வாய்பிளந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.. இவ்ளோ வருஷம் எங்க கண்ணுல சிக்காத விஷயம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த ஏஐ!
ஒரு கத்தி யார் கையில் இருக்கிறது என்பதை பொறுத்தே.. அது ஒருவரை காயப்படுத்த பயன்படப்போகிறதா அல்லது காய்கறிகளை நறுக்கி 10 பேரின் பசியை ஆற்றப்போகிறதா என்பதை முடிவு செய்ய முடியும். அதாவது, சரியானவர்களின் கையில் எது கிடைத்தாலும் அது சரியான முறையில் தான் பயன்படுத்தப்படும்!
அப்படியான ஒரு வேலையைத்தான் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தை ( University of Georgia) சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி குழுவினர் செய்துள்ளனர். ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) தொடர்பான சிக்கல்கள், விளைவுகள் மற்றும் ஆபத்துகள் பற்றி நாமெல்லாம் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் வேளையில் ஏஐ-யை (AI) வைத்து ஒரு "தரமான" கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.

செயற்கை நுண்ணறிவின் ஒரு பிரிவான இயந்திர கற்றலை (Machine Learning) பயன்படுத்தி அவர்கள் "ஒரு நம்பமுடியாத" எக்ஸோப்ளானெட்டை (Exoplanet) கண்டறிந்துள்ளனர். அதாவது இதுநாள் வரையிலாக விண்வெளி ஆரய்ச்சியாளர்களின் கண்களில் சிக்காத, சூரிய கிரகத்திற்கு வெளியே உள்ள ஒரு பெரிய கிரகத்தை ஏஐ உதவியுடன் கண்டறிந்துள்ளனர்.
அறியாதோர்களுக்கு நமது சூரிய குடும்பத்திற்கு (Solar System) வெளியே உள்ள கிரகங்கள் எல்லாமே எக்ஸோப்ளானெட் என்றே குறிப்பிடப்படுகின்றன. அதிலும் ஏஐ வழியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய எக்ஸோப்ளானெட்டின் சிறப்பு என்னவென்றால், இது நமது சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் (Jupiter) கிரகத்தை விட 5 மடங்கு பெரியதாக இருக்கிறது.
எப்படி இவ்வளவு பெரிய கிரகம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வானியலாளர்களின் கண்களில் சிக்காமல் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸிடம் சிக்கியது? என்கிற கேள்விக்கு, தி ஆஸ்ட்ரோபிஸிக்கல் ஜர்னலில் (The Astrophysical Journal) வெளியிடப்பட்ட 2 சமீபத்திய ஆய்வு கட்டுரைகளின் வழியாக பதில்களை பெற முடிகிறது.
மேற்குறிப்பிட்ட 2 ஆய்வு கட்டுரைகளும், இளம் நட்சத்திரங்களை (Young stars) சூழ்ந்திருக்கும் அடர்த்தியான தூசி வட்டுகளுக்குள் (Dense dust disks) உருவாகும் கிரகங்களையும், அவற்றின் அறிகுறிகளையும் (Signs of Forming Planets) அடையாளம் காண இயந்திர கற்றல் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை பற்றி விளக்கமாக பேசுகின்றன.
ஏஐ-ஆல் கண்டுபிடிக்கப்பட்ட, மிகவும் பிரம்மாண்டமான புதிய கிரகமானது அதன் நட்சத்திரத்திலிருந்து 75 ஆஸ்ட்ரானாமிகல் யூனிட்ஸ் (Astronomical units) என்கிற தூரத்தில் சுற்றி வருகிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில், ஏஐ-யின் இந்த நுழைவானது இளம் கோள்களை கண்டறிவதற்கான வேகத்தையும், செயல்திறனையும் கணிசமாக மேம்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதேபோல சமீபத்தில், பூமியில் இருந்து 670 ஒளியாண்டுகள் (Light years) தொலைவில் உள்ள ஒரு எக்ஸோப்ளானெட்டில் ஒரு அரிய உலோகம் (Rare Metal) கண்டுபிடிக்கப்பட்டது. அது டெர்பியம் (Terbium) என்று அழைக்கப்படும் ஒரு உலோகமாகும். குறிப்பிட்ட உலோகத்தை கொண்டுள்ள எக்ஸோப்ளானெட் கெல்ட்-9 பி (KELT-9 b) என்று அழைக்கப்படுகிறது.
டெர்பியம் என்பது லாந்தனாய்டுகள் (Lanthanoids) என்று அழைக்கப்படும், பூமியிலும் காணப்படும் ஒரு அரிய உலோகமாகும். இது முதன் முதலாக, கடந்த 1843 ஆம் ஆண்டில் ஸ்வீடிஷ் வேதியியலாளரான கார்ல் கஸ்டாஃப் மொசாண்டர் (Carl Gustaf Mosander) என்பவரால் ஸ்டாக்ஹோம் தீவுக்கூட்டத்தில் (Stockholm Archipelago) உள்ள அட்டர்பி (Ytterby) சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது!


Click it and Unblock the Notifications