பூமியின் அல்ட்ரா பிளாக் நிற மீன் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு! ரகசியத்தையும் அவிழ்த்துவிட்ட விஞ்ஞானி!

|

மனிதனால் கண்டுபிடிக்கப்படாத பல இரகசியங்கள் இன்னும் ஆழ்கடலில் எங்கோ ஒரு இருட்டில் கண்டுபிடிக்கமுடியாமல் மூழ்கித்தான் இருக்கிறது. அப்படி இத்தனை ஆண்டுகளாக மறைந்திருந்த ஒரு அபரிமிதமான உண்மையை விஞ்ஞானிகள் தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர். பூமியின் அல்ட்ரா பிளாக் நிறத்தை உடைய ஆழ்கடல் உயிரினங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

அபரிமிதமான இருளில் வசிக்கும் உயிரினங்கள்

அபரிமிதமான இருளில் வசிக்கும் உயிரினங்கள்

ஆழ்கடலின் அபரிமிதமான இருளில் வசிக்கும் மீன்களுக்கு, அல்ட்ரா பிளாக் என்றழைக்கப்படும் அடர்ந்த இருள் கொண்ட கருப்பு நிறம் என்பது அவற்றிற்குக் கிடைத்த வரப்பிரசாதம். இந்த அடர்ந்த அல்ட்ரா பிளாக் நிறங்கள் தான் இந்த உயிரினங்களுக்கு தனது இரையை இருட்டில் மறைந்து வேட்டையாட உதவுகிறது. ஆழ்கடல் அரிய வகை மீன்கள், ஆழ்கடல் இருளில் தனது உணவை எப்போதாவது தான் வேட்டையாடுகிறது.

அடர்ந்த அல்ட்ரா பிளாக் நிறம்

அடர்ந்த அல்ட்ரா பிளாக் நிறம்

இவற்றின் அடர்ந்த அல்ட்ரா பிளாக் நிறங்கள் இவற்றிற்கு பெரும் உருமறைப்பை வழங்குகிறது. இந்த ஆழ்கடல் உயிரினங்களில் சில கவர்ச்சியான உயிரினங்களும் உள்ளது. இவை தனது உடலில் உள்ள சில பாகங்களை ஒளிரச் செய்து தனது உணவைக் கவர்ந்து வேட்டையாடுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்படி வேட்டையாடும் உயிரினங்களில் புதிய வகை அல்ட்ரா பிளாக் மீனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்!உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்!

ரகசியத்தை அவிழ்த்துவிட்ட விஞ்ஞானிகள்

ரகசியத்தை அவிழ்த்துவிட்ட விஞ்ஞானிகள்

இவற்றைக் கண்டுபிடித்தது மட்டுமின்றி, இப்போது இவற்றின் தீவிரமான அல்ட்ரா பிளாக் நிறத்திற்குப் பின்னால் உள்ள ரகசியத்தையும் அவிழ்த்துவிட்டனர். இதற்கான காரணம் என்ன என்பதுடன், இவர்கள் கண்டுபிடித்துள்ள ரகசியத்தை வைத்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர். உண்மையில் இவர்கள் திட்டமிடும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டால் சுவாரசியமாகத் தான் இருக்கும்.

ஃபாங்க்டூத், பசிபிக் பிளாக் டிராகன், ஆங்லெர்ஃபிஷ்

ஃபாங்க்டூத், பசிபிக் பிளாக் டிராகன், ஆங்லெர்ஃபிஷ்

பூமியின் அல்ட்ரா பிளாக் நிற மீன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மீன்கள் ஃபாங்க்டூத், பசிபிக் பிளாக் டிராகன், ஆங்லெர்ஃபிஷ் மற்றும் பிளாக் ஸ்வாலோவர் மீன்கள் போன்ற போல அவற்றின் தோலில் உள்ள நிறமியின் வடிவம், அளவு மற்றும் தொகுப்புகள் அதன் உடலில் படும் ஒளியை வெறும் 0.5% க்கும் குறைவான அளவுக்கு மட்டுமே பிரதிபலிக்கும் அளவிற்கு அமைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பரிணாம வரலாற்றைக் கொண்ட மீன்கள்

பரிணாம வரலாற்றைக் கொண்ட மீன்கள்

அல்ட்ரா பிளாக் என்று வரையறைக்குப் பொருந்தக்கூடிய 16 ஆழ்கடல் இனங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து ஆராய்ச்சி செய்து வந்துள்ளனர். இதில் ஆறு வெவ்வேறு மீன்களில் ஒவ்வொன்றும் ஒரு பகிரப்பட்ட பரிணாம வரலாற்றைக் கொண்ட பெரிய குழுக்கள் என்று அறியப்பட்டுள்ளது. இவற்றின் உடலில் உள்ள இந்த அல்ட்ரா பிளாக் நிற மாற்றம் அனைத்தும் சுயாதீனமாக உருவாகியிருப்பதைக் குறிக்கிறது என்று கூறியுள்ளனர்.

