பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த விஹெல்ம்: அனைத்து வசதியும் இருக்கு!

|

சுகாதார ஊழியர்களுக்கு உதவ புதிய கோவிட் -19 ஹெல்மெட்டை வியட்நாம் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஹெல்மெட்டுக்கு விஹெல்ம் என பெயரிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல்

கொரோனா வைரஸ் பரவல்

கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வியட்நாமில் மாணவர்கள் ஹெல்மெட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். வியட்நாம் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய இந்த ஹெல்மெட் சுகாதார ஊழியர்களை சாப்பிட அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகள்

கொரோனா தடுப்பு பணிகள்

கொரோனா பரவல் காலத்தில் தொடங்கி தற்போதுவரை சுகாதார ஊழியர்கள் அதிதீவிரமாக கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஹெல்மெட் அவர்களுக்கு பெரிதளவு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் கண்டுபிடித்த ஹெல்மெட்

மாணவர்கள் கண்டுபிடித்த ஹெல்மெட்

மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஹெல்மெட் சுவாசக் கருவியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்புக்கு மட்டுமின்றி சுகாதார ஊழிர்கள் நீண்ட காலம் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை இது கொண்டுள்ளதாக இருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

விஹெல்ம் என பெயர்

விஹெல்ம் என பெயர்

மாணவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த ஹெல்மெட்டுக்கு விஹெல்ம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் உள்ள வி எனும் சொல் வியட்நாமை குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலிவு விலை திட்டங்கள்.! சிறப்பான சலுகைகள்.!பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலிவு விலை திட்டங்கள்.! சிறப்பான சலுகைகள்.!

கையுறை பெட்டி அணுகல்

கையுறை பெட்டி அணுகல்

ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டுள்ள கையுறை பெட்டி அணுகலானது முகத்தில் உள்ள வியர்வை துளிகளை துடைத்து சாப்பிடுவதற்கு அனுமதிக்கிறது. இந்த ஹெல்மெட் கண்டுபிடிப்பானது கனடாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்குபெற்று வெற்றிப் பெற்றது. இந்த சுவாசக் கருவிகள் நிலையான முகமூடிகளை விட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

மாசுபட்ட காற்றை வெளியேற்றும் வசதி

மாசுபட்ட காற்றை வெளியேற்றும் வசதி

ஹெல்மெட் உள்பெட்டி மற்றும் மாசுபட்ட காற்றை வெளியேற்றும் வசதி கொண்டுள்ளது. இதில் காற்று சுத்திகரிப்போடு சுவாசிப்பதற்கு குழாய் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹெல்மெட் உருவாக்க வியட்நாமின் மிகப்பெரிய வென்டிலேட்டர்களின் உற்பத்தியாளரான வின்ஸ்மார்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஹெல்மெட் வடிவமைப்பு

ஹெல்மெட் வடிவமைப்பு

ஹெல்மெட் வடிவமைப்பு குறித்த கருத்துகளும் வெளியாகியுள்ளது. இந்த ஹெல்மெட்டில் பெரிய அம்சம் கையுறை பெட்டியாகும். கொரோனா பரவலில் இருந்து பாதுகாப்புக்காக இந்த அம்சம் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஹெல்மெட்டின் முன்பெட்டியில் சிற்றுண்டியை வைத்துக் கொள்வதற்கான வசதி உள்ளது.

சுவாசக் கருவி குழாய்

சுவாசக் கருவி குழாய்

ஹெல்மெட்டில் காற்று சுத்திகரிக்கும் சுவாசக் கருவி குழாய் உள்ளது. இந்த ஹெல்மெட் சுகாதார பணியாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கோவிட் 19 பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
School Students Designs New Covid 19 Vihelm For Frontline Workers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X