SBI வங்கில அக்கௌன்ட் இருக்கா? உடனே பேலன்ஸ் செக் பண்ணுங்க.. போலீசார் எச்சரிக்கை.. பணம் மிஸ்ஸிங்கா? புகாரிடுங்க!
தமிழகத்தில் எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank Of India) வாடிக்கையாளர்களை குறிவைத்து தினசரி பல ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருவதாக சைபர்கிரைம் போலீசார் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். HDFC, IDFC, இந்தியன் வங்கி என்று பல வங்கிகள் இந்தியாவில் செயல்பட்டு வந்தாலும், மோசடி செய்து பணத்தை திருடும் கும்பல் பெரும்பாலும் SBI வங்கி வாடிக்கையாளர்களை மட்டுமே குறிவைத்து தாக்குகிறது. இதற்கான முக்கிய காரணம், SBI வங்கி கணக்கில் அதிக பணம் இருப்பு இருக்கிறது, மற்றொருன்று இங்கு கணக்கு வைத்துள்ளவர்கள் வயதானவர்கள். இவர்களை ஏமாற்றுவது சுலபமானது.
ஆம், மோசடிக்காரர்களின் முக்கிய தாக்குதல் நபர்களே வயதானவர்கள் தான் என்கிறது கணக்கெடுப்பு. இவர்கள் ஆன்லைன் பேங்கிங் மற்றும் ஆன்லைன் வங்கி சேவைக்கு புதியவர்கள் என்பதனாலும், இவர்களுக்கு ஆன்லைன் மோசடி பற்றிய விழிப்புணர்வும் இல்லை என்பதனால் எளிதில் இவர்களை ஏமாற்ற முடிகிறது. இதன் காரணமாவே மோசடிக்காரர்கள் SBI வங்கி வாடிக்கையாளர்களை குறிவைக்கிறார்கள். தமிழகத்தில் ஆன்லைன் மோசடி மூலம் பணம் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

SBI வங்கில அக்கௌன்ட் இருக்கா? அப்போ உடனே பேலன்ஸ் செக் பண்ணுங்க மக்களே:
குறிப்பாக, சமீபத்தில் கோவை மற்றும் திருநெல்வேலி சுற்றியுள்ள எஸ்பிஐ வாடிக்கையாளர்களை குறிவைத்து பல ஆன்லைன் மோசடிகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. கோவையை சேர்ந்த ராமசாமி என்பவர், அவரது இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட்டில் இருந்து சூப்பர் ட்ரிங்க்ஸ் ஸ்டாக் டிரேடிங் (Super drinks stock trading) என்கிற வாட்ஸப் குழுவில் இணைந்திருக்கிறார். இதுவொரு பங்குசந்தை தொடர்பான குழுவாகும்.
வழக்கமான லாபத்தை விட இரட்டிப்பு லாபத்தை குறைந்த நாட்களில் எடுக்கலாம் என்ற விளம்பரத்தை நம்பி, இவர் இந்த குழுவில் இணைந்திருக்கிறார். இந்த வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்த பிறகு, பைன் (Bain) என்ற மொபைல் ஆப்ஸை பதிவிறக்கம் செய்ய கூறி, அந்த குழுவில் அறிவுரைக்கப்பட்டுள்ளது. ராமசாமியும் அந்த ஆப்ஸை டவுன்லோட் செய்து பயன்படுத்த துவங்கியுள்ளார். இதில் அவருடைய மொபைல் எண் விபரம், வங்கி கணக்கு விபரங்களை உள்ளிட்டிருக்கிறார்.
டிரேடிங் என்றாலே நாம் மூலதனமாக ஒரு தொகையை பங்கில் இன்வெஸ்ட் செய்ய வேண்டும் தானே. அப்படி, இவர் இன்வெஸ்ட் செய்த மொத்த தொகையின் மதிப்பு சுமார் ரூ. 9 லட்சத்தி 8 ஆயிரத்தி 100 ஆகும். இவர் முதலீடு செய்த தொகைக்கு லாபமாக இவர் கணக்கில் ரூ.32 லட்சம் பேலன்ஸ் இருப்பதாக காண்பித்துள்ளது. முக்கிய குறிப்பு, ரூ.32 லட்சம் பேலன்ஸ் என்று காண்பிக்கப்பட்டது பைன் ஆப்ஸில் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.
வங்கி தொடர்பான சிக்கலுக்கு அல்லது ஆன்லைன் மோசடிக்கு எங்கு புகார் அளிப்பது என்று குழப்பமா?
இவர் லாபமாக ஈட்டிய 32 லட்ச ரூபாயை எடுக்க முயன்ற போது, பணத்தை வித்ட்ரா செய்ய கூடுதல் வரி தொகைகளை செலுத்த வேண்டும் என்று காண்பித்துள்ளது. சந்தேகமடைந்த ராமசாமி, கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் நடத்தப்பட்ட விசாரணையில், ராஜஸ்தானை சேர்ந்த சத்ய நாராயண் (30), கிஷன் சௌத்ரி (20), சுனில் சரண் (23), சந்தீப் குமார் (26) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 4 செல்போன், 5 சிம் கார்டுகள், 4 பேங்க் பாஸ்புக் உட்பட 3.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இவர்களின் வங்கிக் கணக்கில் சுமார் ரூ. 3 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். நீங்களும் இதுபோன்ற சிக்கலை சந்தித்தால், உடனே 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் வழியாக புகார்களை பதிவு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








