இன்ஸ்டன்ட் லோன் வாங்க போறீங்களா? அப்போ உஷாரா இருக்கனும், இல்லைனா சிக்கல் தான்.. எச்சரிக்கும் SBI..

|

படிப்படியாக வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் இந்தியா காலத்தில், இப்போதே பெரும்பாலான சேவைகள் ஆன்லைன் மூலம் கிடைக்கிறது. விவசாயம் செய்ய விதை வாங்குவதிலிருந்து, வீட்டு உபயோக பொருட்கள், உணவு பொருட்கள், மூவி டிக்கெட், ஆன்லைன் வங்கி சேவை, நமக்குத் தேவையான கடன் வசதி என்று எல்லாம் இப்போது ஆன்லைன் மூலமே நமக்குக் கிடைக்கிறது. இதில் பல நன்மைகள் இருந்தாலும், மறுபுறம் சில சிக்கலும் இருக்கிறது.

இன்ஸ்டன்ட் லோன் வாங்குபவர்களின் எண்ணிக்கை உயர்வு

இன்ஸ்டன்ட் லோன் வாங்குபவர்களின் எண்ணிக்கை உயர்வு

குறிப்பாக இப்போது, பலருக்கும் பணத் தேவை அதிகமாகிவிட்டது. கொரோன தாக்குதலுக்குப் பின் பலருக்கும் பணத்தட்டுப்பாடு இருக்கிறது. இதனால், இன்ஸ்டன்ட் லோன் வாங்குபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக உயர்ந்துள்ளது.

மொபைல் ஆப்ஸ் மூலம் இன்ஸ்டன்ட் லோன்

மொபைல் ஆப்ஸ் மூலம் இன்ஸ்டன்ட் லோன்

குறிப்பாக, மொபைல் ஆப்ஸ் மூலம் பெயர் தெரியாத சில வங்கிகள் குறைந்த ஆவணங்களை மட்டும் வாங்கிக்கொண்டு உடனே பணத்தை தருவதானால் மக்களும் இந்த இன்ஸ்டன்ட் லோனை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

கடைசி தேதி பிப்ரவரி 8: 'இதை' செய்யலான உங்கள் அக்கவுண்ட்க்கு நாங்க பொறுப்பில்லை: வாட்ஸ்அப் அதிரடி.!

இன்ஸ்டன்ட் லோன் என்ற புதைகுழி

இன்ஸ்டன்ட் லோன் என்ற புதைகுழி

மக்களின் அவசர பணத் தேவையைப் பயன்படுத்தி சில மோசக்காரர்களும், திருட்டு கும்பலும் இப்போது இன்ஸ்டன்ட் லோன் தருவதாகக் கூறி ஏமாற்றி வருகின்றனர். மக்களும் அவசரப்பட்டு இந்த புதைகுழிக்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.

SBI வெளியிட்ட எச்சரிக்கை செய்தி

SBI வெளியிட்ட எச்சரிக்கை செய்தி

இன்ஸ்டன்ட் லோன் பெயரில் நடக்கும் குற்றங்கள் நாளடைவில் அதிகரித்து வரும் காரணத்தினால், SBI வங்கி இப்போது தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் மக்களை எச்சரித்துள்ளது. இன்ஸ்டன்ட் லோன் ஆப்ஸ்களின் மோசடி அதிகரித்துள்ளது, ஆகையால் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவரைக்கப்பட்டுள்ளது.

BSNL அறிமுகம் செய்த ரூ. 398 பேக்கில் இவ்வளவு அன்லிமிடெட் நன்மையா? புதிய டேட்டா & வாய்ஸ் கால் திட்டம்..

இதை மட்டும் கிளிக் செய்யாதீர்கள்

இதை மட்டும் கிளிக் செய்யாதீர்கள்

SBI பெயரிலோ அல்லது வேறு வங்கியின் பெயரிலோ யாரும் உங்களை அழைத்து லோன் தருவதாகக் கூறி எதுவும் லிங்க்-களை உங்களுக்கு அனுப்பினால் அவற்றை கிளிக் செய்ய வேண்டாம். அதேபோல், அதிகாரப்பூர்வமற்ற தளங்களின் உங்களின் தகவல்களைப் பதிவிட வேண்டாம் என்றும் SBI எச்சரித்துள்ளது.

KYC தகவலை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்

KYC தகவலை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்

அங்கீகரிக்கப்படாத மொபைல் ஆப்ஸ் அல்லது தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்க்-களை பதிவிறக்கம் செய்து கிளிக் செய்ய வேண்டாம் என்று SBI எச்சரித்துள்ளது. அதேபோல், உங்களின் KYC தகவலையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஆப்ஸை டவுன்லோடு செய்வதற்கு முன் அதன் உண்மைத் தன்மையை நன்கு ஆராய்ந்துகொள்ளுங்கள்.

நம்பிக்கையா இதை கிளிக் செய்யலாம்

நம்பிக்கையா இதை கிளிக் செய்யலாம்

உங்கள் அனைத்து நிதித் தேவைகளுக்கும், நீங்கள் நேரடியாக https://bank.sbi என்ற SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மற்றும் Yono மொபைல் ஆப்ஸ் பயன்படுத்தலாம் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் தகவலைப் பகிர்ந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
SBI Warns About Instant Loan Mobile Apps and Fraudulent Link Scams Increased In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X