நெட்பேங்கிங் வசதிக்கு திடீர் ஆப்பு வைத்த வங்கி.!
வங்கியின் தனிப்பட்ட நபர்களின் வரவு செலவு மற்றும் கணக்கு விவரங்கள் குறித்து அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால், நெட்பேங்கிங் வசதியைப் பெற வேண்டும். மேலும் வங்கிக்கும் நமக்கும் எளிதாக இணைய வழியாக இர
வங்கியின் தனிப்பட்ட நபர்களின் வரவு செலவு மற்றும் கணக்கு விவரங்கள் குறித்து அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால், நெட்பேங்கிங் வசதியைப் பெற வேண்டும்.

மேலும் வங்கிக்கும் நமக்கும் எளிதாக இணைய வழியாக இருந்து வருகின்றது. பல்வேறு வங்கிகளும் இந்த வசதியை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், எஸ்பியை வங்கி மட்டும் இந்த சேவைக்கு தற்போது ஆப்பு வைத்துள்ளது.

நெட்பேங்கிங் வசதியைப் பெற:
இதற்காக சமந்தப்பட்ட வங்கி கிளைக்கு சென்று நெட்பேங்கிக் வசதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதன் மூலம் அவர்கள் ஒரு வங்கியிருந்து மற்றொருக்கு வங்கி கணக்கு பணப்பரிமாற்றம். ஸ்டேட்மெண்ட், கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டு மாற்றம் உள்ளிட்டவை செய்து கொள்ள முடியும்.

ஆன்லைனிலும் விண்ணப்பிக்க முடியும்:
சமந்தப்பட்ட வங்கியின் ஆன்லைன் முகவரியில் சென்றும் நெட்பேங்கிக் வசதியைப் பெற முடியும். இதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள வங்கி எண், மொபைல் எண் ஆகியவற்றை வங்கியின் வசதி கோரும் வலைத்தளத்தில் பதிவிட வேண்டும். பிறகு சில நாட்களுக்கு இந்த வசதி நமக்குக் கிடைத்து விடும். இது நமக்கு கூரியர் கவரிலோ அல்லது இமெயிலோ லாக்இன் ஐடி பாஸ்வேடு வரும்.

மொபைல் எண் கட்டாயம்:
இந்நிலையில், நெட் பேங்கிங் வசதியைத் தொடர்ந்து பெற மொபைல் நம்பரை வங்கிக் கணக்குடன் கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி கோரிக்கை:
இது குறித்து ஸ்டேட் வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை வங்கிக் கணக்குடன் இதுவரை இணைக்கவில்லை என்றால், வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் அதனை இணைத்துவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

பயன்படுத்த முடியாது:
இதற்குத் தவறினால், டிசம்பர் 1ஆம் தேதியுடன் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிக் வசதியைத் பயன்படுத்த முடியாது எனத் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஐ நெறிமுறை:
ரிசர்வ் வங்கி அண்மையில் அனைத்து வங்கிகளும் முறைப்படுத்தப்பட்ட நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications