விஞ்ஞானிகள் வடிவமைத்த ஃபிராக்ஃபோன்: இதில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?

|

விஞ்ஞானிகள் இறுதியாக ஒரு பழமையான பிரச்சினையை தீர்த்துள்ளனர். அப்படி என்ன பிரச்சனை என்று யோசிக்கிறீர்களா? ஆய்வகத்தை விட்டு வெளியேறாமல் காட்டு தவளை கூட்டத்தை எவ்வாறு கண்காணிப்பது?.

தொலைதூர கணக்கெடுப்பு தளங்களை அணுகலாம்

தொலைதூர கணக்கெடுப்பு தளங்களை அணுகலாம்

இதற்கான விடையாக இருப்பது தான் "ஃபிராக்ஃபோன்" என மகிழ்ச்சியுடன் பெயரிடப்பட்ட ஒலி கண்காணிப்பு சாதனம். இந்த ஃபிராக்ஃபோனைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் தொலைதூர கணக்கெடுப்பு தளங்களை அணுகலாம் மற்றும் 150 மீட்டர் தொலைவு வரை தவளை அழைப்புகளை (ப்ராஃக் கால்) பதிவு செய்யலாம். மேலும்சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியம் குறித்த முக்கியமான தகவல்களை உடனடியாக சேகரிக்கமுடியும்.

பிரிட்டிஷ் ஈகாலாஜிகல் சொசைட்டி

பிரிட்டிஷ் ஈகாலாஜிகல் சொசைட்டி

இந்த ப்ராக்ஃபோன் யோசனை என்பது குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆனால் பெருங்களிப்புடையது என்பதை முதலில் ஒப்புக்கொள்வோம். இம்முட்டாள்தனமான பெயரை ஒதுக்கிவிட்டு பார்த்தால், இந்த தொழில்நுட்பமானது சுற்றுச்சூழல் ஆராய்ச்சியை குறைந்த நேரம் மற்றும் செலவுகளை உடையதாக மாற்றுகிறது என்று கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் ஈகாலாஜிகல் சொசைட்டி என்ற ஆய்வு இதழில் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?

விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள்

ஒவ்வொரு முறையும் புதிய தரவு தேவைப்படும்போது ஒரு பகுதிக்குச் செல்வதற்குப் பதிலாக, விஞ்ஞானிகள் இப்போது ஒரு ஃபிராக்ஃபோன் ரிசீவரை அமைக்க ஒவ்வொரு வாழ்விடத்திற்கு ஒரு முறை மட்டுமே பயணிக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் ஆய்வகத்திலிருந்து சவுகரியமாக டயல் செய்தால் போதும்.

 ப்ராக்ஃபோனின் வடிவமைப்பாளர்கள்

ப்ராக்ஃபோனின் வடிவமைப்பாளர்கள்

இந்த ப்ராக்ஃபோனின் வடிவமைப்பாளர்கள் இதற்கு ஒரு நீர்ப்புகா வெளிப்புற கவசத்தை உருவாக்கியதன் காரணமாக, இந்த சாதனம் குளத்தின் நடுவில் உள்ள சிறிய அலைகளுக்கு மத்தியிலும் மிதக்க முடிகிறது. எதிர்காலத்தில் பல திசை ஒலிவாங்கிகள் அல்லது பிற விலங்குகளின் குரல்களை பதிவு செய்வதற்கான பரந்த திறன்களை உள்ளடக்கியிருக்கும் சாதனத்தை உருவாக்கவுள்ளதாகவும், இது சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை சிறப்பாகக் கண்காணிக்க உதவும் என்றும் இதுகுறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவளைகளின் எண்ணிக்கை

தவளைகளின் எண்ணிக்கை

தவளைகளின் எண்ணிக்கையை அடிக்கடி மற்றும் எளிதில் கண்காணிக்க இந்த சாதனம் எங்களை அனுமதிக்கிறது. தவளை இனங்கள் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் குறிகாட்டிகளாக பரவலாக அங்கீகரிக்கப்படுவதால் இது மிகவும் முக்கியமானது. "என்று இந்த ஆய்வுக்கட்டுரையின் இணை எழுத்தாளரும், பிராந்திய ஃபிராக்வாட்ச் ஒருங்கிணைப்பாளருமான அன்கே மரியா ஹோஃபர் கூறுகிறார்.

Best Mobiles in India

English summary
SCIENTISTS BUILT A “FROGPHONE” TO REMOTELY SURVEY FROG HABITATS : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X