கிரேட் டையிங்: பூமி அழிவை நோக்கி நகர்கிறதா? விஞ்ஞானிகள் வெளியிட்ட திடுக்கிடும் உண்மை இது தான்..

|

பூமியில் ஒரு பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய அழிவு நிகழ்வின் அச்சுறுத்தல் சத்தமில்லாமல் உருவாகி வருவதாக அறிவியல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அறிவியல் விஞ்ஞானிகள் சொல்வதில் உண்மை இருக்கிறதா? உண்மையில் இது பூமியில் பேரழிவை ஏற்படுத்தப் போகிறதா? என்ற பல திடுக்கிடும் கேள்விகளுக்கு விஞ்ஞானிகள் தற்போது கவலையுடன் பதில் அளித்துள்ளனர். மனித இனம் வசிக்கும் இந்த பூமியில் உள்ள அனைத்து நாகரிகங்களுக்கும் பொதுவான ஒரு அழிவை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

விஞ்ஞானிகள் நம்பும் பேரழிவு எவ்வளவு ஆபத்தானது?

விஞ்ஞானிகள் நம்பும் பேரழிவு எவ்வளவு ஆபத்தானது?

நீர்நிலைகளில் உள்ள ஆல்கா (Algae) மற்றும் பாக்டீரியல் ப்ளூம் (bacterial bloom) முறைகளின் அடிப்படையில், விஞ்ஞானிகள் ஒரு தீவிர அழிவு நிகழ்வு பூமியையும், பூமியில் வாழும் ஒட்டுமொத்த மனித இனத்தையும் தாக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள். பூமியில் உள்ள நீர்நிலைகளின் பாசி மற்றும் பாக்டீரியா அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், நாம் எதிர்பார்த்திடாத மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை நோக்கிச் சுட்டிக்காட்டுகின்றது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அழிவிற்கான அறிகுறிகள் என்ன சொல்கின்றது? கிரேட் டையிங் என்றால் என்ன?

அழிவிற்கான அறிகுறிகள் என்ன சொல்கின்றது? கிரேட் டையிங் என்றால் என்ன?

விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்த இந்த நீர்நிலை மாற்றங்கள் அவ்வளவு ஆபத்தானதா என்று நீங்கள் சந்தேகிக்கலாம். உண்மையில், இதற்கு முன்னாள் பூமி இதே போன்ற அழிவை ஒரு முறை சந்தித்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதே நிகழ்வின் உருவாக்கம் மீண்டும் வளர்ந்து வருவதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். சுமார் 251 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் "கிரேட் டையிங் (Great Dying)" என்று அழைக்கப்படும் கடைசி வெகுஜன அழிவு நிகழ்வு நிகழ்ந்ததைப் போன்றது, இந்த அறிகுறிகள் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஜெயிச்சிட்டோம் மாறா.! சென்னை நிறுவனம் உருவாக்கிய முதல் மேட் இன் இந்தியா பறக்கும் கார்..! இளைஞர்கள் முயற்சி..!ஜெயிச்சிட்டோம் மாறா.! சென்னை நிறுவனம் உருவாக்கிய முதல் மேட் இன் இந்தியா பறக்கும் கார்..! இளைஞர்கள் முயற்சி..!

பூமியில் உள்ள 90 சதவிகித உயிர்கள் முன்பே அழிந்த நிகழ்வு பற்றி உங்களுக்கு தெரியுமா?

பூமியில் உள்ள 90 சதவிகித உயிர்கள் முன்பே அழிந்த நிகழ்வு பற்றி உங்களுக்கு தெரியுமா?

சுமார் 251 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அழிவில், பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் 90 சதவிகிதம் மறைந்துவிட்டது. 'கிரேட் டையிங்' என்பது பூமி கிரகத்தின் மிகப்பெரிய உயிர் இழப்பைக் குறிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது போன்ற நிகழ்வு நடக்கவிருப்பதைத் தான் விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். ஸ்வீடிஷ் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி வெளியிடப்பட்ட தகவல் இன்னும் தெளிவாக இந்த நிகழ்வு பற்றி விளக்கமளித்துள்ளது.

பாக்டீரியல் ப்ளூமிங் மீண்டும் கிரேட் டையிங் பண்புகளுடன் பூமியில் தோன்றியுள்ளதா?