வெயிட் பண்ணி வாங்க அடுத்த சூப்பர் போன் இதுதானோ? மோட்டோ ஜி 9 பிளஸ் விலை இவ்வளவு தானா?வெயிட் பண்ணி வாங்க அடுத்த சூப்பர் போன் இதுதானோ? மோட்டோ ஜி 9 பிளஸ் விலை இவ்வளவு தானா?

இருளில் மறைந்து வேட்டை

இருளில் மறைந்து வேட்டை

ஆழமான இருண்ட திறந்த கடலில், உணவு கிடைப்பது என்பது அரிது, கிடைக்கும் உணவு வாய்ப்பை தவறவிடாமல் இருளில் மறைந்து இருந்தே வேட்டையாட வேண்டும், இவற்றிற்கு இந்த அல்ட்ரா பிளாக் நிறம் உதவுகிறது என்று ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் விலங்கியல் நிபுணர் கரேன் ஆஸ்போர்ன் கூறினார்.

ஆழ்கடலில் உள்ள ஒரே ஒளி மூலம் இது தானா?

ஆழ்கடலில் உள்ள ஒரே ஒளி மூலம் இது தானா?

மிகக் குறைந்த சூரிய ஒளி மட்டுமே கடலின் மேற்பரப்பிலிருந்து 650 அடி (200 மீட்டர்)க்கும் அதிகமாக ஊடுருவுகிறது. இந்த மீன்களில் சில மூன்று மைல் (5,000 மீட்டர்) ஆழத்தில் வாழ்கின்றன. இத்தகைய ஆழத்தில் இருளில் வாழும் பயோலுமினென்சென்ஸ் உயிரினங்களின் ஒளி உமிழ்வு மட்டுமே ஆழ்கடலில் ஒளி மூலமாக பார்க்கப்படுகிறது. அல்ட்ரா-பிளாக் மீன்களின் உடலில் உள்ள பயோலூமினசென்ட் கவர்ச்சிகரமான ஒளியைக் கொண்டுள்ளன.

பிரகாசமான ஒளியில் கூட நிழல் போல தோற்றம்

பிரகாசமான ஒளியில் கூட நிழல் போல தோற்றம்

இந்த மீன்களின் தோலில் அறியப்பட்ட நிறமிகள் பூமியின் அடர்ந்த கறுப்புப் நிற பொருட்களில் ஒன்றாகும், இவை ஒளியை மிகவும் திறமையாக உறிஞ்சுகிறது, பிரகாசமான ஒளியில் கூட இவை நிழற்கூடங்களாக மட்டுமே தோற்றமளிக்கிறது என்று இவற்றைப் புகைப்படம் எடுக்க முயன்ற ஆஸ்போர்ன் கூறியுள்ளார். தற்பொழுது இந்த மீன்கள் கூடுதல் ஆராய்ச்சிக்காக மேற்பரப்பிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரகசியத்தின் பின்னனியில் உள்ள உண்மை

ரகசியத்தின் பின்னனியில் உள்ள உண்மை

இதன் சருமத்தில் நிறமி மெலனின் ஏராளமாக உள்ளது மற்றும் அசாதாரண பாணியில் விநியோகிக்கப்படுகிறது. சரும செல்கள் உள்ளே நிறமி நிரப்பப்பட்ட கட்டமைப்புகள் - சருமத்தின் மேற்பரப்பில் இறுக்கமாக நிரம்பிய தொடர்ச்சியான அடுக்குகளாக பேக்கேஜிங் செய்யப்பட்டுள்ளது. இதனால் மீன்கள் அவற்றின் மேல் படும் ஒளியை முற்றிலுமாக உரிந்து அல்ட்ரா பிளாக் நிறத்தில் காட்சியளிக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

அல்ட்ரா-பிளாக் தொழில்நுட்ப ஐடியா

அல்ட்ரா-பிளாக் தொழில்நுட்ப ஐடியா

மெல்லிய மற்றும் நெகிழ்வான அல்ட்ரா-பிளாக் பொருளை உருவாக்க இந்த வழிமுறை உதவும் என்று கூறப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்ப ஒளியியலுக்காக அல்லது இரவு நேர உருமறைப்புப் பொருள்களுக்காக இந்த மீன்களின் சருமத்தில் உள்ள அடுக்குமுறைகளை பயன்படுத்தி அல்ட்ரா பிளாக் சூட்கள் அல்லது பொருட்களைக் கூட உருவாக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Scientists Discovered The Secrets Behind Ultra-Black Fish In The Deepest Depths Of The Ocean : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X