வீட்டில் முகமூடி செய்ய இதுதான் பெஸ்ட் துணி - உண்மையை சொன்ன ஆராய்ச்சியாளர்கள்!

|

இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் காலத்தில், மக்களுக்குச் சரியான முகமூடி கிடைக்காத நிலையில் பல இடங்களில் தட்டுப்படும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்றார் போல் அவர்களிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே முகமூடிகளைத் தயாரித்து வருகின்றனர். ஆனால், எந்த துணியைப் பயன்படுத்தினாள் அதிக பாதுகாப்பு என்று தற்பொழுது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர். எந்த பொருள் அதிக பாதுகாப்பு நன்மையை வழங்குகிறது நேற்று தெரிந்துகொள்ளுங்கள்.

அறுவை சிகிச்சை முகமூடி மற்றும் N95 முகமூடி

அறுவை சிகிச்சை முகமூடி மற்றும் N95 முகமூடி

கொரோனா வைரஸ் தாக்குதல் காலத்தில் முகமூடி அணிவது என்பது உங்களையும், உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு முக்கிய பகுதியாகும். சி.டி.சி (CDC) பரிந்துரைப்படி அறுவை சிகிச்சை முகமூடி மற்றும் N95 முகமூடிகளை மருத்துவ பணியாளர்களுக்குக் கிடைக்கும்படி தட்டுப்பாடில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

சாமானிய மக்களுக்கு முகமூடி தட்டுப்பாடு

சாமானிய மக்களுக்கு முகமூடி தட்டுப்பாடு

சாமானிய மக்களுக்கு முகமூடிகள் சரியாகக் கிடைக்கவில்லை, இதனால் மக்கள் தங்கள் வீட்டில் உள்ள துணிகளை வைத்தே முகமூடிகளைச் செய்து அதைப் பாதுகாப்பு கவசமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், யாருக்கும் எந்த பொருளைப் பயன்படுத்தினால் எவ்வளவு பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரியாமல் இருந்தது. இதற்கு ஒரு தீர்வாக விஞ்ஞானிகள் தற்பொழுது எந்த துணி பொருட்கள் எவ்வளவு பாதுகாப்பை வழங்கும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

பறக்காதபோது விமானங்கள் எங்கு செல்கின்றன? வைரல் ஆனா வீடியோ!பறக்காதபோது விமானங்கள் எங்கு செல்கின்றன? வைரல் ஆனா வீடியோ!

புதிய பாதுகாப்பு தகவல்

புதிய பாதுகாப்பு தகவல்

அமெரிக்காவின் ஆர்கோன் தேசிய ஆய்வகம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பலவிதமான துணி பொருட்களை எடுத்து அதன் ஆய்வக நிலைகளைப் பரிசோதித்துள்ளனர். இந்த துணி பொருட்களின் இயந்திர வடிகட்டுதல் மற்றும் மின்னியல் வடிகட்டுதல் பண்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து புதிய பாதுகாப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஆபத்தான துகள்களைத் துணிகள் சிறப்பாக வடிகட்டுகிறதா?

ஆபத்தான துகள்களைத் துணிகள் சிறப்பாக வடிகட்டுகிறதா?

பல அடுக்குகளில், பல விதமான துணிகளைக் கலப்பதன் மூலம், ஆபத்தான துகள்களைத் துணிகள் சிறப்பாக வடிகட்டி செயல்படுவதாகக் குழு கண்டறிந்ததுள்ளது. ஆனால், முறையற்ற முகமூடி பொருத்தம் நீங்கள் பாதுகாப்பான முகமூடியைப் பயன்படுத்தினாலும், உங்களின் முழு பாதுகாப்பு விஷயத்தையும் அழிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நீங்கள் அணியக் கூடிய முகமூடி மிக கச்சிதமாக உங்களுக்குப் பொருந்தி இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

பூமியின் வரலாற்றில் மிகவும் ஆபத்தான கொடூரமான இடம் இது தான் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!பூமியின் வரலாற்றில் மிகவும் ஆபத்தான கொடூரமான இடம் இது தான் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

துணி முகமூடிகள் வழங்கக்கூடிய பாதுகாப்பு நன்மைகள்

துணி முகமூடிகள் வழங்கக்கூடிய பாதுகாப்பு நன்மைகள்

ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததாவது, "பருத்தி, பட்டு, சிஃப்பான், ஃபிளானல், பல்வேறு செயற்கை துணி பொருள்கள் மற்றும் அவற்றின் சேர்க்கைகளை வைத்துப் பல பொதுவான துணிகளுக்கான இந்த ஆய்வுகளை நாங்கள் மேற்கொண்டோம்", இதில் பல்வேறு கிடைக்கக்கூடிய துணிகளின் சேர்க்கைகள் கொண்ட துணி முகமூடிகளில் ஏரோசோல் துகள்கள் எப்படி ஊடுருவுகிறது என்பது குறித்த தகவல் மற்றும் இவை வழங்கக்கூடிய பாதுகாப்பு நன்மைகள் என்ன என்பதைக் கண்டறிந்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

