நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வாட்ஸ்ஆப் ஊழல்கள்!

வாட்ஸ்ஆப் இலவசமாக வழங்கப்படும் குறுந்தகவல் செயலி என்பதால் இதில் பல்வேறு ஆபத்துக்களும் நிறைந்திருக்கின்றது. கவனமாக இல்லையெனில் நம் தகவல்களைப் பாதிப்பதோடு கருவிக்கும் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.

By Meganathan
|

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் என எவ்வித சமூக வலைத்தளத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் சாதகம் மற்றும் பாதகம் இருக்கத் தான் செய்கின்றது.

எந்நேரமும் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது இந்த ஆப் உங்களுக்குப் பாதகமானதாகவும் இருக்கலாம். இதனால் கவனமாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும். வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்யப்பட்டது முதல் பல்வேறு ஊழல் சம்பவங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன.

தொடர்ச்சியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் எனில் நீங்களும் இது குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். இங்கு அவற்றில் சில ஊழல்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்..

தள்ளுபடி

தள்ளுபடி

வாட்ஸ்ஆப் காண்டாக்களிடம் இருந்து அவ்வப்போது நமக்கு வரும் குறுந்தகவல்களில் இந்த வவுச்சரை பயன்படுத்தி ரூ.100 தள்ளுபடி பெற்றிடுங்கள் என்பதைக் குறிக்கும் தகவல்கள் அதிகம்.

"use this voucher and get Rs. 100 off" என்ற தகவல் கொண்டிருக்கும் குறுந்தகவல்களைப் புறக்கணிப்பது நல்லது. இது போன்ற லின்க்களைக் கிளிக் செய்யும் போது கருவியுடன் சேர்த்து உங்களது தகவல்களுக்கும் ஆபத்து ஆகும்.

முடிவுக்கு வரும் வாட்ஸ்ஆப்

முடிவுக்கு வரும் வாட்ஸ்ஆப்

பல காலமாக நம்மிடையே பரவி வரும் போலி தகவல் தான் இது. வாட்ஸ்ஆப் விரைவில் தனது சேவைகளை நிறுத்திக் கொள்ளும். பல காலமாக இந்தத் தகவல் பரவி வருவதால் இதனை யாரும் நம்ப வேண்டியதில்லை.

வாட்ஸ்ஆப் கோல்டு

வாட்ஸ்ஆப் கோல்டு

சில வாரங்களுக்கு முன் வாட்ஸ்ஆப்பில் பரவி வந்த தகவல் இது. ஹேக்கர்கள் தயாரித்த போலி ஆப் ஒன்றிற்கு வாட்ஸஆப் கோல்டு எனப் பெயரிட்டு அதனினை அப்டேட் செய்யக் கோரும் தகவல் பரவி வருகின்றது. இதுவும் பயனர்களை ஏமாற்றித் தகவல் பறிக்கும் வேலை தான்.

வாட்ஸ்ஆப் ஸ்பை

வாட்ஸ்ஆப் ஸ்பை

உங்களது நண்பரின் வாட்ஸ்ஆப் தகவல்களைப் பார்க்க முடியும் எனப் பல்வேறு செயலி மற்றும் தளங்கள் இணையத்தில் உலவி வருகின்றன. இவை அனைத்தும் முற்றிலும் பொய்யானவை ஆகும்.

பெரும்பாலும் இது போன்ற சேவைகளில் மால்வேர் அபாயம் இருக்கின்றது.

வாட்ஸ்ஆப் அல்ட்ரா லைட் வை-பை

வாட்ஸ்ஆப் அல்ட்ரா லைட் வை-பை

உங்களின் கருவி வாட்ஸ்ஆப் அல்ட்ரா லைட் வை-பை வசதி இருக்கின்றது. இதன் மூலம் எவ்வித இண்டர்நெட் இணைப்பும் இன்றி வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும் என்ற தகவல் பரவி
வருகின்றது. இது முற்றிலும் போலியான தகவல் ஆகும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Scams Every WhatsApp User Should Be Aware Of

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X