SBI வாடிக்கையாளர்கள் இனி WhatsApp மூலம் பேங்கிங் விபரங்களை அறியலாம்! எப்படி தெரியுமா?

|

SBI WhatsApp Service: இப்படி ஒரு ஈஸி அக்சஸ் அம்சத்தைத் தான் SBI வங்கி வாடிக்கையாளர்கள் எல்லோரும் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர். குறிப்பாக, வாட்ஸ்அப் இல் சாட் செய்துகொண்டிருக்கும் அதே நேரத்தில், அவர்களுடைய SBI வங்கி கணக்கின் விபரங்களை நொடியில் தெரிந்துகொள்ள விரும்பிய பயனர்கள் அனைவருக்கும் இந்த செய்தி நிச்சயமாக மகிழ்ச்சியை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இனி WhatsApp மூலம் SBI வாடிக்கையாளர்கள் பேங்கிங் சேவையை பயன்படுத்தலாமா?

இனி WhatsApp மூலம் SBI வாடிக்கையாளர்கள் பேங்கிங் சேவையை பயன்படுத்தலாமா?

காரணம், இனி WhatsApp மூலம் SBI வாடிக்கையாளர்கள் சில பேங்கிங் சேவையை எளிமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இன்று அறிவித்துள்ளது. ஆம், வாட்ஸ்அப் மூலமாக வங்கி சேவையை அணுகக் கூடிய புதிய 'எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவை'யை SBI அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.

SBI வாட்ஸ்அப் பேங்கிங் சேவை அறிமுகம்

SBI வாட்ஸ்அப் பேங்கிங் சேவை அறிமுகம்

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சேவையின் மூலம் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி வாட்ஸ்அப் மூலமாக, அவர்களின் வங்கி கணக்கின் பேலன்ஸ் தொகை மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் போன்ற விபரங்களைச் சரிபார்த்துக்கொள்ளலாம். மினி-ஸ்டேட்மெண்ட்டில், கடைசி 5 பரிவர்த்தனைகளின் தகவலை வங்கி இந்த வாட்ஸ்அப் அம்சத்தின் மூலம் வழங்கும்.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

இனி மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் பேலன்ஸ் பார்க்க ATM செல்ல வேண்டாமா?

இனி மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் பேலன்ஸ் பார்க்க ATM செல்ல வேண்டாமா?

இப்போது SBI கணக்கு வைத்திருப்பவர்கள் யோனோ ஆப்ஸ் வழியாகவும் அல்லது அருகில் உள்ள ATM சென்று மினி ஸ்டேட்மெண்ட் தகவல்களைத் தெரிந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், இனி வாட்ஸ்அப் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் அவர்களின் மினி ஸ்டேட்மென்ட் தகவல்களை அறிந்துகொள்ளலாம் என்று SBI அறிவித்துள்ளது. இதைச் செய்ய, SBI கணக்கு வைத்துள்ளவர்கள் புதிய வாட்ஸ்அப் பேங்கிங் சேவைக்காகப் பதிவு செய்ய வேண்டும்.

வாட்ஸ்அப் SBI பேங்கிங் சேவையை எப்படி பதிவு செய்வது?

வாட்ஸ்அப் SBI பேங்கிங் சேவையை எப்படி பதிவு செய்வது?

இதற்கு, முதலில் எஸ்எம்எஸ் மூலம் உங்கள் ஒப்புதலை நீங்கள் வழங்க வேண்டும். நீங்கள் அதை எப்படிச் செய்து, உங்களுக்கான வாட்ஸ்அப் SBI வங்கி சேவையைத் துவங்கலாம் என்று இப்போது பார்க்கலாம். கீழே வழங்கப்பட்டுள்ள செயல்முறையைச் சரியாகப் பின்பற்றுங்கள்.

  • உங்கள் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 'WAREG A/c No என்று 917208933148 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.
  • ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?

    வாட்ஸ்அப் மெசேஜ்ஜிற்கு ரிப்ளை செய்தும் இந்த சேவையை துவங்கலாமா?

    வாட்ஸ்அப் மெசேஜ்ஜிற்கு ரிப்ளை செய்தும் இந்த சேவையை துவங்கலாமா?

    • பின்னர், நீங்கள் பதிவு செய்தவுடன் +919022690226 என்ற எண்ணுக்கு 'Hi' என்று அனுப்பவும்.
    • அல்லது வாட்ஸ்அப் இல் உங்களுக்கு வரும் மெசேஜ்ஜிற்கு ரிப்ளை செய்தும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.
    • "அன்புள்ள வாடிக்கையாளரே, நீங்கள் எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளுக்கு வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளீர்கள்" என்று வாட்ஸ்அப்பில் நீங்கள் பெற்ற மெசேஜ் இல் இருந்து ரிப்ளை செய்ய வேண்டும்.
    • உங்களுக்கு தேவைப்படும் விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்

      உங்களுக்கு தேவைப்படும் விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்

      • வாட்ஸ்அப் போட் சில விருப்பங்களைத் தேர்வு செய்ய உங்களுக்கு சாய்ஸை அனுப்பும்.
      • கீழே உள்ள விருப்பத்திலிருந்து ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
      • 1. Account Balance
      • 2. Mini Statement
      • 3. Deregister from WhatsAppBanking
      • அல்லது உங்கள் query ஐ டைப் செய்து அனுப்பலாம்.
      • எஸ்பிஐ வாட்ஸ்அப் போட் இப்போது உங்கள் விருப்பத்தின் படி, உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் அல்லது மினி ஸ்டேட்மென்ட்டைக் காண்பிக்கும்.
      • Jio 5G விலை என்ன? JioPhone 5G இன்று அறிமுகமா? RIL AGM 2022 நிகழ்வை லைவ் பார்ப்பது எப்படி?Jio 5G விலை என்ன? JioPhone 5G இன்று அறிமுகமா? RIL AGM 2022 நிகழ்வை லைவ் பார்ப்பது எப்படி?

        இனி Yono ஆப்ஸ் ஓபன் செய்யாமல் பேலன்ஸ் செக் செய்யலாமா?

        இனி Yono ஆப்ஸ் ஓபன் செய்யாமல் பேலன்ஸ் செக் செய்யலாமா?

        குறிப்பாக, வாட்ஸ்அப் சாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தேர்வுகளில் இருந்து, ஆப்ஷன் 3-ஐ தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் சேவையிலிருந்து நீங்கள் நீங்கிக்கொள்ளலாம்.

        ஒவ்வொரு முறையும் வங்கியின் Yono ஆப்ஸை ஓபன் செய்யலாம் இனி வாடிக்கையாளர்கள் எளிமையாக இந்த வாட்ஸ்அப் பேங்கிங் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
SBI WhatsApp Service Launched Today How To Register And Check Account Balance Immediately

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X