பாக்டீரியல் ப்ளூமிங் மீண்டும் கிரேட் டையிங் பண்புகளுடன் பூமியில் தோன்றியுள்ளதா?

ஸ்வீடிஷ் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஸ்டாக்ஹோம் (Stockholm), நச்சு ஆல்கா (toxic algae) மற்றும் பாக்டீரியாக்கள் இப்போது நம் பூமியில் உள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் வளர்ந்து வருகின்றது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இவை பூமியில் முன்பு நிகழ்ந்த கிரேட் டையிங் இறக்கும் காலத்தில் இருந்த பாக்டீரியல் ப்ளூமிங் பண்புகளைப் பிரதிபலிக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மீண்டும் கடலில் பாய்ந்த அதிநவீன ஏவுகணை.. கதிகலங்கிய நாடுகள்.. வடகொரியா சொன்ன பதில் என்ன தெரியுமா?மீண்டும் கடலில் பாய்ந்த அதிநவீன ஏவுகணை.. கதிகலங்கிய நாடுகள்.. வடகொரியா சொன்ன பதில் என்ன தெரியுமா?

இந்த மாற்றங்கள் பூமிக்கும், பூமியில் உள்ள உயிர்களுக்கும் என்ன கேடு விளைவிக்கும்?

இந்த மாற்றங்கள் பூமிக்கும், பூமியில் உள்ள உயிர்களுக்கும் என்ன கேடு விளைவிக்கும்?

விஞ்ஞானிகளின் கருத்துப்படி, நன்னீர் உடல்களில் காணப்படும் தற்போதைய மாற்றங்கள் விரைவில் காடுகளின் இழப்பு, மண் வளத்தின் இழப்பு மற்றும் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் உமிழ்வு உள்ளிட்ட பல்வேறு மனித நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக மாறி அழிவை ஏற்படுத்தக்கூடியது என்று கூறியுள்ளனர். நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வில், தற்போதைய பாசி மற்றும் பாக்டீரியா ப்ளூமிங் நிகழ்வின் மாற்றங்கள் கிரேட் டையிங் நிகழ்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நாம் மிகப்பெரிய அழிவு நிகழ்வின் மத்தியில் இருக்கிறோமா?

நாம் மிகப்பெரிய அழிவு நிகழ்வின் மத்தியில் இருக்கிறோமா?

நாம் உண்மையில் ஒரு பாரிய அழிவு நிகழ்வின் மத்தியில் இருக்கிறோம் என்று தோன்றுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த அழிவிற்கான மாற்றங்கள் முற்றிலும் மனித நடவடிக்கைகளால் ஏற்பட்டது என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மனிதர்களின் அலட்சியத்தால் இப்படி ஒரு நிகழ்வு நிகழப்போகிறது என்பதை அறிவியல் விஞ்ஞானிகள் தற்போது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.

கடலில் வேகமாக பரவும் 'கடல் சளி' ஆபத்து.. மனிதர்களுக்கு தொற்று பரவும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!கடலில் வேகமாக பரவும் 'கடல் சளி' ஆபத்து.. மனிதர்களுக்கு தொற்று பரவும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!

உண்மையில் நுண்ணுயிர் ப்ளூமிங் என்ன செய்யும்?

உண்மையில் நுண்ணுயிர் ப்ளூமிங் என்ன செய்யும்?

நுண்ணுயிர் ப்ளூமிங் என்பது வெறுமனே நன்னீர் உடல்களில் உள்ள உயிரை மட்டும் கொல்வதில்லை. இது, அந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் சாத்தியமான மீட்பை மில்லியன் கணக்கான ஆண்டுகள் தாமதப்படுத்துகின்றது என்று ஆராய்ச்சி குழு கூறுகிறது. இந்த முடிவை எட்டுவதற்கு முன்பு, விஞ்ஞானிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகிலுள்ள புதை படிவ பதிவுகளை ஆராய்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமி அழிவை நோக்கி மெதுவாக நகர்கிறதா?

பூமி அழிவை நோக்கி மெதுவாக நகர்கிறதா?

