ரஷ்யாவுக்கு குளுகுளுனு இருக்குமே! Chandrayaan-3 ஒத்தி வைக்கப்படும்.. உண்மையை போட்டுடைத்த ISRO விஞ்ஞானி!
ஒட்டுமொத்த இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளும் கூட சந்திரயான்-3 (Chandrayaan-3) விண்கலமானது ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு, நிலவில் வெற்றிகரமான தரையிறங்குவதை காண ஆர்வமாக இருக்கும் சூழ்நிலையில்.. இஸ்ரோ விஞ்ஞானி (ISRO Scientist) ஒருவர் சந்திரயான்-3 மூன் லேண்டிங்கின் "ஒத்திவைப்பு" குறித்து பேசியுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டரின் (ISRO Space Applications Centre) இயக்குனர் ஆன நிலேஷ் எம் தேசாய் (Nilesh M Desai), "ஆகஸ்ட் 23 அன்று, சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதற்கு லேண்டர் மாட்யூலின் ஆரோக்கியம் (Lander Module Health) மற்றும் நிலவின் நிலைமைகளின் (Conditions on the Moon) அடிப்படையில்.. அதை அந்த நேரத்தில் தரையிறக்குவது சரியானதா இல்லையா என்பதை நாங்கள் முடிவு செய்வோம்" என்று கூறியுள்ளார்.

லேண்டர் தொடர்பான காரணிகள் சாதகமற்றதாக தோன்றினால், ஆகஸ்ட் 23 ஆம் தேதி திட்டமிடப்பட்டு இருந்த சந்திரயான்-3 மூன் லேண்டிங் (Chandrayaan-3 Moon Landing) ஆனது ஆகஸ்ட் 27 க்கு ஒத்திவைக்கப்படும். இந்த முடிவை முன்னரே எடுக்க முடியாது, சந்திரயான்-3 நிலவில் தரை இறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு தான் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆக இப்போதைக்கு எந்த சந்திரயான்-3 விண்கலமானது நிலவில் தரை இறங்கும் தேதி மற்றும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. இது திட்டமிட்டபடியே ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரை இறங்கும், மேலும் இது தொடர்பான நேரலை ஆகஸ்ட் 23 மாலை 5.27 முதல் இஸ்ரோ இணையதளம், இஸ்ரோ யூட்யூப் சேனல், பேஸ்புக் மற்றும் டிடி நேஷனல் டிவி ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும்.
இஸ்ரோ விஞ்ஞானி நிலேஷ் எம் தேசாய்க்கு முன்பாக, இஸ்ரோவின் முன்னாள் தலைவரான ஜி மாதவன் நாயரும் (G Madhavan Nair) கூட சந்திரயான்-3 மிஷனின் சிக்கலான பகுதியை பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. "சந்திரயான் 3-யின் திட்டமிட்ட இயக்கங்கள் (Maneouvres) மிகவும் சிக்கலானதாக இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
"த்ரஸ்டர்கள் (Thrusters), சென்சார்கள் (Sensors), அல்டிமீட்டர்கள் (Altimeters), கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் (Computer Software) என எல்லா அமைப்புகளும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.. இவைகளில் எங்கும் ஏதேனும் சிறு தடுமாற்றம் ஏற்பட்டாலும் கூட.. நமக்கு சிக்கல் தான்" என்றும் மாதவன் நாயர் கூறியுள்ளார். கடைசி 2 கிலோமீட்டர் தூரத்தில் தான் சந்திரயான்-2 மிஷன் ஆனது தோல்வியை சந்தித்தது என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இதற்கிடையில், இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித் துறை செயலர் ஆன எஸ்.சோமநாத் (S Somanath), மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அணு ஆற்றல் மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் ஆன ஜிதேந்திர சிங்கை (Jitendra Singh) சந்தித்து சந்திராயன்-3 விண்கலத்தின் தயார்நிலை குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து அமைப்புகளும் சரியாக செயல்படுவதாகவும், புதன்கிழமை (அதாவது ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று) எந்த தற்செயலான நிகழ்வுகளும் எதிர்பார்க்கப்படவில்லை என்று எஸ்.சோம்நாத் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது "சந்திராயன்-3 இந்த முறை கண்டிப்பாக சாஃப்ட் லேண்டிங் செய்யும்" என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி எல்லாமே மிக துல்லியமாகவும், சரியாகவும் நடந்தால்.. நிலவின் தென் துருவத்தில் (South Pole) வெற்றிகரமாக சாஃப்ட் லேண்டிங் செய்த (தரை இறங்கிய) முதல் நாடு என்கிற பெருமை இந்தியாவிற்கு கிடைக்கும். இந்தியாவிற்கு கிடைக்கும் இந்த புகழ் ரஷ்யாவின் வயிற்று எரிச்சலை கிளப்பினால்.. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!
ஏனென்றால் இந்த பெருமையை தட்டிப்பறிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே லூனா-25 (Luna-25) விண்கலம் ஏவப்பட்டு, சந்திரயான்-3 க்கு முன்பாகவே.. அதாவது ஆகஸ்ட் 21 ஆம் தேதியே நிலவில் தரை இறங்க ரஷ்யா திட்டமிட்டு இருந்தது. ஆனால் ரஷ்யாவால் அதை செய்யமுடியவில்லை. கணிக்க முடியாத சுற்றுப்பாதைக்குள் நகர்ந்து சென்றதின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் 20இல் லூனா-25 விண்கலமானது சந்திரனின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கி தோல்வியில் முடிந்தது!


Click it and Unblock the Notifications








