Home
News

விண்வெளியில் கேட்கும் 'ஹம்' சத்தம்.. எங்கிருந்து வருகிறது.. 7 இந்திய விஞ்ஞானிகளின் மகத்தான கண்டுபிடிப்பு!

கண்டுபிடிக்கப்படாத வரை எல்லாமே ரகசியங்கள் தான். அதிலும் விண்வெளி ஆராய்ச்சி (Space Research) என்று வந்துவிட்டால் பதில்களே கிடைக்காத கேள்விகள், தீர்க்கப்படாத சந்தேகங்கள் மற்றும் விஞ்ஞானிகளையே குழப்பும் புதிர்கள் என ஆயிரமாயிரம் ரகசியங்கள் உள்ளன. அப்படியான ஒரு ரகசியத்திற்கு தான் தற்போது பதில் கிடைத்துள்ளது.

ஏழு இந்திய விஞ்ஞானிகளை உள்ளடக்கிய உலகளாவிய வானியலாளர்கள் குழுவொன்று, இந்தியாவின் புனேவுக்கு (Pune) அருகில் உள்ள ஜெயண்ட் மெட்ரேவேவ் ரேடியோ டெலஸ்கோப் (Giant Metrewave Radio Telescope - GMRT) என்கிற தொலைநோக்கியை பயன்படுத்தி ஒரு மகத்தான மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.

விண்வெளியில் கேட்கும் 'ஹம்' சத்தம்.. எங்கிருந்து வருகிறது?

ஈர்ப்பு அலைகள் (Gravitational waves) என்பது வெறும் கற்பனையல்ல. அவைகள் உண்மையாகவே இருக்கின்றன என்பதை அதிகாரப்பூர்வமாக கண்டறிந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு, ஈர்ப்பு அலைகளானது பிரபஞ்சம் முழுவதும் ஒலிக்கும் "பின்னணி ஓசையை" (Background Hum) உருவாக்குவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் பிரபஞ்சத்தின் எந்தவொரு பகுதியிலுமே ஏராளமான ஈர்ப்பு அலைகள் எப்போதும் இருப்பதற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, ஈர்ப்பு அலைகலின் ஒருங்கிணைந்த விளைவுகள் (Combined effects) ஆனது விண்வெளி நேரத்தை (Space Time) தொடர்ந்து சிதைத்து மீண்டும் வடிவமைக்கின்றன."

அதுமட்டுமின்றி, "அவைகள் விண்வெளியில் உள்ள ஒவ்வொரு கிரகம், நட்சத்திரம் அல்லது பிற விண்வெளி பொருட்களின் இயக்கத்தையும், நடத்தையையும் (Motion and Behaviour ) மாற்றுகிறது" என்பதையும் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பின் மூலம், விஞ்ஞானிகள் இயற்பியல் யதார்த்தத்தை () பற்றி மேலும் அறிந்து கொள்வார்கள்

மேலும் இந்த கண்டுபிடிப்பு, சூப்பர்-மாசிவ் பிளாக்ஹோல்களை (Supermassive black holes) ஒன்றிணைக்கும் தன்மை மற்றும் அவற்றை எது ஒன்றிணைக்கிறது என்பது தொடர்பான மர்மங்களையும் உடைக்கலாம். இந்த மகத்தான கண்டுபிடிப்பை சாத்தியமாக்கிய ஜெயண்ட் மெட்ரேவேவ் ரேடியோ டெலஸ்கோப் ஆனது உலகிலுள்ள 6 மிகவும்-உணர்திறன் வாய்ந்த ரேடியோ தொலைநோக்கிகளில் (Most sensitive radio telescopes) ஒன்றாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த கண்டுபிடிப்பில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஈர்ப்பு அலைகளானது - ஒளியின் வேகத்தில் - பிரபஞ்சம் முழுக்க தடையின்றி பயணிக்கின்றன என்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) கணித்து விட்டார். இருப்பினும் தற்போது தான் அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈர்ப்பு அலைகள் எங்கிருந்து வருகின்றன? ஏறக்குறைய அனைத்து விண்மீன் திரள்களிலும் (Galaxies) உள்ள சூப்பர்மாசிவ் பிளாக்ஹோல்கள் உள்ளன. அவைகள் நமது சூரியனை போல பல மில்லியன் முதல் பல பில்லியன் மடங்கு எடை (Mass) கொண்டவைகளாக உள்ளன.

பிரபஞ்சத்தில் உள்ள இரண்டு விண்மீன் திரள்கள் ஒன்றாக இணையும் போது, ​அவைகளில் உள்ள பிளாக் ஹோல்களும் கூட "நீண்ட சுழற்சிகளுக்கு" பின்னர் ஒன்றிணையும் என்று நம்பப்படுகிறது. அப்படியான ஒன்றிணைப்பின் போது கருந்துளைகளானது ஈர்ப்பு அலைகளை வெளியிடுகிறது.

ஹம்மிங் என்றால் என்ன? இரண்டு கருந்துளைகள் ஒன்றாக இணையும் போது உருவாகும் அலைகளானது ஓவர்லேப் (Overlap) ஆகும்போது, அவைகள் ஈர்ப்பு அலைகளின் பின்னணி ஓசையை உருவாக்குகின்றன. இந்த ஓசையானது ஸ்டோகாஸ்டிக் ஈர்ப்பு அலை பின்னணி (Stochastic Gravitational Wave Background) என்றும் அழைக்கப்படுகிறது.

Photo Courtesy: www.gmrt.ncra.tifr.res.in

Best Mobiles in India

English summary
Scientists From India Hear Humming of Gravitational Waves using Most Sensitive Radio Telescope GMRT
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X