மிகவும் தீவிரமான சோதனை அமைப்பில் சோதனை

மிகவும் தீவிரமான சோதனை அமைப்பில் சோதனை

மேலே விளக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்ற மிகவும் தீவிரமான சோதனை அமைப்பை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி, காற்றில் உள்ள ஏரோசோல்களின் எண்ணிக்கையை மாதிரிப்படுத்தி ஏரோசல் கலவை அறையைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர் குழு துணிகளால் ஆனா முகமூடிகளைச் சோதனை செய்துள்ளது. வெவ்வேறு கலவை கொண்ட துணியினால் ஆனா முகமூடிகளை தனித்தனியாகச் சோதனை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் துகள்களை கட்டுப்படுத்துமா?

கொரோனா வைரஸ் துகள்களை கட்டுப்படுத்துமா?

சுமார் 10 நானோமீட்டர் முதல் 10 மைக்ரோமீட்டர் வரை உள்ள பெரிய அளவிலான துகள் அளவுகளைக் கொண்ட துகள்களுக்கான சோதனையை மேற்கொண்டுள்ளனர். இதன் அளவு எவ்வளவு என்று தெரியுமா? ஒரு மனித முடியின் அளவு சுமார் 50 மைக்ரோமீட்டர் விட்டம் கொண்டது, ஒரு மைக்ரோமீட்டரில் 1000 நானோமீட்டர்கள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதேபோல், கொரோனா வைரஸ் துகள்கள் 80 முதல் 120 நானோ மீட்டர் வரை விட்டம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பூமிக்கு மிக அருகாமையில் கடக்கும் Asteroid 1998 OR2 - நிகழ்வை Live பார்ப்பது எப்படி?பூமிக்கு மிக அருகாமையில் கடக்கும் Asteroid 1998 OR2 - நிகழ்வை Live பார்ப்பது எப்படி?

சிறிய அளவிலான பொருட்களை வடிகட்ட முடியும்

சிறிய அளவிலான பொருட்களை வடிகட்ட முடியும்

எனவே சிறிய அளவிலான பொருட்களை வடிகட்ட முடியும் என்பதை உறுதிப்படுத்துவது பெரிய துகள்கள் தடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாக ஆராய்ச்சியாளர்கள் சிறிய துகள்களை வைத்து சோதனை செய்துள்ளனர். இதிலும் ஹைபிரிட் வெரைட்டி துணிகள் சிறிய துகள்களை அதிகம் தப்பித்துள்ளது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். இதற்கான காரணம் இந்த துணிகளில் பல மல்டிபிள் அடுக்குகளாகப் பருத்தி நெய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

வடிகட்டுதல் செயல்திறன் பற்றிய விபரங்கள்

வடிகட்டுதல் செயல்திறன் பற்றிய விபரங்கள்

ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட கலப்பினங்களின் வடிகட்டுதல் செயல்திறன் பற்றிய விபரங்களைப் பார்க்கலாம். பருத்தி-பட்டு, பருத்தி-சிஃப்பான், பருத்தி-ஃபிளானல் போன்றவை சுமார் 300 நானோமீட்டருக்கும் அதிகமான அளவில் இருக்கும் துகள்களை 80 சதவீதத்திற்குக் குறைவாகக் கட்டுப்படுத்துகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

90 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டுப்படுத்துகிறது

90 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டுப்படுத்துகிறது

அதேபோல், 300 நானோமீட்டர் அளவிற்கும் குறைவாக உள்ள துகள்களை 90 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இனி முகமூடி கடைகளில் கிடைக்கவில்லை என்று கவலைகொள்ளாதீர்கள், வீட்டில் சுயமாக முகமூடி செய்யலாம் என்று முடிவு செய்பவர்களுக்கு இந்த தகவல் நிச்சயம் உதவியாக இருக்கும்.

சிறிய அளவு துகள்களை முடிந்தவரைக் கட்டுப்படுத்த முடியும்

சிறிய அளவு துகள்களை முடிந்தவரைக் கட்டுப்படுத்த முடியும்

துணியில் முகமூடி செய்யும் நபர்கள் கட்டாயம் பல அடுக்குகளில் இந்த கலவையில் துணிகளைப் பயன்படுத்தினால் சிறிய அளவு துகள்களை முடிந்தவரைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Scientists Have Discovered The Best Materials To Use For Making Mask At Home : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X