பூமியின் மையப்பகுதி கூல் ஆகிறதா? இது ஆபத்தா? பூமியை அழிக்கக்கூடியதா? விஞ்ஞானிகள் விளக்கம்.!
இயற்கை என்பது பல ஆச்சரியங்கள் நிறைந்த ஒன்று. அதன் செயல்பாடுகளைப் பற்றி நாம் தெரிந்து, புரிந்து கொள்ளும் பொழுது, அது நம்மை வியப்படைய செய்கிறது. இது தான் உண்மையும் கூட. ஒரு உயிர் வாழ்வதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் பூமியில் (Earth) தான் இருக்கிறது.
இது எப்படி? என்று நம்மில் பலர் அவ்வப்போது யோசிப்பதுண்டு. சரியான வெப்பநிலை (Temperature), அழுத்தம் (pressure), தாது உப்புக்கள் (mineral salts), சத்துக்கள் (nutrients), வாயுக்கள் (gases) என்று ஒரு உயிர் உருவாகி, நிலையாக வாழ தேவையான அனைத்துமே நம் பூமியில் இருக்கிறது. இந்த அனைத்தயும் வைத்து தான் நமக்கு தேவையானவற்றை நாம் பூமியில் உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

பூமியில் இருக்கும் தாது உப்புக்கள், சத்துக்கள், தண்ணீர் (water), பூமியின் ஈர்ப்பு விசை (Gravity), வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் போன்றவற்றிற்கு இணையான முக்கியத்துவம் கொண்டது பூமியின் வெப்பநிலை. எந்த ஒரு பொருளுக்கும் குறிப்பிட்ட வெப்பநிலை என்று ஒன்று இருக்கும். அதே போலப் பூமிக்கும் ஒரு வெப்பநிலை உள்ளது.
பூமி உருண்டையின் மத்தியில் இருக்கும் கோர் (Core) ஆனது வேதிப்பொருட்களால் நிறைந்தது. அது பெரும்பாலும் இரும்பு (Iron) மற்றும் நிக்கலின் (Nickel) கலவையால் உருவாகி இருக்கும். பூமி பிறந்த சமயத்தில், இந்த கோரானது திரவ வடிவத்தில் இருந்திருக்கும். ஆண்டுகள் நகர-நகர, இந்த திரவமானது மெல்லப் படிகமாகி (Crystallize), திட (Solid) வடிவத்தினை அடைந்திருக்கும். அப்படி திட வடிவத்தை அடையும் பொழுது அதன் வெப்பநிலை குறையும்.
பூமியின் சரியான வெப்பநிலைக்கு அதன் கோரில் இருக்கும் அதிக வெப்பமே காரணம். கோரின் வெப்பம் போதுமான அளவு இருந்தால் மட்டுமே பூமி சரியான அளவு வெப்பநிலையைக் கொண்டிருக்கும். இப்போது இருக்கும் பூமியின் வெப்பநிலை குறையும் பட்சத்தில், பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் அனைத்தும் அழிந்து விடும். இதன் காரணமாகத் தான், மிகவும் குறைந்த வெப்பநிலை கொண்ட பகுதிகளில் மனிதர்கள் வாழ முடிவதில்லை.

நீர் மற்றும் நிலத்தால் (Land) உருவாகியுள்ள பூமியில், பூமியின் வெப்பநிலை குறைந்தால் என்னவாகும்? என்று யோசித்துப் பாருங்கள். கடலில் (Sea) உள்ள நீர் உரைந்து நீர்வாழ் உயிரினங்கள் (Aquatic organisms) அழிந்துவிடும். அதேபோல நிலத்தின் வெப்பநிலை குறையும் பொழுது, அது விவசாயத்திற்கு (Agriculture) ஏதுவான நிலமாக இருக்காது. பூமியின் வெப்பநிலை குறையும் பட்சத்தில் வளிமண்டலத்தின் அளவும் குறைந்துவிடும்.
மேலும், தேவையான வாயுக்கள் வளிமண்டலத்தில் இருக்காது. இதுவும் மனிதன் வாழ்வதற்கான ஆதாரத்தைக் குறைத்து விடும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பூமியின் கோரானது மெல்ல-மெல்ல குளிர்ந்து (Earth's core cooling) வருகிறது. பூமியின் கோர் ஆண்டுக்கு ஒரு மில்லிமீட்டர் என்ற வேகத்தில் குளிர்ந்து வருகிறது என்பதே உண்மை. இது இப்படியே தொடர்ந்தால், மேலே கூறப்பட்ட அனைத்து சம்பவங்களும் என்றாவது ஒரு நாள் கட்டாயம் நிகழும் என்கின்றனர் விஞ்ஞானிகள் (Scientists).
இப்படி ஒரு மோசமான சம்பவம் நிகழ, இன்னும் சுமார் ஐந்து பில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதே நிலையில் பூமியின் கோர் குளிர்ச்சி அடைந்து வந்தால், 5 மில்லியன் வருடங்களுக்கு பிறகு, பூமி முற்றிலுமாக மனிதன் வாழத் தகுதி இல்லாத கிரகமாக மாற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

அதே போல, பூமியின் கோர் தான் அதன் காந்த தன்மைக்கும் காரணம். முற்றிலுமாக திட வடிவம் பெற்று வெப்பநிலை குறையும் பட்சத்தில், பூமியில் உள்ள காந்த தன்மை மங்கிவிடும். அந்த நிலையை அடையும் பொழுது, சூரியனில் (Sun) இருக்கும் துகள்கள் பூமியை சுற்றியுள்ள வளிமண்டலத்தை அளித்து விடும். இத்தகைய காரணத்தினால் தான், செவ்வாய் கிரகம் (Mars Planet) தற்போது செம்மண் மேடாக, தூசி கிரகமாக காட்சியளிக்கிறது.
இரவு நேரத்தில் பூமிக்கு வெளிச்சம் தரும் நிலவும் இப்படித் தான் உருவாகியுள்ளது. செவ்வாய் (Mars) கிரகத்திற்கு இணையான வடிவம் கொண்ட தியா (Theia) என்னும் கிரகம் மெல்ல-மெல்ல படிகமாகி, திட வடிவம் பெற்று தான் நிலவாக (Moon) மாறி உள்ளது. இது பூமியின் பிறப்பு அதாவது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் முன்னர் நடந்துள்ளது.
பூமியும், நிலவும் ஒரே சமயத்தில் தான் திரவ வடிவத்தில் இருந்து திட வடிவம் பெற ஆரம்பித்துள்ளது. ஆனால், நிலவானது பூமியை விட சிறிய வடிவம் கொண்டுள்ளதால் வேகமாக படிகமாகி திட வடிவம் பெற்றுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் இருக்கும் ஒரு ஆறுதலான தகவல் என்னவென்றால், சூரியனின் இருக்கும் வரை, பூமியின் கோர் மொத்தமாக திட வடிவம் பெற்றது என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், பூமி மனித வாழ்விற்குச் சாத்தியம் இல்லாத கிரகமாகப் பூமி முற்றிலும் மாற வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லையாம். அதற்கு இன்னும் பல பில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்படும் என்று ஆறுதல் வார்த்தையை விஞ்ஞானிகள் இறுதியில் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications