பூமி போல் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை 'காந்தப்புலம்' உருவாக்கும் திட்டம்.. இது எப்படி சாத்தியம்?

|

நம்முடைய பூமிக்கு அப்பால், ஒரு மனித காலனியை நிறுவுவதற்கான சாத்தியங்களை நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்கள் மிகவும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது. நமது சூரிய மண்டலத்தில், இப்போது பூமிக்கு அப்பால் உள்ள வேற்று கிரகங்களில் மனிதர்களுக்கான காலனியை உருவாக்குவதற்கான சாத்தியம் உள்ள ஒரே ஒரு கிரகம் என்றால் அது ரெட் பிளானட் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் மட்டும் தான். ஆனால், செவ்வாய் கிரகத்தில் இதைச் சாத்தியப்படுத்த சில விஷயங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.

செவ்வாய் கிரகத்தை பூமி போன்ற கிரகமாக மாற்றும் முயற்சி

செவ்வாய் கிரகத்தை பூமி போன்ற கிரகமாக மாற்றும் முயற்சி

செவ்வாய் கிரகம் தற்போது, ​​மிகவும் மெல்லிய வளிமண்டலத்துடன் மிகக் குளிர்ச்சியாக இருப்பதால், இந்த ரெட் பிளானெட்டில் மனிதர்கள் வாழ்வதற்கான சிக்கல்கள் ஏராளமாக இருக்கிறது. இது அனைத்தும் மனிதர்களுக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய பூமி போன்ற உலகமாக மாற்ற சில தீவிர மாற்றங்களை மேற்கோளா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் பல தீர்வுகளை வலியுறுத்தி வருகிறது.

'டெராஃபார்மிங்' செய்தால் செவ்வாய் பூமி போல மாறிவிடுமா?

'டெராஃபார்மிங்' செய்தால் செவ்வாய் பூமி போல மாறிவிடுமா?

இதுவரை பல விஞ்ஞானிகள் ஏராளமான தீர்வுகளை முன்மொழிந்துள்ளனர். ஆனால், இப்போது சமீபத்தில் செவ்வாய் கிரகத்தை மனிதர்கள் வாழக்கூடிய காலனியாக மாற்றம் செய்ய முதலில் ஒட்டுமொத்த கிரகத்தின் இயல்பை வாழக்கூடியதாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு 'டெராஃபார்மிங்' என்று பெயரிட்டுள்ளனர். டெராஃபார்மிங் என்பது வேற்றுகிரகவாசிகளின் உலகத்தை மனிதர்கள் வாழக்கூடிய, பூமி போன்ற இடமாக மாற்றும் செயல்முறையாகும்.

கயிறுடன் கட்டி போடப்பட்ட 1000 ஆண்டு பழமையான மம்மி.. என்ன காரணம்? இந்த மம்மி யாராக இருக்கும்?கயிறுடன் கட்டி போடப்பட்ட 1000 ஆண்டு பழமையான மம்மி.. என்ன காரணம்? இந்த மம்மி யாராக இருக்கும்?

செவ்வாய் கிரகத்திற்கு 'செயற்கை காந்தப்புலங்களை' உருவாக்கும் திட்டம்

செவ்வாய் கிரகத்திற்கு 'செயற்கை காந்தப்புலங்களை' உருவாக்கும் திட்டம்

ஆனால் விஞ்ஞானிகள் அதை எவ்வாறு செய்யத் திட்டமிட்டுள்ளனர்? என்பது தான் இப்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விஞ்ஞானிகளின் கணிப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்த ஒரு சில அனுமான செயல்முறைகளை நாம் செவ்வாய் கிரகத்தில் செய்ய வேண்டும், இதற்கு ஒரு புதிய மற்றும் சற்று பைத்தியக்காரத்தனமான திட்டத்தை விஞ்ஞானிகள் இப்போது வலியுறுத்தியுள்ளனர். இந்த முயற்சியின் படி, பூமியைப் போலவே செவ்வாய் கிரகத்தைச் சுற்றி 'செயற்கை காந்தப்புலங்களை' உருவாக்குவதை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது.

