ATM-ல் பணம் எடுக்கப் போறீங்களா? இந்த 3 நாட்களுக்கு கட்டணம் இல்லை.. SBI வங்கி முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும் செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்களும் எஸ்பிஐ ஏடிஎம்களில் மேற்கொள்ளப்படும் பரிவரத்தனைகளுக்கான கட்டணங்கள் முழுமையாக ரத்து செய்யப்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது எஸ்பிஐ வங்கி தனது எகஸ் பகத்தில் வெளியிட்ட அறிவிப்பில், நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்களுக்கு வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அந்த மூன்று நாட்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வேலைநிறுத்தம் நடைபெறும் மூன்று நாட்களிலும் வாடிக்கையாளர்களுக்கான எஸ்பிஐ-ன் டிஜிட்டல் சேவைகள் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும். குறிப்பாக, ஏடிஎம், YONO செயலி, இணைய வங்கி, மொபைல் பேங்கிங் மற்றும் வாட்ஸ் ஆப் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் 24 மணி நேரமும் தடையின்றி கிடைக்கும் என வங்கி தெரிவித்துள்ளது.
அதாவது வங்கி ஊழியர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும், சாதாரண ஊழியர்களுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வங்கி ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தக் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக வரும் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
அதுவும் வேலைநிறுத்தம் நடைபெறும் மூன்று நாட்களிலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு, அந்தக் காலகட்டத்தில் ஏடிஎம் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்ய பொதுத்துறை வங்கிகள் முடிவு செய்துள்ளன.
பொதுவாக, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். பிற வங்கிகளின் ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது மாதத்திற்கு 3 பரிவர்த்தனைகள் வரை இலவசமாகப் பணம் எடுக்க அனுமதி உள்ளது. இந்த வரம்பைத் தாண்டி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் அதிகபட்சமாக ரூ.23 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம்.
ஆனால் வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் காலத்தில் இந்த கட்டணம் வசூலிக்கப்படாது. எனவே வாடிக்கையாளர்கள் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையைத் தாண்டி ஏடிஎம் மூலம் பணம் எடுத்தாலும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வந்தாலும், சில நேரங்களில் பொதுமக்களுக்கு ரொக்கப் பணம் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு,வங்கி வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் ஏடிஎம்கள் மூலம் பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படாத வகையில், அனைத்து ஏடிஎம்களிலும் போதுமான அளவு ரொக்கப் பணத்தை நிரப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கமாக ஏ.டி.எம். மையங்களில் நிரப்பப்படும் ரொக்கப் பணம் ஓரிரு நாட்களில் தீர்ந்துவிடும் நிலையில், தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படுவதால் பணம் நிரப்புவதிலும் சிக்கல் ஏற்படலாம். இதனால் செவ்வாய்க்கிழமை வரை பெரும்பாலான ஏ.டி.எம்.கள் இயங்க வாய்ப்பிருந்தாலும், புதன்கிழமை சில மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகக்கூடும். எனவே பொதுமக்கள் அத்தியாவசிய பரிவர்த்தனைகளுக்கு யு.பி.ஐ. உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்துவதுடன், அவசரத் தேவைக்காக ஓரளவு ரொக்கப் பணத்தையும் முன்கூட்டியே வைத்திருப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
