எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் இருக்கா? UPI சேவை தற்காலிகமாக நிறுத்தம்.. எப்போது தெரியுமா?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கி ஆனது வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து புதிய சேவைகள் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பயனர்களுக்கு இந்த வாரம் யுபிஐ (UPI) மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்யும் போது தற்காலிக சிரமத்தைச் சந்திக்க நேரிடலாம். அதன்படி வங்கியில் திட்டமிடப்பட்டுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 4-ம் தேதி நள்ளிரவில் 45 நிமிடங்களுக்கு எஸ்பிஐ வங்கியின் யுபிஐ சேவைகள் தற்காலிகமாகச் செயல்படாது என்று வங்கி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குறிப்பாக செப்டம்பர் 4-ம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 00:15 மணி முதல் 01:00 மணி வரை எஸ்பிஐ வங்கியின் யுபிஐ சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும். இருப்பினும் இந்த நேரத்தில் தடையற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் யுபிஐ லைட் (UPI Lite) வசதியையோ அல்லது பிற வங்கி சேவைகளையோ பயன்படுத்துமாறு எஸ்பிஐ தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் தினசரி UPI பரிவர்த்தனை வரம்புகள்
P2P பரிவர்த்தனைகள்: நபர்களுக்கு இடையேயான UPI பரிவர்த்தனைகளை ஒரு நாளில் அதிகபட்சம் 20 முறை மேற்கொள்ளலாம்.
மொத்த தினசரி வரம்பு: P2P மற்றும் P2M (வணிகர்) பரிவர்த்தனைகள் அனைத்தையும் சேர்த்து, ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.1,00,000 வரை பரிவர்த்தனை செய்யலாம்.
காப்பீடு மற்றும் பங்குச் சந்தை: காப்பீடு மற்றும் கேப்பிட்டல் மார்க்கெட் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.2,00,000 வரை அனுமதிக்கப்படுகிறது.
IPO, வரி மற்றும் கல்வி உள்ளிட்ட கட்டணங்கள்: IPO, வரி செலுத்துதல், மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான கட்டணங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5,00,000 வரை UPI மூலம் பரிவர்த்தனை செய்யலாம்.
UPI Lite வசதி மற்றும் முக்கிய விதிமுறைகள்
சிறிய தொகை பரிவர்த்தனைகள்: குறைந்த மதிப்பிலான பணப் பரிமாற்றங்களை எளிதாக்கும் வகையில் UPI Lite வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
PIN தேவையில்லை: UPI Lite மூலம் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.1,000 வரை PIN உள்ளிடாமல் பணம் அனுப்ப முடியும்.
கணக்கு இருப்பு வரம்பு: UPI Lite கணக்கில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக ரூ.5,000 வரை பணத்தை வைத்திருக்கலாம்.
செயல்படுத்தும் முறை: BHIM SBI Pay செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள UPI Lite விருப்பத்தைத் தேர்வு செய்து பணத்தைச் சேர்ப்பதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
வட்டி கிடையாது: UPI Lite கணக்கில் வைத்திருக்கும் இருப்புத் தொகைக்கு எந்தவித வட்டியும் வழங்கப்படாது.

மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வரும் என SBI வங்கி குறிப்பிட்டுள்ளது. அந்த புதிய விதிகள் என்னவென்றால், ஏடிஎம் வழியாக மாதத்துக்கு 4 முறை இலவசமாகப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மேல் ஒவ்வொரு முறைக்கும் ரூ. 15 மற்றும் ஜிஎஸ்டி (GST) கட்டணமாக வசூலிக்கப்படும்.
குறிப்பாக ஒட்டுமொத்த எஸ்பிஐ அக்கவுண்ட் கஸ்டமர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தாது, பிஎஸ்பிடி (BSBD) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் (Basic Savings Bank Deposit) அக்கவுண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு (Digital Transactions) எந்தவித கட்டுப்பாடுகளும் எந்தவித கட்டணமும் கிடையாது.


Click it and Unblock the Notifications