நாம் பூமியில் உயிருடன் இருப்பதற்கு இது தான் முக்கிய காரணம்

நாம் பூமியில் உயிருடன் இருப்பதற்கு இது தான் முக்கிய காரணம்

உண்மையைச் சொல்லப் போனால், நாம் பூமியில் உயிருடன் இருப்பதற்குச் சூரியனின் ஒளி எவ்வளவு முக்கியமானதோ, அதை விட நம் பூமியை சுற்றியுள்ள காந்தப்புலங்கள் அதை விட மிகவும் முக்கியமானது. வலுவான காந்தப்புலங்கள் இருப்பதால் மட்டும் தான் நமது கிரகம் வாழ்க்கையை ஆதரிப்பதில் அதிர்ஷ்டசாலியாக மாறியது. கொடிய சூரியக் காற்றிலிருந்து பூமி வாசிகளைப் பாதுகாப்பதில் இந்த பாதுகாப்பு காந்தப்புலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இலவசமாக 4 ஜிபி டேட்டா கூப்பன் பெறுவது எப்படி? ஏர்டெல் பயனர்கள் நல்ல கவனிச்சுக்கோங்க..இலவசமாக 4 ஜிபி டேட்டா கூப்பன் பெறுவது எப்படி? ஏர்டெல் பயனர்கள் நல்ல கவனிச்சுக்கோங்க..

செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழும் திறன் இல்லாமல் போனதற்கு இதுவே காரணம்

செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழும் திறன் இல்லாமல் போனதற்கு இதுவே காரணம்

சூரியக் காற்றுடன் சேர்ந்து வெளியிடப்படும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் மிகவும் சக்திவாய்ந்தவை, அவை ஓசோன் படலத்தின் பூமியின் பாதுகாப்பு கவசத்தை அகற்றும். செவ்வாய் கிரகத்தைச் சுற்றி இந்த பாதுகாப்பு காந்தப்புலங்கள் கொண்ட பெல்ட்கள் இல்லாததால், எதுவும் நீண்ட காலம் செவ்வாய்க் கிரகத்தில் உயிர்வாழும் திறனைக் கொண்டிருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது செவ்வாயில் மனித காலனிகளை அமைப்பதை சாத்தியமற்ற தாக்குகிறது.

செவ்வாய் கிரகத்தில் நீரின் இருப்பு இருந்ததற்கான சான்று

செவ்வாய் கிரகத்தில் நீரின் இருப்பு இருந்ததற்கான சான்று

நாம் கிரகத்தை சூடாக்கி, வளிமண்டலத்தை உருவாக்கினாலும், அது நிலையானதாக இருக்குமா? என்பது தான் இப்போது கேள்வியாக இருக்கிறது. செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் தடிமனான வளிமண்டலத்தில் நீரின் இருப்புடன் இருந்ததாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வலுவான காந்தப்புலம் இல்லாததால், இந்த கிரகம் உயிர் வாழக்கூடிய தன்மையை படிப்படியாக இழந்து, முற்றிலுமாக அழிக்கப்பட ஒரு தூசி கிரகமாக மாறிவிட்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நான்கு காலுடன் கிடைத்த 'பாம்பு' படிமம்.. இது டிராகனா இல்லை பல்லியா? 5 ஆண்டாக நீடிக்கும் குழப்பம்..நான்கு காலுடன் கிடைத்த 'பாம்பு' படிமம்.. இது டிராகனா இல்லை பல்லியா? 5 ஆண்டாக நீடிக்கும் குழப்பம்..

இரண்டாவது சாத்தியமான பூமி செவ்வாய் கிரகம் மட்டும் தானா?

இரண்டாவது சாத்தியமான பூமி செவ்வாய் கிரகம் மட்டும் தானா?

