் கடின பனிக்கட்டி தொகுப்பின் காரணமாக அவ்வாறு நிலையாக உள்ளன.


புதனில் காணப்படும் இன்னும் அழகிய மறு செய்கை போல் இல்லாமல், நிலவின் பனிக்கட்டிகள் வலுவான பாறை மற்றும் மற்ற பொருட்களால் உருவான நிலவு மண் போன்றவற்றால் அடுக்குகளாக இருப்பதால், மிகவும் அடர்த்தியாக உள்ளன.

ஆர்டிமிஸ் மிஷனின் மூலம் நிலவிற்கு மீண்டும் திரும்பும்

இது உண்மை என்றால், நிலவின் மேற்பரப்பில் மனித குடியிருப்புகளை அமைப்பது மற்றும் தொழிற்சாலைகளை துவங்குவது போன்ற முன்மொழிவுகளை காட்டிலும், பல காரணங்களுக்காக ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.


நாசா நிறுவனமும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆர்டிமிஸ் மிஷனின் மூலம் நிலவிற்கு மீண்டும் திரும்பும் தனது திட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Scientists-say-moon-lots-ice-buried-beneath-surface : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X