பறந்து பறந்து தேங்காய் பறிக்கும் 'ஃப்ளை-கோகோபோட்' ட்ரோன்.. உண்மையில் இது விவசாயியின் உயிர் காவலன் தான்..பலே.!

|

கடலோர விவசாய நுட்பங்களுக்கு ஒரு புரட்சிகர மாற்றமாக இருக்கக்கூடிய வகையில் இந்திய விஞ்ஞானிகள் ஒரு வித்தியாசமான பறக்கும் ட்ரோனை உருவாக்கி வருகின்றனர். தென்னை மரங்களிலிருந்து தேங்காய்களைப் பறிக்கப் பயன்படுத்தும் வகையில் இந்த ட்ரோன் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய ட்ரோன் விவசாயிகளின் உயிரைக் காப்பாற்ற உதவும் என்று கூறப்பட்டுள்ளது. எப்படி இந்த ட்ரோன் உருவாக்கப்படுகிறது? மரங்களில் இருக்கும் தேங்காய்களை எப்படிப் பறிக்க உதவுகிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.

பறந்து பறந்து தேங்காய் பறிக்கும் 'ஃப்ளை-கோகோபோட்' ட்ரோன்

பறந்து பறந்து தேங்காய் பறிக்கும் 'ஃப்ளை-கோகோபோட்' ட்ரோன்

ஐ.சி.ஏ.ஆர்-மத்திய கரையோர வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கோவா பல்கலைக்கழக வல்லுநர்களால் இந்த ட்ரோன் உருவாக்கப்படுகிறது. இதற்கு அவர்கள் 'ஃப்ளை-கோகோபோட்' என்று பெயரிட்டுள்ளனர். தேங்காய் பறிக்கும் செயல்முறையை ஆபத்தில்லாமல் செய்வதன் மூலம் எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த ட்ரோன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் சாதனம் ஒரு மரத்தின் உச்சிக்குப் பறந்து, ட்ரோன் கைகளின் உதவியுடன் மரத்தில் இருக்கும் தேங்காய்களைப் பறிக்க உதவுகிறது.

ட்ரோனின் வெட்டும் கை மற்றும் பறிக்கும் கைகள்

ட்ரோனின் வெட்டும் கை மற்றும் பறிக்கும் கைகள்

ரிமோட் கண்ட்ரோல் சாதனம் மூலம் குறிக்கக்கூடிய தேங்காய்களை வெட்டுவதற்கு இந்த ட்ரோனில் வெட்டும் ஒரு கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இது ட்ரோனின் இயக்கத்தின் நேரடி ஊட்டத்தை இயக்கும் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இந்த 'கோகோபோட்' குறித்துப் பேசிய கோவா பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேந்திர காட் கூறுகையில், 'மரத்தில் ஏறும் போது மனித உயிர்களை ஆபத்தில் ஆழ்த்த வேண்டிய அவசியமின்றி விவசாயிகள் பாதுகாப்பான தூரத்தில் இருந்து தேங்காய்களைப் பறிக்க இந்த சாதனம் அனுமதிக்கும்' என்று கூறியுள்ளார்.

சும்மா இல்ல., 62% தள்ளுபடி- அந்த விலை ஸ்மார்ட்போனே இந்த விலையில்: பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் சேல்!சும்மா இல்ல., 62% தள்ளுபடி- அந்த விலை ஸ்மார்ட்போனே இந்த விலையில்: பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் சேல்!

ஃப்ளை கோகோபோட்

ஃப்ளை கோகோபோட்

இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 12 முதல் 15 தென்னை மரங்களில் செயல்பாட்டுத் திறனைக் கொண்டிருக்கும் படி உருவாக்கப்படுகிறது. தற்போது தேங்காய் அறுவடைக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் பெரும்பாலான மனிதர்கள் இரட்டை பயிர் முறையைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இவர்களால் இரட்டை பயிர் தளங்களில் ஆளில்லா சாதனங்களைச் சமாளிக்க முடியாமல் போகிறது. இனி அதைப்பற்றிய கவலை இல்லாமல் விவசாயிகள் இந்த 'ஃப்ளை கோகோபோட்'களை பயன்படுத்தலாம்.

இரட்டை பயிர்களை ஆதரிக்கும் சாதனம்

இரட்டை பயிர்களை ஆதரிக்கும் சாதனம்

இது தேங்காய் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றின் கலப்பு பயிர் தோட்டங்களில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செயல்பாட்டுச் சிக்கல்கள் காரணமாக இரட்டை பயிர்களைத் தழுவுவதைத் தவிர்க்கும் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தேங்காய் பறிக்கும் சாதனமாக வடிவமைக்கப்பட்டுள்ள 'கோகோபோட்' இன்னும் பல வேலைகளைச் செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது.

பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..

உண்மையில் இது விவசாயியின் உயிர் காவலன் தான்

உண்மையில் இது விவசாயியின் உயிர் காவலன் தான்

வெறும் தேங்காய் மட்டுமின்றி அர்கா வெட்டு, பாமிரா பனை, எண்ணெய் பனை மற்றும் டேட்ஸ் பனை போன்ற பிற அறுவடைக்காகவும் இதை விவசாயிகள் பயன்படுத்தலாம். மேலும், குறிப்பாக இந்த கோகோபாட் ஸ்பிரேயிங் மற்றும் கட்டிங் போன்ற பிற பண்ணை நடவடிக்கைகளுக்கு இதைப் பயன்படுத்தலாம். ஐ.சி.ஏ.ஆர்-சி.சி.ஆர்.ஐ மற்றும் கோவா பல்கலைக்கழகம் விரைவில் இந்த இயந்திரத்தின் யோசனையின் காப்புரிமைக்கு ஒரு கூட்டு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Scientists Are Working On Drone Cocobot To Pluck Coconuts From Trees To Reduce Risk Of Farmers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X