பொழுதுபோகாமல் பார்த்த வேலைக்கு 10000 டாலர்கள் கொடுத்த கூகுள்.!

உருகுவே நாட்டின் பள்ளி மாணவனுக்கு ஒரு சிறப்பு பரிசு தொகையை வழங்கியுள்ளது கூகுள் நிறுவனம். அந்த பள்ளி மாணவன் பெயர் இஸீக்வியல் பெரைரா.

By Prakash
|

கூகுள் என்பது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம் , மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயற்படுகிறது. கூகுள் தேடுபொறி இதன் முதன்மையான சேவை ஆகும்.

பொழுதுபோகாமல் பார்த்த வேலைக்கு 10000 டாலர்கள் கொடுத்த கூகுள்.!

கூகுள் பொறுத்தவரை பல்வேறு மென்பொருள் அம்சங்கள் மற்றும் சேவைகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. கூகுள் இணையத் தேடலுடன், கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

பொழுதுபோகாமல் பார்த்த வேலைக்கு 10000 டாலர்கள் கொடுத்த கூகுள்.!

தற்சமயம் உருகுவே நாட்டின் பள்ளி மாணவனுக்கு ஒரு சிறப்பு பரிசு தொகையை வழங்கியுள்ளது கூகுள் நிறுவனம். அந்த பள்ளி மாணவன் பெயர் இஸீக்வியல் பெரைரா, இவர் உயர்நிலை பள்ளி மாணவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கூகுள்:

கூகுள்:

கூகுள் பயன்பாடுகளில் சிறு பயன்பாடுகளில் சில சிக்கல்களை தீர்க்கும் வகையில் கூகுள் நிறுவனத்திற்க்கு இஸீக்வியல் பெரைரா பரிந்துறை செய்தார்.இதையடுத்து அவருக்கு வெகுமதி தொகை வழங்கப்பட்டது.

 இஸீக்வியல் பெரைரா:

இஸீக்வியல் பெரைரா:

இஸீக்வியல் பெரைரா என்பவர் உருகுவே நாட்டில் மேல்நிலைப் பள்ளி மாணவர் எனக் கூறப்படுகிறது, இந்த மாணவன்இணையத்தில் பல்வேறு நாட்டம் கொண்டவராக இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப் சர்வர்:

ஆப் சர்வர்:

ஆப் சர்வர் பயன்பாடுகளில் சில சிக்கல்கள் இருந்தது என தெரிவித்தார், பின்பு கூகுள் பாதுகாப்பு குழுவுடன் தகவல்கொண்டு ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்துள்ளார். அந்த சிக்கல் பொதுவாக ஆப்ஸ்பாட்.காம் (*.appspot.com) வலைதளத்தில் உள்ளதாக அந்த மாணவர் தெரிவித்தார்.

10,000 டாலர்கள்:

10,000 டாலர்கள்:

கூகுள் பாதுகாப்பு குழுவுடன் அந்த மாணவன் ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்ததை அடுத்து சில மின்னஞ்சல் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது, அதன்பின் இடையூறுகள் சரிசெய்யப்பட்டு அந்த மாணவனுக்கு 10,000 டாலர்கள் வெகுமதி தொகை கூகுள் நிறுவனம் வழங்கியது எனத் தெரிவிக்கப்பட்டது.

 பாராட்டுகள் ;

பாராட்டுகள் ;

சிக்கலைக் கண்டறிந்த இஸீக்வியல் பெரைராவுக்கு வெகுமதி தொகை மற்றும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Best Mobiles in India

English summary
School student gets $10000 from Google for something he did out of boredom ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X