அதனால் தான், விஞ்ஞானிகள் இது இரண்டாவது சாத்தியமான பூமியை உருவாக்குவதற்கான முதல் படியாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் முன்மொழிந்துள்ளனர். இதனால் தான் இதை பிளானட் பி என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். எனவே, செவ்வாய் கிரகத்தைச் சுற்றி காந்தப்புலங்களைச் சேர்க்கும் இந்த மிக லட்சிய இலக்கை எவ்வாறு செயல்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரியுமா? கிரகத்தைச் சுற்றி இந்தக் காந்த கவசங்களை உருவாக்குவது கடினமானது.

இந்த செயற்கை காந்தப்புலம் எப்படி உருவாக்கப்படும்?

இந்த செயற்கை காந்தப்புலம் எப்படி உருவாக்கப்படும்?

அதிலும், குறிப்பாகச் செவ்வாய் கிரகத்தின் உட்புறம் சிறியதாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது என்பதால் இது இன்னும் கடினமானது. ஆனால், சிவப்பு கிரகத்திற்கு அப்பாலில் இருந்து ஏதாவது உதவி கிடைக்குமா என்று பார்க்கும் போது, செவ்வாய் கிரகத்தின் சந்திரன் போபோஸ் இந்த தோட்டத்திற்குள் வருகிறது. போபோஸ் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி 8 மணி நேரத்திற்கு ஒரு சிறிய பயணம் செய்கிறது. கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வில், ஃபோபோஸின் மேற்பரப்பில் இருக்கும் அயனியாக்கும் துகள்கள் இந்த பணியைச் செய்ய உதவும் என்று கூறுகிறது.

800 கோடி மக்கள்.. 1,00,000 ஆண்டுகள் வாழத் தேவையான ஆக்சிஜன் நிலவில் உள்ளது.. உண்மையா? என்ன சொல்றீங்க?800 கோடி மக்கள்.. 1,00,000 ஆண்டுகள் வாழத் தேவையான ஆக்சிஜன் நிலவில் உள்ளது.. உண்மையா? என்ன சொல்றீங்க?

செவ்வாயில் மனிதர்கள் வாழ விரைவில் ஒரு காந்தப்புலம் உருவாக்கப்படும்

செவ்வாயில் மனிதர்கள் வாழ விரைவில் ஒரு காந்தப்புலம் உருவாக்கப்படும்

மேலும், துகள்களை முடுக்கி பிளாஸ்மா டோரஸை உருவாக்கலாம் என்று கூறியுள்ளனர். கிரகத்தைச் சுற்றி வரும் வளைய வடிவ மேகங்கள் போபோஸின் சுற்றுப்பாதையில் அமைந்துள்ளது. இதன் விளைவாக, செவ்வாய் கிரகத்தைப் பாதுகாக்க ஒரு வலுவான காந்தப்புலம் உருவாக்கப்படும். முன்னதாக, விஞ்ஞானிகளால் முன்மொழியப்பட்ட சில யோசனைகளில் தரை அடிப்படையிலான அல்லது சுற்றுப்பாதை சோலனாய்டுகள் மூலம் இது உருவாக்கப்படும் திட்டங்களும் இதில் அடங்கும்.

ஏராளமான சவால்களை விஞ்ஞானிகள் சமாளிக்க வேண்டுமா?

ஏராளமான சவால்களை விஞ்ஞானிகள் சமாளிக்க வேண்டுமா?

இந்த பெரிய அளவிலான திட்டத்தைச் செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்கச் சவால்களில் ஒன்று உள்ளது. இருப்பினும், விண்வெளி ஆராய்ச்சியில் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன், இதுவும் விரைவில் யதார்த்தமாக மாறக்கூடும். உங்களுக்குத் தெரியாது, ஒருவேளை நமது தலைமுறை செவ்வாய் கிரகத்தில் காலடி எடுத்து வைப்பது மட்டுமல்லாமல், அங்கு ஒரு காலனியை நிறுவிய முதல் நபராக இருக்கவும் இப்போது வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. இந்த புதிய யோசனையின் விவரங்கள் சமீபத்தில் ஆக்டா ஆஸ்ட்ரோனாட்டிகா இதழில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Scientists Propose New Way To Build Artificial Magnetic Field Around Mars to Support Life On Planet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X