Home
News

இது இப்போ வேணாம்- சமூகவலைதள கணக்குகளில் இருந்து மாணவிகள் வெளியேற அறிவுறுத்தல்!

சமூகவலைதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இடம் பொருள் ஏவல் என எதுவும் இன்றி சமூகவலைதளங்களில் தங்களை அடிமையாக்கிக் கொண்டு பொன் போன்ற காலத்தை பலர் வீணடித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு திருப்பூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவியர்கள் சமூகவலைதள கணக்குகளில் புதிதாக கணக்கு தொடங்கக் கூடாது எனவும் அப்படி கணக்கு இருக்கும் பட்சத்தில் அதில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பாலியல் வன்முறையை தடுக்க பல்வேறு நடவடிக்கை

பாலியல் வன்முறையை தடுக்க பல்வேறு நடவடிக்கை

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம், பள்ளிகளில் பாலியல் வன்முறையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூகவலைதளங்களில் இருந்து விலகி இருக்கும் படியும் குறிப்பாக சமூகவலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சமூகவலைதளங்களில் கணக்குகள் வைத்திருந்தால் அதில் இருந்து வெளியேறும்படியும் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக வழியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

பிரதான பயன்பாடாக மாறும் சமூகவலைதளம்

பிரதான பயன்பாடாக மாறும் சமூகவலைதளம்

சமூகவலைதளங்கள் என்பது பிரதான பயன்பாடாக மாறி வருகிறது. இதை பயன்படுத்தப்படும் முறைகள் குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பலர் சமூகவலைதளங்களில் புகழடைய ஏணைய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து சுயவிளம்பரம் மற்றும் ஆதாயத்திற்கு அவதூறு கருத்துகள் பதிவு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் நபர்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் யூடியூபர் உள்ளிட்ட பல சமூகவலைதள பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எல்லை மீறும் நபர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

எல்லை மீறும் நபர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

சமூகவலைதளங்களில் ஆபாச பேச்சு, அவதூறு கருத்துகள் பதிவிடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. பலர் சமூகவலைதளங்களில் சம்பாதிக்க வேண்டும், பிரபலமடைய வேண்டும் என்ற சுய விளம்பரத்திற்காக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதில் எல்லை மீறும் நபர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமுதாயம், அரசியல் சார்ந்த பல ஆக்கப்பூர்வ தகவல்கள்

சமுதாயம், அரசியல் சார்ந்த பல ஆக்கப்பூர்வ தகவல்கள்

இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள் பத்திரிகைகள் மூலமாக பலரும் சமுதாயம், அரசியல் சார்ந்த பல ஆக்கப்பூர்வ தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் சிலர் சுயவிளம்பரத்திற்கு சமூகவலைதளங்களில் எல்லைமீறும் அருவருப்பான கருத்துகள் மற்றும் அவதூறு செய்திகள் பதிவிட்டு சட்டஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றனர். சட்டம் ஒழுங்கிற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கட்சி, சாதி, மதம் சார்ந்த இருதரப்புகளுக்கு பிரச்சனைகள் தூண்டுவது, பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பதிவு, குற்ற செயல்கள் ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் பதிவுகளுக்கு காரணம் ஆனவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி

பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

மத ரீதியான அவதூறுகளுக்கு எதிரான நடவடிக்கை

மத ரீதியான அவதூறுகளுக்கு எதிரான நடவடிக்கை

தனிநபர் கணக்குகள் தனிச்சையாக முடக்குதல், மத ரீதியான அவதூறுகளுக்கு எதிரான நடவடிக்கை, பாலியல் புகார்கள் போன்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மாதத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன அவற்றில் எத்தனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்றவை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதுதொடர்பான விவகாரம் நீடித்து வரும் நிலையில் சமூகவலைதள புகார்கள் மீது மாநில காவல்துறையினர், சைபர் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
School Advise students not to use social Media
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X