இஸ்ரோவின் புதிய தலைவராகும் கேரளாவைச் சேர்ந்த விஞ்ஞானி சோம்நாத்.! முழு விவரம்.!

|

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோவின் அடுத்த தலைவராக எஸ்.சோம்நாத்தை நியமிக்க அமைச்சரவை நியமனக் குழு பரிந்துரை செயதுள்ளது. மேலும் இது தொடர்பான தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இஸ்ரோவின் தரைவராக இருக்

இப்போது இஸ்ரோவின் தரைவராக இருக்கும் கே.சிவனின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவருக்கு அடுத்ததாக சோம்நாத்
பதிவயேற்றுக் கொள்வார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் அந்தப் பதவியில் நீட்டிப்பார் என நியமனக் குழு வெளியிட்டிருக்கும்
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.6,299 மட்டுமே., அறிமுகமானது டெக்னோ பாப் 5 எல்டிஇ- 14 மொழிகள் ஆதரவு, டூயல் கேமரா, ஆண்ட்ராய்டு கோ பதிப்பு!ரூ.6,299 மட்டுமே., அறிமுகமானது டெக்னோ பாப் 5 எல்டிஇ- 14 மொழிகள் ஆதரவு, டூயல் கேமரா, ஆண்ட்ராய்டு கோ பதிப்பு!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்

அதேபோல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சூரியனை ஆராயும் ஆதித்யா திட்டம், சந்திராயன் 3, மங்கள்யான் 2 போன்ற திட்டங்கள் இவரது பதிவிக்காலத்தில் செயல்படுத்த வாய்ப்பு உள்ளது.

பந்துக்கு பந்து சிக்ஸ் தான்- பிஎஸ்என்எல் நான்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்: எல்லாமே ரூ.200-க்கு கீழ்பந்துக்கு பந்து சிக்ஸ் தான்- பிஎஸ்என்எல் நான்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்: எல்லாமே ரூ.200-க்கு கீழ்

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின்

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தற்போதைய இயக்குநராக இருக்கும் சோம்நாத், கேரளாவைச் சேர்ந்தவர். குறிப்பாக கொல்லம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ளார் சோம்நாத். அதன்பின்பு இவர் இந்திய இன்ஸ்டிடியூட் சயின்ஸில் முதுகலையாக விண்வெளிப் படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி விலைக்குறைப்பு- 8ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!அதிரடி விலைக்குறைப்பு- 8ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!

 ஆண்டு விக்ரம்

குறிப்பாக structures, dynamics and control" பிரிவில் நிபுணத்துவம் கொண்ட இவர் கடந்த 1985-ம் ஆண்டுவிக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இணைந்துள்ளார். சோம்நாத் அவர்கள் ஆரம்பக் கட்டங்களில் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்புக்கான குழுத் தரைவராக இருந்தார். அதன்பின்பு பிஎஸ்எல்வி திட்ட மேலாளராக உயர்ந்து பிஎஸ்எல்வி திட்டத்தின் வழிமுறைகள், பைரோ
அமைப்புகள், ஒருங்கிணைப்பு அகிகயவற்றை கண்காணித்து வந்ததுடன் செயற்கைகோள் ஏவுதலில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50எம்பி கேமராவுடன் புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50எம்பி கேமராவுடன் புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்

I ஏவுகணை திட்டத்தின்

அதேபோல் GSLV Mk-III ஏவுகணை திட்டத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கும் வகித்துள்ளார் சோம்நாத். மேலும் தற்போதுஇந்த புதிய பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது தமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக ஏஎன்ஐ செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சோம்நாத் கூறியுள்ளார்.

ப்ரீமியம்னா அது ஒன்பிளஸ் தான்- வந்தது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்: 80W சார்ஜிங், 48 எம்பி சோனி கேமரா!ப்ரீமியம்னா அது ஒன்பிளஸ் தான்- வந்தது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்: 80W சார்ஜிங், 48 எம்பி சோனி கேமரா!

தொழில்நுட்பம், கொள்கை, அமலாக்கம் போன்ற

மேலும் தொழில்நுட்பம், கொள்கை, அமலாக்கம் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப் போகிறேன். நாம் கவனிக்க வேண்டிய பல்வேறு பிரவுகள் இருக்கின்றன. குறிப்பாக தொழில்நுட்பத்தை பொறுத்தவரை நாம்தான் ஆற்றல் மையம். இதில் புதிய அணுகுமுறையை கொண்டு வரவேண்டியிருக்கிறது. அதன்மூலம் இருப்பவற்றை முறையாக பயன்படுத்த முடியும். அதேபோல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது என்று அவர் கூறினார்.

70% தள்ளுபடி., சரியான நேரம் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என அனைத்தும் வாங்கலாம்- அமேசான் குடியரசு தின விற்பனை!70% தள்ளுபடி., சரியான நேரம் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என அனைத்தும் வாங்கலாம்- அமேசான் குடியரசு தின விற்பனை!

 2018-ம் ஆண்டில் இருந்து இஸ்ரோ

அதேபோல் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து இஸ்ரோ தலைவராக இருக்கும் சிவனின் பதவிக்காலம் கடந்த ஆண்டுஜனவரியிலேயே முடிந்துவிட்டது. இருந்தபோதிலும் முன்னதாகவே அவருக்கு ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமீபத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜினை
இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) வெற்றிகரமான பரிசோதித்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Scientist Somnath appointed new head of ISRO: Full details!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X