Home
News

அமேசானில் ChatGPT மூலம் கைவரிசை.. 5 ஸ்டார் ரேட்டிங் இப்படிதான் வருதா?

ஆன்லைனில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் பெரும்பாலான மக்கள் அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) தளங்களையே பயன்படுத்துகின்றனர். இங்கு பொருட்களை வாங்கும் முன் அந்த பொருளுக்கான ரேட்டிங் (Rating) மற்றும் ரிவ்யூ (Review) பார்த்தே வாங்குவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்படி ரேட்டிங்கையும், ரிவ்யூவையும் பார்த்து வாங்குவோருக்கு ஒரு கும்பல் சாட்ஜிபிடியை (ChatGPT) வைத்து நாமம் போட பார்த்துள்ளது. இப்போதெல்லாம் திரும்பிய பக்கம் எல்லாம் சாட்ஜிபிடி பேச்சாகவே இருக்கிறது. பள்ளி மாணவர்கள் ஹோம்வொர்க் எழுதுவது முதல் கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவர்கள் அசைன்மென்ட் (Assignment) செய்வது வரை சாட்ஜிபிடியையே பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் ஓப்பன் ஏஐ ( Open AI ) நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டதுதான் சாட்ஜிபிடி.

ChatGPT மூலம் கைவரிசை.. அமேசானில் 5 ஸ்டார் ரேட்டிங் இப்படிதான் வருதா?

இந்த சாட்ஜிபிடியின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டில் (AI Chatbot) நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது. எந்த துறையில் இருந்தும் நீங்கள் கேள்விகளை கேட்டு, டைப் செய்தால் போதும், அந்த பக்கம் யாரோ புத்திசாலி உட்கார்ந்து கொண்டு பதில் அனுப்புவது போல் உங்களுக்கு அடுத்தடுத்து தகவல் வந்து சேரும். நீங்கள் கவிதை கேட்டால் கவிதை வரும்.

ஜாவா (Java) கோடிங் கேட்டாலும் கிடைக்கும். இப்படிப்பட்ட அம்சங்களை கொண்ட சாட்ஜிபிடியை யார் வேண்டுமானலும் பயன்படுத்தலாம் என்பதால், இதை வைத்து பல திருட்டு கும்பல்கள் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. நாம் ஆன்லைனில் எந்த பொருள்களை வாங்க திட்டமிட்டாலும் அமேசான், பிளிப்கார்ட் தளங்களை மட்டுமே முதல் சாய்ஸாக எடுத்துக் கொள்வோம்.

இந்த இரண்டு தளங்களிலும் A to Z பொருள்கள் கிடைப்பதே அதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமல்லாமல், முன்னணி நிறுவனங்களின் செல்போன்கள், வீட்டு உபயோகப்பொருள்கள் மீது அதிரடி ஆஃபர்களும் இங்கு கிடைப்பதால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து வருகின்றனர். இவர்கள் பொருள்களை நேரில் பார்த்து வாங்கவில்லை என்றாலும், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது இருக்கும் நம்பிக்கையால் வாங்க முன் வருகின்றனர்.

அதேபோல இவர்களின் மற்றொரு நம்பிக்கையாக இருப்பது பொருள்களை வங்கியவர்கள் கொடுக்கும் ரேட்டிங் (Rating) மற்றும் ரிவ்யூ (Review) தான். இந்த ரேட்டிங்கிலும், ரிவ்யூவிலும் இப்போது மோசடி செய்ய ஆரம்பித்து விட்டனர். இதற்கு சாட்ஜிபிடியை பயன்படுத்தும் அளவுக்கு பிளான் பண்ணி பல பொருள்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் போட்டிருக்கின்றனர்.

குறிப்பாக, வேய்ஸ்ட் டிரிம்மர் (Waist Trimmer), 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான வொர்க் சீட் புக் உள்ளிட்ட பல பொருள்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்தது மட்டுமல்லாமல் கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியில் படித்தது போல மதிப்புரையையும் (Review) வழங்கியிருக்கிறார்கள். ஆனால், மண்டைல இருக்க கொண்டைய மறந்தது போல அந்த மதிப்புரையில் இருக்கும் As an AI Model என்னும் வார்த்தையை டெலிட் செய்யாமல் பதிவிட்டுள்ளனர்.

இதை பார்த்து சந்தேகமடைந்த பல வாடிக்கையாளர்கள் அதை பதிவிட்டவர்களிடம் கேள்வி எழுப்பி வார்த்தப்போர் நடந்தியுள்ளனர். இது தொடர்பான சாட்டிங் ஸ்கிரீன்ஷாட்டையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மக்களை எச்சரித்துள்ளனர்.

ஆகவே, அமேசான், பிளிப்கார்ட் மதிப்புரையை (Review) நன்கு ஆராய்ந்து அதன்பின் பொருள்களை வாங்க வேண்டும். நீங்கள் வாங்கும்பொருள், நல்ல கம்பெனியிடம் இருந்து விற்பனை செய்யப்பட்டால், கவலைப்பட வேண்டியதில்லை. அறியாத கம்பெனியாக இருந்தால், கவனமுடன் இருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Scammers using ChatGPT to write fake reviews on Amazon products
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X