அந்த நேரத்தில் நடத்த அழிவு நிகழ்வுகளில் பெரும்பாலானவை எரிமலை வெடிப்புகளால் உலக வெப்பநிலை அதிகரித்து, கிரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியேறியிருந்தது என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.இதற்குப் பின்னர், பூமியின் நிலை மாற்றம் அடைந்து காட்டுத்தீ, வறட்சி மற்றும் பிற தீவிர காலநிலை நிகழ்வுகள் மூலம் பூமி அழிவை நோக்கி மெதுவாக நகர்ந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதே மாதிரியான நிகழ்வு தான் தற்போது பூமியில் உருவாகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பூமியில் உள்ள கடல்கள் மற்றும் நீர்வளங்கள் காணாமல் போனால் மனித இனத்தின் விதி என்னவாகும்?பூமியில் உள்ள கடல்கள் மற்றும் நீர்வளங்கள் காணாமல் போனால் மனித இனத்தின் விதி என்னவாகும்?

நுண்ணுயிர்கள் எவ்வளவு முக்கியமானது? இது எப்படி ஆபத்தாகும்?

நுண்ணுயிர்கள் எவ்வளவு முக்கியமானது? இது எப்படி ஆபத்தாகும்?

இது காடுகளை இழக்க வழிவகுத்து, இதன் காரணமாக, ஒரு காலத்தில் வன நிலத்தை வளப்படுத்திய மண் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அருகிலுள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் புகுந்து, நுண்ணுயிர் மற்றும் பாசி பூக்களை அதிகரிக்கிறது.அதிக வெப்பநிலை காரணமாக, அத்தகைய ப்ளூமிங் நன்னீர் உடல்களில் செழித்து வளர்ந்திருக்கும். எந்தவொரு நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தையும் அதன் வளத்தையும் பராமரிக்க நுண்ணுயிர்கள் என்பது மிகவும் முக்கியமானது.

மனித நடவடிக்கைகளின் நேரடி தயாரிப்பா இந்த பேராபத்து?

மனித நடவடிக்கைகளின் நேரடி தயாரிப்பா இந்த பேராபத்து?

ஆனால், இவை அதிகமானால் நன்னீர் ஆதாரங்களை நஞ்சாக மாற்றுகின்றது. இவை அதிகரிக்கும் போது சுற்றுச்சூழல் அமைப்பில் இருக்கும் எல்லா உயிர்களையும் இது கொல்லுகிறது. முந்தைய கிரேட் டையிங் ப்ளூமிங் மனித உதவியின்றி செழித்து வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால், தற்போதைய ப்ளூமிங் நிகழ்வானது சுற்றுச்சூழலை மாசுபடுத்திய மனித நடவடிக்கைகளின் நேரடி தயாரிப்பு என்பதனால் இது இயற்கையாக மீட்டமைப்பது சுலபமானது அல்ல என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

200 ஆண்டுகளுக்குள் பூமி அழியும்; ஸ்டீபன் ஹாகிங்கின் 200 ஆண்டுகளுக்குள் பூமி அழியும்; ஸ்டீபன் ஹாகிங்கின் "அந்த" 7 காரணங்கள்!

2100 ஆம் ஆண்டில் பூமியின் நிலை இது தானா?

2100 ஆம் ஆண்டில் பூமியின் நிலை இது தானா?

எச்சரித்துள்ளனர். அப்போது நிகழ்ந்த கிரேட் டையிங் நிகழ்வோடு இப்போது காணப்பட்ட ப்ளூமிங் நிகழ்வை ஒப்பிட்டுப் பார்க்கையில், இதன் முக்கிய பண்புகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாக இருந்தது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.விஞ்ஞானிகளின் கணிப்புப் படி, வரும் 2100 ஆம் ஆண்டில் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது, நமது நன்னீர் உடல்களில் அதிக ப்ளூமிங் நிகழ்வு வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரேட் டையிங் நிகழ்விற்கான அறிகுறிகள் எப்போது வெளிப்படும்

கிரேட் டையிங் நிகழ்விற்கான அறிகுறிகள் எப்போது வெளிப்படும்

அந்த நேரத்தில், கிரேட் டையிங் நிகழ்விற்கான அறிகுறிகள் உச்சத்தில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அந்த நிகழ்விற்கான அறிகுறிகள் தான் இப்போது தோன்ற ஆரம்பித்துள்ளது என்று விஞ்ஞானிகள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்பு பற்றி உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Scientists Have Found A Mass Extinction Event On Earth Looming Large And Fast : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X