SBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய விதி.. இனி இது எல்லோருக்கும் கட்டாயம்.. SBI வெளியிட்ட முக்கிய செய்தி

|

எஸ்பிஐ வங்கியில் அல்லது வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கும் விதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த பெரிய செய்தி தகவலை வெளியிட்டுள்ளது. இனி SBI வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்குக் குறிப்பிட்ட சில விதிகளைப் பின்பற்றிய பின்னர் மட்டுமே பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SBI அறிவித்துள்ள இந்த புதிய விதியின் படி மக்கள் எப்படிச் செயல்படவேண்டும் என்றும், இந்த விதி எப்போதெல்லாம் செயல்பாட்டில் இருக்கும் என்பது போன்ற தகவலைத் தெளிவாகப் பார்க்கலாம்.

எஸ்பிஐ புதிய விதி என்ன சொல்கிறது?

எஸ்பிஐ புதிய விதி என்ன சொல்கிறது?

உங்களிடம் பாரத ஸ்டேட் ஆப் இந்தியா வங்கியில் (எஸ்பிஐ) சொந்தமாகக் கணக்கு இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில் எஸ்பிஐ தனது ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றம் செய்ய, சில புதிய விதிகளை அமல்படுத்தி நாட்டில் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் படி, இனி SBI வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கும் போது, நீங்கள் எந்த பிரச்சனையும் சந்திக்காமல் பாதுகாப்பாக உங்கள் பரிவர்த்தனையை மேற்கொள்ளக் கீழே கொடுப்பட்டுள்ள இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.

SBI வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையா இது?

SBI வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையா இது?

உண்மையில், SBI இன் சேவை கணக்கு அல்லது அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களும் இந்த விதி பொருந்தும். இதன் படி, இனி நீங்கள் ATM மையங்களில் இருந்து பணத்தை எடுக்கும் போது, ஒரு முறை பாஸ்வோர்ட் ஆன OTP பாதுகாப்பு எண்களைப் பயன்படுத்த வேண்டும். இந்த OTP எண்களை பயன்படுத்தினால் மட்டுமே ATM-ல் இருந்து இனி பணம் எடுக்க முடியும் என்று SBI வங்கி முடிவு செய்துள்ளது. இனி நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போதெல்லாம், OTP கட்டாயம் தேவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

OTP எண் யாருக்கு அனுப்பப்படும்? எந்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்?

OTP எண் யாருக்கு அனுப்பப்படும்? எந்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்?

இனி நீங்கள் SBI ATM மையங்களுக்கு சென்று உங்கள் கணக்கில் இருந்து பணத்தை ரொக்கமாக எடுக்க முயலும் போது, வங்கி முதலில் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP ஐ அனுப்பும். வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு மட்டும் இந்த ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட OTP எண்களை சரியாக ATM இயந்திரத்தில் உள்ளிட்ட பிறகுதான் இனி உங்களால் பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து எடுக்க முடியும்.

பாதுகாப்பு நலன் கருதி SBI வங்கி வெளியிட்ட ட்வீட் என்ன சொல்கிறது?

பாதுகாப்பு நலன் கருதி SBI வங்கி வெளியிட்ட ட்வீட் என்ன சொல்கிறது?

இந்த அதிகாரப்பூர்வ தகவலை எஸ்பிஐ வங்கி தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் ட்வீட் செய்துள்ளது. அந்த ட்வீட்டில் வங்கி, 'எஸ்பிஐ ஏடிஎம்களில் பரிவர்த்தனைகளுக்கான OTP அடிப்படையிலான பணத்தை எடுக்கும் முறையானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை பெறும் முறையானது மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசியாகும். மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதே வங்கியின் முதன்மையான பணியாகும்' என்று பதிவிட்டுள்ளது.

கெத்து காட்டும் BSNL: 425 நாட்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்! ரூ.397 விலையில் கூட நீண்டகால திட்டமா?கெத்து காட்டும் BSNL: 425 நாட்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்! ரூ.397 விலையில் கூட நீண்டகால திட்டமா?

ரூ.10,000 அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க வேண்டுமா? அப்போது இந்த விதி கட்டாயம்

ரூ.10,000 அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க வேண்டுமா? அப்போது இந்த விதி கட்டாயம்

ATM வித்ட்ரா விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இனி நீங்கள் ஏடிஎம் மையத்தில் இருந்து ரூபாய் 10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை எடுக்க முயலும் போது OTP விதிகள் கட்டாயமாகப் பொருந்தும் என்று SBI வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல், ரூ. 9,999 அல்லது அதற்கும் குறைவான தொகையை ATM மையங்களில் இருந்து பெறுவதற்கு OTP எதையும் உள்ளிட வேண்டியதில்லை என்றும் வங்கி கூறியுள்ளது.

புதிய விதி செயல்முறையை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

புதிய விதி செயல்முறையை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

  • எஸ்பிஐ ஏடிஎம்மில் 10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை எடுக்கச் செல்லும் போதெல்லாம், OTP தேவைப்படும்.
  • OTP வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மட்டுமே அனுப்பப்படும்.
  • ஒற்றை பரிவர்த்தனைக்கு மட்டுமே 4 இலக்க OTP செல்லுபடியாகும்.
  • நீங்கள் ஏடிஎம் இயந்திரத்தில் 10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை உள்ளிடும்போது, ​​​​ஏடிஎம் திரையில் OTP ஐ உள்ளிடுவதற்கான செய்தியைப் பெறுவீர்கள்.
  • பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட 4 இலக்க OTP ஐ உள்ளிட்ட பிறகுதான் தொகை உங்கள் கைகளில் கிடைக்கும்.
  • சூரியனை தொட்ட நாசா விண்கலம் எடுத்த 'வீடியோ'.. பிரபஞ்ச வரலாற்றில் நம்ப முடியாத முதல் அதிசய நிகழ்வு இது தான்..சூரியனை தொட்ட நாசா விண்கலம் எடுத்த 'வீடியோ'.. பிரபஞ்ச வரலாற்றில் நம்ப முடியாத முதல் அதிசய நிகழ்வு இது தான்..

    இது ஏன் இப்போது தேவைப்படுகிறது? ஏன் கட்டாயமாக்கப்பட்டது?

    இது ஏன் இப்போது தேவைப்படுகிறது? ஏன் கட்டாயமாக்கப்பட்டது?

    SBI வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI இந்தியாவில் 71,705 அவுட்லெட்டுகளுடன் 22,224 கிளைகள் மற்றும் 63,906 ATM மற்றும் CDM கொண்ட மிகப்பெரிய நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. இந்த SBI வங்கியின் சுமார் 91 மில்லியன் மற்றும் 20 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கியைப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இனி நீங்கள் ATM மையத்திற்குப் பணம் எடுக்கச் சென்றால் கையில் உங்கள் மொபைல் போனை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
SBI Withdrawal Rule Changed Know The New Rules Before Taking Money : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X