ஒரு நூற்றாண்டிற்கு பின் ஐன்ஸ்டீன் கோட்பாடு உண்மையானது.. கருந்துளைக்கு பின்னாலிருந்து வெளிவந்த ஒளி.!

|

ஆராய்ச்சியாளர்கள் இப்போது பூமியிலிருந்து 800 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு மாபெரும் கருந்துளையின் பின்னால் இருந்து ஒளியின் வெளிச்சம் வெளிப்படுவதைக் கண்டுள்ளனர். நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, "எதிரொலிகள்" என்று அழைக்கப்படும் இந்த ஒளி அலைகள் எக்ஸ்-கதிர்கள் வடிவில் கண்டறியப்பட்டன. இது பற்றி ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது பொது சார்பியல் கோட்பாட்டின் மூலம் இந்த விளைவு பற்றி விளக்கமளித்துள்ளார்.

ஒரு நூற்றாண்டிற்கு முன்பு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வழங்கிய கோட்பாடு

ஒரு நூற்றாண்டிற்கு முன்பு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வழங்கிய கோட்பாடு

கருந்துளைகளின் ஈர்ப்பு விசை மிகவும் வலுவாக இருக்கும் போது, அவை காந்தப்புலங்களை முறுக்கி அவற்றைச் சுற்றி ஒளி அலைகளை வளைக்கக் கூடிய ஆற்றலைப் பெறக்கூடியவை என்று ஐன்ஸ்டீன் தெரிவித்திருக்கிறார். இதனால் ஒளி கதிர்களை கருந்துளை எல்லா நேரங்களிலும் தனக்குள் பதுக்கி சிக்க வைத்து விடும் என்று உறுதியாக நாம் கூறிவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வழங்கிய கோட்பாடு இத்தனை நாட்கள் நிரூபிக்கப்படாமல் இருந்தது.

கருந்துளைக்குள் ஒளி அலைகள் முற்றிலுமாக விழுங்கப்படுமா?

கருந்துளைக்குள் ஒளி அலைகள் முற்றிலுமாக விழுங்கப்படுமா?

ஐன்ஸ்டீனின் கோட்பாட்டின் படி, கருந்துளைக்குள் விழுங்கப்படும் நட்சத்திரங்கள் மற்றும் சிறுகோள்களின் ஒளி அலைகள் முற்றிலுமாக கருந்துளைக்குள் மறைந்துவிடுவது இல்லை. இது சில சமயங்களில் கருந்துளையின் மறுபக்கம் அல்லது பின்புறத்தில் வெளியே அதன் ஒளி வெளியேற்றப்படுவதைக் காண்பதற்குச் சாத்தியமிருக்கிறது என்றும், நிச்சயமாக ஒரு வாய்ப்புள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கோட்பாடு இப்போது ஆதாரத்துடன் சரியானது தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

தெய்வம்., பூமியை பிளந்தும் கொடுக்கும்- கிணறு தோண்டும்போது கிடைத்த அபூர்வ கல்- 510 கிலோ, ரூ.745 கோடி மதிப்பு!தெய்வம்., பூமியை பிளந்தும் கொடுக்கும்- கிணறு தோண்டும்போது கிடைத்த அபூர்வ கல்- 510 கிலோ, ரூ.745 கோடி மதிப்பு!

தலைகீழாகத் திரும்பியது கோட்பாடு

தலைகீழாகத் திரும்பியது கோட்பாடு

கருந்துளைகள் ஆரம்பத்தில் வெறும் வெற்று இடங்கள் என்று நம்பப்பட்டது. இருப்பினும், ஆராய்ச்சியாளர்கள் இன்னும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டபோது, ​​கோட்பாடு தலைகீழாகத் திரும்பியது. காரணம், கருந்துளை என்பது ஒரு சிறிய அளவுப் பொருள் நிறைந்த ஒரு சிறிய பகுதி என்பதை ஆராய்ச்சி கண்டறிந்தது.

கருந்துளையின் வலுவான ஈர்ப்பு விசை

கருந்துளையின் வலுவான ஈர்ப்பு விசை

சூரியனை விட பத்து மடங்கு பெரிய நட்சத்திரமாகக் கருந்துளையை நினைத்துப் பாருங்கள், இது ஒரு சிறிய நகரத்தின் அளவுக்கு சுருக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். இந்த சுருக்கமானது ஒளியைக் கூட தப்பவிடாது, இது வலுவான ஈர்ப்பு விசையை உருவாக்குகிறது. கருந்துளை என்றாலே அதில் அதிக ஈர்ப்பு விசை உள்ளது என்பது நம் அனைவரும் அறிந்த ஒரு தகவலே.

அடி தூள்.! வெறும் ரூ. 7,999 விலையில் மிரட்டலான மைக்ரோமேக்ஸ் in 2b அறிமுகம்.. விற்பனையை மிஸ் பண்ணிடாதீங்க..அடி தூள்.! வெறும் ரூ. 7,999 விலையில் மிரட்டலான மைக்ரோமேக்ஸ் in 2b அறிமுகம்.. விற்பனையை மிஸ் பண்ணிடாதீங்க..

கருந்துளையின் மறுபக்கத்திலிருந்து ஒளி அலைகள் வெளி வருமா? அதற்கு சாத்தியம் உள்ளதா?

கருந்துளையின் மறுபக்கத்திலிருந்து ஒளி அலைகள் வெளி வருமா? அதற்கு சாத்தியம் உள்ளதா?

முந்தைய ஆய்வுகள் ஒளி அலைகள் கருந்துளையைச் சுற்றி வளைக்கின்றன என்பதை நிரூபித்துள்ளன. இருப்பினும், கருந்துளையின் மறுபக்கத்திலிருந்து ஒளி அலைகள் வெளியே வருவதை விஞ்ஞானிகள் பார்த்தது இதுவே முதல் முறை. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக வானியல் இயற்பியலாளரும் ஆய்வின் இணை ஆசிரியருமான டான் வில்கின்ஸ், ஒரு அறிக்கையில் கருந்துளைக்குள் செல்லும் எந்த வெளிச்சமும் வெளியே வருவதில்லை என்று கூறினார்.

எக்ஸ்ரே கதிர்வீச்சு மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உண்மை

எக்ஸ்ரே கதிர்வீச்சு மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உண்மை

ஆனால், கருந்துளைக்குப் பின்னால் ஒளி வெளியாகிறதா இல்லையா என்பதை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஆனால், எக்ஸ்ரே கதிர்வீச்சு மூலம் நாம் இதைப் பார்க்க முடிந்துள்ளது, கருந்துளை விண்வெளியை வளைத்து, ஒளியை வளைத்து, தன்னைச் சுற்றியுள்ள காந்தப்புலங்களை முறுக்குவதால், கருந்துளையின் பின்னாலிருந்து ஒளி வெளிவருவது தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது. வில்கின்ஸ் மற்றும் அவரது குழு சுழல் விண்மீனின் மையத்தில் உள்ள கருந்துளையை ஆய்வு செய்ய ஒரு சிறப்பு உயர்-சக்தி எக்ஸ்-ரே தொலைநோக்கியைப் பயன்படுத்தியது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Scientists Detect Light Being Ejected From Behind Black Hole That Proves Einstein Theory Is Correct : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X