யாரு சாமி நீங்க.. பிரபல பாடகரில் குரலை காப்பியடித்த AI.. அதிர்ச்சியில் பிரபல பாடகர்!
"என்னென்ன சொல்றான் பாருங்க, கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான்" என்பது போல நாம் எதெல்லாம் நடக்கவே நடக்காது என்று நினைக்கிறோமோ அதை செய்து காட்டி வருகிறது ஏஐ (AI). இப்போது, பிரபலங்களின் குரல்களை அச்சு அசலாக செயற்கையாக உருவாக்கி பாடல் போட தொடங்கிவிட்டது.
இதில் ஹைலைட் என்னவென்றால், சில ஸ்கேமர்கள் (Scammer) அப்படி உருவாக்கப்பட்ட பாடல்களை ஆன்லைனில் விற்பனை செய்து காசு பார்க்க தொடங்கிவிட்டனர். அப்படியொரு சம்பவம் பிரபல பாடகருக்கு நடந்துள்ளது. இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். சமீப காலமாக செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சியை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

இந்த செயற்கை நுண்ணறிவின் வருகை, உலகம் முழுவதும் தொழில்நுட்பத்துறையில் மட்டுமல்லாமல், கல்வி (Education), விவசாயம் (Agriculture), மருத்துவம் (Medical ), விளையாட்டு (Sports), சினிமா (Cinema) உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கிவிட்டது. எல்ல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தேவையென்று பெரும் முதலாளிகள் முடிவு செய்துவிட்டனர்.
தொழில்நுட்ப நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மனித வேலைகளை குறைந்து வருகிறது. இப்படி மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவை சைபர் கிரைம் (Cyber Crime) கும்பல்களும், ஸ்கேமர்களும் (Scammer) தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி விதவிதமான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
அண்மையில், சீனாவில் ஒருவர் ஏஐ மூலம் போலியான ரயில் விபத்து செய்தியை உருவாக்கி தனது வெப்சைட்டில் பதிவிட்டிருந்தார். இதை பல்லாயிரக்கணக்கான மக்கள் நம்பி தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பெரும் சர்ச்சையானது. இதோபோல அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலம் திரைக்கதை எழுதப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், பிரபல பாடகரின் சொந்த குரலை ஏஐ மூலம் போலியாக உருவாக்கி, அதை வைத்து பாடல் போட்டு பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பிரபல பாடகரும், எழுத்தாளருமான ஃபிராங்க் ஓசன் (Frank Ocean) தனக்கென கோடிக்கணக்கான பாலோயர்களை வைத்துள்ளார்.
இவரது வைட் பெர்ராரி (White Ferrari), பிங்க் அண்ட் வைட் (Pink and White) பாடல்கள் உலகம் முழுவதும் மிகப் பிரபலமானது. இவரது பாடல்களையும், அவரது குரலையும் கேட்க அவரது ரசிகர்கள் தவமாய் தவமிருந்து காத்திருப்பார்கள். இதனை பயன்படுத்திக்கொண்ட ஸ்கேமர்ஸ் கும்பலொன்று, இவரது குரலை ஏஐ மூலம் போலியாக தயார் செய்துள்ளது. அதோடு சில வரிகளை சேர்ந்து பாடலாக உருவாக்கியுள்ளது.
இதையடுத்து ஒரு மியூசிக் கம்போசரை நியமித்து அந்த பாடலுக்கு இசையையும் அமைத்து முடித்துள்ளது. இதோபோல பல டிராக்குகளை (Tracks) உருவாக்கி ஆன்லைனில் விற்பனையை தொடங்கியுள்ளது. சில டிராக்குகளுக்கு 3,000 முதல் 4,000 டாலர்கள் வரை கிடைத்துள்ளது. அப்படி மொத்தமாக 13,000 டாலர்களுக்கு அந்த போலி ஃபிராங்க் ஓசன் டிராக்குகளை ஸ்கேமர் கும்பல் விற்பனை செய்துள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் ரூபாய் பணத்தை அந்த கும்பல் பெற்றுள்ளது. இதுபோன்ற தொழில்நுட்பம் கலைஞர்களின் திறமைகளை சுக்கு நூறாக்கும் என்பதுபோல் தெரிகிறது. ஏஐ வருங்காலத்தில் கோடிக்கணக்கான மனித வேலைவாய்ப்புகளை பறிக்கும் என்று பல நாடுகளின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கைவிடுத்து வருகின்றனர். இன்னும் என்னென்ன மாற்றங்களை நாம் பார்க்கப்போகிறோம் என்பதை காலம் விரைவில் நமக்கும் சொல்லும்.


Click it and Unblock the Notifications








