சார்ஜ் இறங்காத குவாண்டம் பேட்டரி! ப்ளூபிரிண்ட் தயாரித்த விஞ்ஞானிகள்..

|

ஆல்பர்ட்டா மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, ஒருபோதும் சார்ஜை இழக்காத "குவாண்டம் பேட்டரி" க்கான ப்ளூபிரிண்ட்-ஐ வகுத்துள்ளது.

புரட்சிகர முன்னேற்றமாக இருக்கலாம்

புரட்சிகர முன்னேற்றமாக இருக்கலாம்

தெளிவாக கூறவேண்டுமானால், இந்த பேட்டரி இன்னும் உண்மையில் இல்லை. ஆனால் அதை எவ்வாறு உருவாக்குவது என்று அவர்கள் கண்டுபிடித்தால், அது ஆற்றல் சேமிப்பில் ஒரு புரட்சிகர முன்னேற்றமாக இருக்கலாம்.

லித்தியம் அயன் பேட்டரி

லித்தியம் அயன் பேட்டரி

"நமது ஸ்மார்ட்போனுக்கு சக்தி அளிக்கும் லித்தியம் அயன் பேட்டரி போன்றவை நமக்கு மிகவும் பரிச்சையமான பேட்டரிகள் மற்றும் கிளாசிக்கல் எலக்ட்ரோ கெமிக்கல் கொள்கைகளை சார்ந்துள்ளன. அதேசமயம் குவாண்டம் பேட்டரிகள் குவாண்டம் இயக்கவியலை மட்டுமே நம்பியுள்ளன" என்று ஆல்பர்ட்டா பல்கலைக்கழக வேதியியலாளர் கேப்ரியல் ஹன்னா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இனிமேல் அமேசான் மூலமாகவும் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: சலுகையும் உண்டு.!இனிமேல் அமேசான் மூலமாகவும் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: சலுகையும் உண்டு.!

எக்ஸிடோனிக் எனர்ஜி

எக்ஸிடோனிக் எனர்ஜி

இந்த ஆராய்ச்சியை விவரிக்கும் ஒரு ஆய்வுக்கட்டுரை ஜூலை மாதம் இயற்பியல் வேதியியல் சி இதழில் வெளியிடப்பட்டது. இந்த பேட்டரி "எக்ஸிடோனிக் எனர்ஜி" இன் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது. இது ஒரு எலக்ட்ரான் ஒளியின் போதுமான சார்ஜ் செய்யப்பட்ட ஃபோட்டான்களை உறிஞ்சும் நிலை ஆகும்.

ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள்

இதன் விளைவாக உருவாக்கப்படும் பேட்டரி மாதிரி "ஆற்றல் இழப்புகளுக்கு எதிராக மிகவும் வலுவானதாக" இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அவர்களது பேட்டரி ஒரு "இருண்ட நிலை"ல் தயாரிக்கப்படுகிறது என்பதால், அதன் சுற்றுப்புறங்களில் ஃபோட்டான்களை உறிஞ்சுவதன் மூலம் அல்லது வெளியிடுவதன் மூலம் அங்கு ஆற்றலை பரிமாறிக்கொள்ள முடியாது.

இருண்ட நிலை

இருண்ட நிலை

இந்த "இருண்ட நிலை" குவாண்டம் நெட்வொர்க்கை உடைப்பதன் மூலம், பேட்டரி செயல்பாட்டில் ஆற்றலை வெளியேற்றவும் வெளியிடவும் முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கூகுள் மேப்ஸ்-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி?கூகுள் மேப்ஸ்-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி?

சாத்தியமான வழிகளை இக்குழு இன்னும் கண்டறியவில்லை

சாத்தியமான வழிகளை இக்குழு இன்னும் கண்டறியவில்லை

ஆனால் அவ்வாறு செய்வதற்கான சாத்தியமான வழிகளை இக்குழு இன்னும் கண்டறியவில்லை. நிஜ உலக பயன்பாடுகளுக்கு ஏற்றவகையில் இந்த தொழில்நுட்பத்தை அதிகளவு தயாரிக்கும் வழியையும் அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Scientists Have Made a Blueprint For a Quantum Battery That Never Loses Charge: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X