Home
News

SBI அக்கவுண்ட் இருக்கா.. ஆதார் KYC பண்ணாத YONO App முடக்கமா.. உடனே பதறாதீங்க.. இதை மட்டும் தெரிஞ்சுக்கோங்க!

எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கியின் (State Bank of India) கஸ்டமர்களுக்கு ஆதார் அப்டேட் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆதார் கார்டு கேஒய்சி அப்டேட் செய்யாமல் போனால், பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படுத்தும் எஸ்பிஐ யோனோ ஆப் (SBI YONO App) முடக்கப்படுவதாக வெளியாகிய பொய்யான செய்தி குறித்த விளக்கமாக இது இருக்கிறது. இப்போது, எஸ்பிஐ பேங்க் கஸ்டமர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் கஸ்டமர்கள் மொபைல் பேங்கிங் சேவைகளை பெறுவதற்கு எஸ்பிஐ யோனோ ஆப்பை பயன்படுத்துகிறார்கள். யுபிஐ பரிவர்த்தனை (UPI Payments) மட்டுமல்லாமல், நெப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS), ஐஎம்பிஎஸ் (IMPS) போன்ற பணப்பரிவர்த்தனைகளும் இதில் செய்யப்படுகிறது.

SBI அக்கவுண்ட் இருக்கா.. ஆதார் KYC பண்ணாத YONO App முடக்கமா?

மேலும், கடன் வழங்குதல், அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட், கிரெடிட், டெபிட் கார்டு பாஸ்வேர்ட் மாற்றுதல் மற்றும் விண்ணப்பித்தல் உள்ளிட்ட சேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட எஸ்பிஐ யோனோ ஆப் ஆனது ஆதார் கேஒய்சி அப்டேட் (Aadhaar KYC Update) செய்யப்படாமல் இருந்தால் முடக்கப்பட இருப்பதாக செய்திகள் பகிரப்படுகின்றன.

இந்த ஆதார் அப்டேட்டை செய்ய ஏபிகே லிங்குகளை (APK Links) பயன்படுத்துமாறும் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட ஆப்கள் வழியாக செய்திகள் வருகின்றன. இதை உடனே நம்பி பாரத ஸ்டேட் வங்கியின் கஸ்டமர்கள் அதை கிளிக் செய்துவிட கூடாது. ஏனென்றால், இது முற்றிலும் பொய்யான செய்தியாகும். அதேபோல அந்த லிங்குகளும் போலியானவையாகும்.

இதை மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஐபி பேக்ட் செக் (PIB Fact Check) உறுதிப்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற ஏபிகே லிங்குகளை கிளிக் செய்ய கூடாது. தெரியாமல் கிளிக் செய்துவிட்டாலும், அதில் தனிப்பட்ட தகவல்கள், பேங்க் தகவல்கள், ஆதார் விவரங்களை கொடுக்கக் கூடாது என்றும் பிஐபி பேக்ட் செக் கஸ்டமர்களை கேட்டு கொண்டுள்ளது.

மேலும், பாரத ஸ்டேட் வங்கி ஆனது யோனோ ஆப் அப்டேட் செய்யவோ, கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யவோ லிங்குகளை அனுப்பாது. ஆகவே, இதுபோன்ற லிங்குகளை கிளிக் செய்வது, அந்த லிங்குகளில் இருக்கும் ஆப்களை டவுன்லோட் செய்வது உள்ளிட்டவற்றை கஸ்டமர்கள் தவிர்க்க வேண்டும். கூகுள் பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் மட்டுமே ஆப்களை டவுன்லோட் செய்ய வேண்டும்.

பேங்க் கஸ்டமர்களிடம் கேஒய்சி அப்டேட் செய்ய கோர வேண்டுமானால், பாரத ஸ்டேட் வங்கி ஆனது எஸ்பிஐ யோனோ ஆப் வழியாகவோ அல்லது அதிகாரப்பூர்வ இமெயில் வழியாக மட்டுமே தகவலை தெரிவிக்கும். இதிலும் லிங்குகள் இடம்பெறாது. எஸ்பிஐ யோனோ ஆப் வழியாக எப்படி செய்வது, வங்கி கிளைக்கு சென்று எப்படி செய்வது என்பதை மட்டுமே தெரிவிக்கும்.

ஆகவே, லிங்குகள் வழியாக கேட்கப்படும் பேங்க் தொடர்பான தகவல்கள் முற்றிலும் போலியானவையாகும். ஆகவே, அதுபோன்ற லிங்குகள் வந்தால், 1930 என்னும் சைபர் கிரைம் எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற லிங்குகளை ஷேர் செய்வதையும் தவிர்க்க வேண்டும். குழப்பம் ஏற்படும்போது, வங்கியின் கஸ்டமர் கேரை தொடர்பு கொள்ளலாம்.

இல்லையென்றால், அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது பிஐபி பேக்ட் செக் போன்ற நம்பத்தகுந்த வட்டாரங்களை அணுகலாம். ஆகவே, பாரத ஸ்டேட் வங்கியின் யோனோ ஆப் ஆதார் அப்டேட் செய்யவில்லை என்றால், முடக்கம் செய்யப்படாது. பேங்க் கஸ்டமர்கள் பதறாமல் அதை தவிர்த்துவிடுங்கள். உடனே கிளிக் செய்து உள்ளே விவரங்களை கொடுக்காதீர்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
SBI YONO App Not Be Blocked Due To Aadhaar KYC Update Do NOT Click APK File Links PIB Fact Check
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X