SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.! இதை செய்யாதீங்க.! மீறினால் சிக்கல் - வங்கி எச்சரிக்கை.!

|

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய எச்சரிக்கை அலெர்ட் செய்தியை SBI வங்கி இன்று வெளியிட்டுள்ளது. SBI வாடிக்கையாளர்களைக் குறிவைத்து நடத்தப்படும் புதிய மோசடி குறித்த விபரங்களை SBI வங்கி இப்போது வெளியிட்டு, அதன் வாடிக்கையாளர்களைக் கவனமாக இருக்கும் படி எச்சரித்துள்ளது. நாட்டில் பல கோடி மக்கள் SBI கணக்கு வைத்திருப்பதனால், உடனே இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள்.

SBI வங்கி வாடிக்கையாளர்களே இதை செய்யாதீங்க.! உஷார் மக்களே.!

SBI வங்கி வாடிக்கையாளர்களே இதை செய்யாதீங்க.! உஷார் மக்களே.!

"எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு பிளாக் செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக உடனே அவர்களுடைய பான் எண்ணை அப்டேட் செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கக்கூடிய ஒரு புதிய போலியான எஸ்எம்எஸ் ஒன்று பரவி வருகிறது.

இதைப் பற்றி PIB Fact Check ட்வீட் செய்துள்ளது. எஸ்பிஐ பெயரில் வெளியிடப்பட்ட ஒரு போலி மெசேஜ் வாடிக்கையாளர்களை மோசடி வலையில் சிக்க வைக்கிறது என்பதை இது தெரிவிக்கிறது.

இப்படி ஒரு மெசேஜ் வந்தால் ரொம்ப கவனமா இருங்க.!

இப்படி ஒரு மெசேஜ் வந்தால் ரொம்ப கவனமா இருங்க.!

வேகமாக பரவி வரும் இந்த போலி மெசேஜ் இல் குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால், "அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் SBI YONO கணக்கு இன்று மூடப்பட்டது, உங்கள் சேவையை உடனே தொடர, இப்போதே உங்கள் பான் எண் விவரங்களைப் புதுப்பிக்கவும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போலி செய்தியானது இப்போது வைரலாகி வருகிறது. இதை வங்கி வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவிடம் சேட்டையை காட்டிய மஸ்க்.! Twitter Blue இந்திய விலை என்ன தெரியுமா? செஞ்சுட்டார்.!இந்தியாவிடம் சேட்டையை காட்டிய மஸ்க்.! Twitter Blue இந்திய விலை என்ன தெரியுமா? செஞ்சுட்டார்.!

இதுபோன்ற சிக்கல் எழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

இதுபோன்ற சிக்கல் எழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

பொது மக்கள் தங்கள் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களைப் பகிர்ந்து கொள்ளக் கேட்கும் மின்னஞ்சல்கள் அல்லது SMS-களுக்கு ஒருபோதும் பதிலளிக்கக் கூடாது என்று PIB இப்போது எச்சரித்துள்ளது.

மேலும், இதுபோன்ற போலி செய்திகளை report.phishing@sbi.co.in என்ற இணையதளத்தில் புகாரளிக்குமாறு PIB மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உங்களுக்கும் இதுபோன்ற மெசேஜ் எதுவும் வந்திருந்தால் உடனே புகார் அளிக்கவும்.

சைபர் கிரைம் மோசடிகளில் இருந்து தப்பிக்க SBI வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

சைபர் கிரைம் மோசடிகளில் இருந்து தப்பிக்க SBI வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

SBI இன் தகவல் படி, சைபர் கிரைம் மோசடிகளில் இருந்து தப்பிக்க மற்றும் பாதுகாப்பான வங்கி சேவையைத் தொடர, மக்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்ய கூடாது என்பதை விளக்கி சில ஆன்லைன் மோசடி எச்சரிக்கை உதவிக்குறிப்புகளை வங்கி வெளியிட்டுள்ளது.

நீங்கள் செய்ய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் இதோ.

ஆதார் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! எல்லாரும் உடனே நோட் பண்ணுங்க.!ஆதார் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! எல்லாரும் உடனே நோட் பண்ணுங்க.!

நீங்கள் கவனமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்.!

நீங்கள் கவனமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்.!

1. ஆன்லைனில் பணம் செலுத்தும் போது மட்டுமே UPI பின்னை உள்ளிட வேண்டும் என்று SBI கூறியுள்ளது.
2. போன் மூலமோ அல்லது மெசேஜ் மூலமோ யாரிடமும் உங்கள் PIN விபரங்களைப் பகிரக் கூடாது.
3. UPI பின் என்பது பணத்தை ட்ரான்ஸ்பர் செய்யும் போது மட்டுமே தேவைப்படும்.

QR ஸ்கேனர் ஏன் பாதுகாப்பானது?

QR ஸ்கேனர் ஏன் பாதுகாப்பானது?

4. உங்களுக்குப் பணம் போடுவதாகப் பொய் வார்த்தை கூறி, உங்களிடம் UPI PIN விபரங்களைக் கேட்டால் உஷார்.
5.பணம் அனுப்பும் முன் மொபைல் எண், பெயர் மற்றும் UPI ஐடி போன்றவற்றை எப்போதும் சரிபார்க்கவும்.
6. பணப் பரிமாற்றத்திற்கு எப்போதும் QR ஸ்கேனரைப் பயன்படுத்துவது சிறந்தது.

ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

இதை ஒரு போதும் செய்யாதீர்கள்.!

இதை ஒரு போதும் செய்யாதீர்கள்.!

7. பணம் செலுத்துதல் அல்லது தொழில்நுட்பச் சிக்கலுக்கு SBI ஆப்ஸின் ஹெல்ப் பிரிவைப் பயன்படுத்தவும்.
8. மேலும் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் வங்கியின் புகார்த் தீர்வு போர்டல் மூலம் தீர்வு காணவும்.
9. கூகிள் மூலமோ அல்லது நம்பிக்கை இல்லாத பிற தளங்கள் வழியாக வங்கியைத் தொடர்புகொள்ள முயற்சிக்க வேண்டாம்.

இந்த தகவலை இப்போதே மற்ற SBI வாடிக்கையாளர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
SBI users alert do not believe PAN card update fake message follow this Online banking safety tips 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X